ஜெபம் நிறைய செய்ய வேண்டுமென்று ஆசை. ஆனால் முடிவதில்லை.இதற்குக் காரணம் என் கர்மவினைகளா?அல்லது, என் சிரத்தை போதவில்லையா?
நீங்கள் ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடும்போது குறிப்பிட்ட நிலையில் நிறையதடைகள் ஏற்படும். ஏனென்றால் அந்தப் பாதையில் பயணம் செய்ய உங்களுக்குத்தகுதி இருக்கிறதா என்று அந்த நெறிக்குரிய தேவதை உங்களை சோதிக்கும்.அதை சோதனை என்று பலரும் உணர மாட்டார்கள். உங்களுக்கொரு சோதனைவைக்கப்படும் போதுதான் அதில் நீங்கள் இன்னும் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
உதாரணமாக, மாலை ஆறு மணிக்கு நீங்கள் ஜெபத்திற்கு அமருகிறீர்கள் என்றுவைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்திற்கு உங்களை அமரவிடாமல் சிலவேலைகள் வரும். அல்லது உங்கள் கவனம் சிதறும்படி சில விஷயங்கள்
நடக்கும்.அந்த நேரத்தில் நீங் கள் உறுதியுடன் உங்கள் பயிற்சியை செய்கிறீர்கள்என்றால் அந்தப் பாதைக்கு நீங்கள் தகுதி யானவர் என்று பொருள்.
உங்கள் பயிற்சியின் வீரியம் கூ டக்கூட,இத்தகைய சோதனைகள் குறை யத்
இது சோம்பல்தானே தவிர வேறொன்று மில்லை.
அதேநேரம் கர்மவினைதான் காரணமா என்ற கேள்வியே உங்களுக்குத்
தேவையில்லை.எல்லாவற்றுக்கும் கர்மவினை மீது பழியைப்
போட்டுவி ட்டுத் தப்பித்துக் கொள்வது எளிது.உங்களுக்குள் இருக்கும் சோம்பலுக்குக் காரணம்
போட்டுவி
கர்மவினை என்ற எண்ணம் எழுந்தால் கூடவே இன்னொன்றையும் நீங்கள்
நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் . உங்கள் ஆன்மீகத் தேடல் கூட உங்கள்கர்மவினையின் பயன்தான். எனவே இதை மனதில் வைத்துக் கொண்டுஅடுத்த படிநிலை நோக்கி நகர வேண்டும்.திட்டமிட வேண்டும். உறுதியுடன்இடைவிடாமல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆன்மீகத்தில் சிலர் சோம்பேறித்தனத்திற்கு இடம் கொடுத்து விடுவார்கள்.
"குரு இருக்கிறார்! அவர் பார்த்துக் கொள்வார்' என்ற எண்ணம் முழுமையான
சரணாகதியில் வந்தால் அதன் தன்மையே வேறு. மாறாக, குரு பார்த்துக்
கொள்வார் என்று சோம்பலின் அடிப்படையில் விட்டுவிட்டால் நீங்கள்
செய்ய வேண்டிய பயிற்சியை உங்கள் குரு செய்வார் என்று நீங்கள்
எதிர்பார்ப்பதாகப் பொருள்.குரு வுக்கோ உங்கள் இஷ்டதெய்வத்துக்கோ
உங்களை முழுமையாக அர்ப்பணித்து அவர்கள் கைகளில் ஒரு கருவியாக
ஒரு பாத்திரமாக நீங்கள் மாறினால் அதன் பெயர்தான் சரணாகதி.
நான் என்னை என் குருவிடம் ஒப்படைத்துவிட்டேன். இனி என் வேலையை
நான் பார்ப்பேன்,அவர் வேலை என்னைப் பார்த்துக் கொள்வது என்பது
சரணாகதியல்ல. அது சோம்பேறித்தனம்.
இப்போது நாம் பார்த்தவை புறத்தில் நமக்குத் தெரிகிற தடைகள்.ஆன்மீகப்
பயிற்சிக்கு இடையூறு வருவது, தள்ளிப்போட நே ர்வது என்பவை எல்லாம் புறத்தடைகள்.இது போக சாதகரின் உள்நிலையிலேயே சில தடைகள் இருக்கும்.தங்கள் எண்ணங்களின் போக்கை கூர்ந்து கவனித்து சீர்செய்து கொள்ளவேண்டும்.இல்லையென்றால் அந்தத் தடையிலேயே அந்த சாதகர் பல வருடங்கள் கூட இருப்பார்.
தன் உணர்வுகளை உற்றுப் பார்த்து,இதிலிருந்து விடுபட வேண்டுமென்னும்
தவிப்பு ஒரு சாதகருக்கு வந்து,அந்த மு யற்சிகளை அவர் மேற்கொண்டால்
அந்த இடத்தில் குருவால் உதவ முடியும்.கைகொடுத்துத் தூக் கிவிட முடியும்.
ஆனால் தடை ஏற்பட்டது கூடத் தெரியாமல் தேங் கிப் போய் விட்டால் அதிலிருந்து மீள நெடுங்காலமாகு ம். இது எப்படிப்பட்ட நிலையென்றால்,
உங்களுக்கு உருவாகியிருப்பது ஒரு தடை என்றே தெரியாது.அந்தத் தடையை
மிகவும் சௌகரியமாக உணர்வீர்கள். அப்படி உணரும்போது அதைத் தாண்டி
வரத் தோன்றாது.
உதாரணமாக காபி குடிக்கிற பழக் கத்திற்கு நீங்கள் அடிமையாகி காபி குடிக்க
மிகவும் பிடித்திருந்தால் அது ஒரு தடை என்றே உணர மாட்டீர்கள்.மிகவும்
சௌகரியமாக உணர்வீர்கள்.அங்கேயே தடைப்பட்டு நின்று விடுவீர்கள்.
தானாக ஒரு பொறி வந்து,ஓர் உந்துதல் வந்து ஒரு முயற்சி வந்து மீண்டால்
உண்டு.இது ஏறக்குறைய கோமாவில் கிடந்து மீ ள்வதைப் போலத்தான். இத்தனைநாள்என்ன செய்து கொண்டிருந்தோம் என்றே தோன்றாது.
எனவே கர்மவினை மீதுபழிபோடாதீர்கள். இப்போது நீங்கள் செய்யும் செயல் தான் பத்து வருடங்கள்கழித்து,இருபது வருடங்கள் கழித் து நீங்கள் என்னவாக ஆவீர்கள் என்பதைநிர்ணயிக்கும்.எனவே இடைவிடாமல் பயிற்சிகளை செய்வதன் மூலமும் தன்க்குள் நிகழ்வதை உற்று கவனித்து சீர்செய்து கொள்வதன் மூலமு ம் ஆன்மீகப் பாதையில்தடைகளைத் தாண் டி முன்னேறுங்கள்.
எனவே கர்மவினை மீதுபழிபோடாதீர்கள். இப்போது நீங்கள் செய்யும் செயல்
No comments:
Post a Comment