ஆன்மீகத்தின்
வெளிப்பாடு பல நேரம்
கவிதைகளாகவும் மலரும். பாலரிஷி அவர்களின் அழகிய கவிதையை இந்த வாரம் வெளியிடுவதில்
மகிழ்கிறோம்.
வேஷத்திலிருந்து ஈசனுக்கு
வேஷம் அது அப்பட்டமோ?
ஊறிய அனுபவம் வேஷத்தின் வழியே:
அது அப்பட்டமான உண்மை
அடிபடாமல்
புரிவதில்லை.
அனுபவம் பெற
நாம் உடுத்தும் உடை வேஷம்.
வேஷம் என்றறிய
வெவ்வேறு வேஷத்தில்
பொருத்திப்
பொருத்தித் தாவுகிற மனம்:
வேஷம் தொலைக்க வேஷம் இட்டு இட்டு
உண்மையைத்
தேடும் உயிர்;
இந்த வேஷத்தில் ஒரு நிஜம் இருக்கிறது.
அந்த நிஜம் அறியவே வெளிவேஷம்.
அந்த நிஜம்
புரியவே பல வேஷம்.
வேஷம் அதன் எல்லையில் நிற்க,
உந்தும் உயிர் உந்தி உந்தி
திறந்தது சிவானந்தம்
ஹர ஹர ஓம்
No comments:
Post a Comment