Sunday, 5 June 2016

ஆன்ம விலாசம்

(In Remembrance of my disciple Ishwarya arun  who left her mortal body on 3rd june 2016 and merged with the eternal consciousness)


                                                   
  
https://nearlywes.com/2016/01/15/friday-fiction-eternity/


                                         
         சகுனங்கள் யாவும் சல்லடையின் பிடியில்
நிர்குண நிலைகள் பகடைக்கு வெளியில்
உடம்பும் உயிரும் இவ்விரு வழியே
சல்லடை சுவடில் ஊழ்வினை ஆடிட
நிற்குண ஆன்மா நிஜத்தினில் ஊறும்

உடம்பின் அசைவும் அழியத்தானே
மனமே நிலைக்கொள் ..
மனிதனின் வாழ்வும் மறையத்தானே
உடல் கட .. உடல் கட மனம் பெறும் மவுனம்
நிஜம் எனும் சிவ வெளியில் இறுதி பயணம்
உடம்பின் அழிவும் மனத்தின் நிஜமும்
வாழ்க்கை கடக்கும் ஆன்ம விலாசம்.