Monday, 29 May 2017

A Guru Disciple Journey

A Guru Disciple bond is eternal.

A Guru-Disciple bond is an intense promise which sets you free from worldly desires. A Guru, is the knower, is the light that evolves one from ignorance. 
A Guru is complete. A seeker is the receiver. Guru is the one who reaches him. 
When a seeker is ready a Guru will appear!
It is magical when such a moment arises! 

All that the seeker must do is have a genuine conviction that the Guru will reach him, not to miss the moment by having a wavering mind and keep himself alive and aware of the present. These essential qualities will make the experience blossom in a vibrant way.







For some, Guru is not only a spiritual guide but also relate with them at an emotional level to have an intense connection spiritually. 

Every seeker will have layers within themselves. They are physical, emotional, intellectual and spiritual.

Physical layer is gross but clearer as one can sense it. 
Emotional layer is where you feel from inside, where you relate with love & bonding. In a spiritual way, it is a key to axis the heart centre. 
Intellectual is where you think and validate, use it to understand facts and situations. But we see that most results and outcomes of our circumstances are beyond our logical realms. 
The spiritual level is where things happen beyond physical and mental levels. Spirituality works on karmic cycle and karmic realms which is the root of all conscious and subconscious experiences.
All these levels should be respected and worked on to enter the higher realms of spirituality. 

An initiation from a Guru is the path. Sadhana is the key.



Guru is an inspirer whose mere physical presence creates vibration in all the levels of a seeker. A seeker can be inspired by a Guru in many ways, either through a book or simply by His/Her radiant image. But, to get a consistent light on their path, to evolve further, you need a Guru substantially.

Devotion is a key to cross the mind and go beyond where one surrender to the path, to the light and allow miracles to happen. Sometimes it is difficult to understand what I say and can often be misinterpreted.

Devotion is a key to get in to the higher realms of spirituality.
Devotion is where the ’I’ ego doesn't dominate.
When you lose your ego and identity, devotion resonates.

However, someone being emotional and ignorant is totally different from being devotional.

When ‘I’ becomes, predominant there is an expectation and attachment. This doesn't resonate with the term devotion.

Where there is devotion, there is no I, there is no mind. Devotion touches the subtlest layer of a self; hence devotion is beautiful and surrender is miraculous.

For many seekers, Guru is the one who they connect at all levels.
Emotional, intellectual and spiritual.

The Guru would be their friend, mother or father.
Guru as a friend is beautiful, comfortable when the receiver is tuned right.
Where a seeker listens, questions but above all enjoys the whole process.
Guru as a mother.
One has a very high comfort level.
A mother is the one who rules the kid emotionally and guides them to the right path.
A guru at numerous instances may play the role of a Matha- mother, Pitha – father, Guru - the master and Deivam - the divine source.
Guru Disciple relationship is the purest relationship where life is taken to the real meaning. 

Guru Shows you the path to discover your purpose of your life.
Be ready 
Be Aware 
Free your mind
Connect to the universe 
Guru manifests.


குரு-சீடர் அருளின்பயணம்






குரு-சீடர் உறவு நிரந்தரமானது


குருவுக்கும் சீடருக்கும் இடையிலான உறவு என்பது,மற்ற பிணைப்புகளில் இருந்து உங்களை விடுவிக்கும் அழுத்தமான பிணைப்பு.குரு என்பவர் அறிந்தவர். வெளிச்சத்தை காட்டுபவர் .

குரு முழுமையானவர் சீடரோ பெறுபவர். ஆனால் குருவே சீடரைக் கண்டடைகிறார். வந்தடைகிறார்.சாதகர் தயார்நிலையில் இருக்கும் போது குரு தோன்றுகிறார்.அந்த விநாடி மாயத்தன்மை மிக்கது.தன் குரு தன்னை வந்தடைவர் என்னும் விழிப்புணர்வு சீடருக்கு இருப்பதே முக்கியமானது.கடந்த காலத்தையோ எதிர்காலத்தையோ எண்ணிக் கொண்டு அந்த நிகழ்கணத்தை சீடர் நழுவவிடக்கூடாது.தன்னை உயிர்ப்போடும் விழிப்போடும் வைத்திருந்து அந்த அனுபவம் அதிர்வுமிக்க மலர்தலாய் அமைய  அவர் ஆவன செய்ய வேண்டும்.

சிலரைப் பொறுத்தவரை குரு என்பவர் ஆன்மீக வழிகாட்டி மட்டுமல்ல.தங்கள் ஆன்மீகத் தொடர்பை வலுப்படுத்த வேண்டி குருவுடன் ஆழமான உணர்வுத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.எனவே ஒரு சாதகராக இருந்தாலும்,யாராக இருந்தாலும் அவருக்கென்று சில அடுக்குகள் உள்ளன. உடல் சார்ந்து ,உணர்வு சார்ந்து,அறிவு சார்ந்து ஆன்மீகம் சார்ந்து பற்பல அடுக்குகள்.உட.ல் சார்ந்தது பொருள்தனமை சார்ந்ததாயினும் அதனைத் தெளிவாகக் காண முடிகிறது.உணர்வு என்பது நீங்கள் உணரக்கூடிய அன்பு,பிணைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

ஆன்மீக அடிப்படையில் பார்த்தால் அது உங்கள் ஹிருதயஸ்தானத்திற்குத் தொடர்புடையது ஆகும்.அறிவுநிலையானது,எண்ணுவதற்கு,எடை போடுவதற்கு,உண்மைகளையும் சூழல்களையும் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.

ஆனால் தர்க்க அறிவைத் தாண்டி பற்பல விஷயங்கள் நிகழும் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். ஆன்மீகம் என்பதெ உடல் மற்றும் உணர்வு சார்ந்த எல்லைகளைக் கடந்ததுதான்.விழிப்புணர்வோடும் விழிப்புணர்வு கடந்தும் உங்களுக்குள் நிகழும் அனைத்து அனுபவங்களுக்கும் வேராகத் திகழும் கர்ம சுழற்சி மற்றும் கர்மவினை தொடர்பானவற்றை ஆன்மீகம் கையாள்கிறது.எனவே ஆன்மீகத்தின் உயர் தளங்களில் நுழைய மேற்கொள்ளப்படும் அனைத்து மார்க்கங்களுமே மதிக்கப்பட வேண்டும்.குருவின் தீக்‌ஷையே வழி !ஆத்ம சாதனையே திறவுகோல்.

ஒரு சாதகரின் அனைத்து நிலைகளிலும் ஒரு குருவின் இருப்பு அதிர்வுகளை ஏற்படுத்தும்.எனவேதான் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குருமார்கள் இருக்கின்றனர்.ஒரு குருவின் புத்தகத்தைப் படித்தோ, அவருடைய படத்தைப் பார்த்தோ ஒரு சாதகர் தொடர்பு கொடு விடமுடியும்.ஆனால் ஒரு சாதகர் வளர ஸ்தூல நிலையில் குருவின் அண்மை அவசியமாகிறது..அதன்வழி அவருடைய பாதையில் நிலையான வெளிச்சம் பரவுகிறது.



ரு குருவுடன் பற்பல நிலைகளில் உணர்வு அடிப்படையிலும் பக்தி பாவத்திலும் தொடர்பு கொள்ள முடியும்.மனம் எனும் எல்லையைக்  கடந்து சரணாகதி  பாதையில் ஒருவர் செல்ல பக்தியே திறவுகோல் ஆகும்.அதான் வெளிச்சத்தில் அற்புதங்கள் நிகழ்வதையும் அனுமதிக்க வேண்டிவரும்.இதனைப் புரிந்து கொள்வது மிகச்சிரமம். பெரும்பாலும் தவறாகவும் புரிந்து கொள்ளப் படக்கூடும்.

பக்தியே ஆன்மீகத்தின் உயர் தளங்களுக்கான பாதை. பக்தியில்தான் ஆணவம் ஆட்சி புரியாது. உங்கள் அகங்காரத்தையும் அடையாளத்தையும் இழக்கும் போது பக்தி நிகழ்கிறது.
எனவே, உனர்வு மயமாகவும் அறியாமையிலும் இருப்பவர்கள் பக்தியை வேறு விதமாகப் புரிந்து கொள்கிறார்கள்.
பக்தி இருக்கும் போது "நான்" என்பது இருப்பதில்லை.மனம் என்பது இருப்பதில்லை.உங்கள் தன்மையின் மிக சூட்சுமமான இடத்தை அது தொடுகிறது.எனவேதான் பக்தி அழகானது. சரணாகதி மகத்தானது.  

ஆத்மசாதகர்கள்  பலருக்கும் குரு என்பவரருணர்வு,அறிவு,ஆன்மீகம் என அத்தனக் தளங்களிலும் தொடர்பு கொள்பவராக இருக்கிறார். 

ஒரு குரு என்பவரால் நண்பராக இருக்க முடியும்.தாயாக இருக்க முடியும்.தந்தையாக இருக்க முடியும்.
சாதகர் சரியான முறையில் பயிற்றுவிக்கப்பட்டிருந்தால் குருவை நண்பராகக் கொள்வது அழகான,வசதியான முறையாக இருக்கும். சாத்கர் கவனிப்பார்.கேள்வி கேட்பார். எல்லாவற்றுக்கும் மேலாக அந்தமுழுப்பயணத்தை மகிழ்வாக அனுபவிப்பார்.
 குருவுடனான இருப்பு வசதியானதாக இருக்க வேண்டுமென்றால்,குருவை தாயாக உணர்கையில் அது சாத்தியம்.தாய் குழந்தையை உணர்வு ரீதியாகக் கையாண்டு சரியான பாதையில் வழிநடத்துவது போல குருவுடனான உறவு அமைகிறது.

மாதா பிதா குரு தெய்வம் என்னும் எல்லா உறவுகளும் குருவுடனான உறவில் அடக்கம்.
குரு சிஷ்ய உறவே அனைத்திலும் புனிதமான உறவு.
அங்குதான் வாழ்வுக்கு உண்மையான அர்த்தம் பிறக்கிறது

உங்கள் குரு உங்கள் வாழ்வின் உண்மையான பொருளை உணர்வதற்கான பாதையைக் காட்டுகிறார்.
தயாராக  இருங்கள். 
விழிப்புடன் இருங்கள்.
மனதை இலகுவாக்கி பிரபஞ்சத்துடன் தொடர்பில் இருங்கள்.   

குரு வெளிப்படுவார்

Friday, 26 May 2017

ஏகாந்த வாசல்


இறைவனின் சன்னிதியில் குருவின் சிவஒளியில்
மலரும் மனதின் ஏகாந்த வாசல்
ஹர ஹரஎனும் நாத விண்ணொலி.
சிவ சிவ என ஒலிக்கும் ஒங்காரம்
ஓசை ஒலியில் பிரபஞ்ச சுழற்சி
ஆடிடும் அம்பல அச்சின் சுருதி.
ஹர ஹர ஒம்
-ஸ்ரீ பாலரிஷி(26-5-17)





In the sanctum santoram of Isha
Amidst of shiva light of guru,
the doorway of
oneness blossoms.

Pranava reverberates with shiva mantra
sky chants hara mantra
The galaxy revolves in bang and sound
The Primordial chord is the axis of the external dance!
-Sri Balarishi

வாரணாஸி - சத்யம் சிவம் சுந்தரம்




நம் விருப்பங்கள் எல்லாம் நிறைவாவதில்லை
நம் தாக்கங்களும் தாகங்களும் எப்பொழுதும் நிறைவு பெறுவதில்லை என்பதை பொருட்படுத்தாது
என்னில் ஏற்படும்
முழுமையும் அமைதியும் என் வாழ்வின் வரங்கள் ! 
                                                      -ஸ்ரீ பாலரிஷி  (26-5-17)


Varanasi - Satyam Sivam Sundaram

Translation
Some of our wishes seldom Come true.
Our quests and Inspirations are often unfullfilled.
As I walk Uncaring about these,
the fulfilment and Peace descending on me are my boons.
                                                          - Sri Balarishi