Thursday, 26 September 2013

DEAR ALL - அன்புடையீர்

 
Sri Balarishi was in Kashi for her Janma Nakshathra on September 23rd. In accordance with her birthday, the blog update will happen on October 1st.This is for your kind information. Await a Special post with Balarishi's blessing note and Kasi pictures...!
 
 

 
 
ஸ்ரீ பாலரிஷி அவர்களின் ஜென்ம் நட்சத்திரம் செப்டம்பர் 23
அமைந்ததையொட்டி அவர்கள் காசியாத்திரை மேற்கொண்டார்கள்.
அக்டோபர் 1ஆம்நாள் ஸ்ரீ பாலரிஷி அவர்களின் பிறந்தநாளன்று 
"குருவாரம் குருவார்த்தை " பதிவு வலைப்பூவில் இடம்பெரும்.
ஸ்ரீ பாலரிஷி அவர்களின் ஆசிச்செய்தி மற்றும் காசிப் புகைப்படங்கள் காணக் காத்திருங்கள் .!

Thursday, 19 September 2013



The Fire of  Sound!!!
(A translation of Sri Balarishi's tamil poem)

 
 
 
 
Oh! The splash of attraction that rules the Universe.
The wind that springs from Devi Uma
As the vaasi of trance spreads,
Your aggressive stroke is the
  Sparkling flame amidst my forehead..!
.


The tree that manifests sparkles and flame
As my quest for the divine nectar gears up
Is any intoxication at par to
  the spreading flame of isha vaasi..!

Shiva Shiva Shiva Shiva Shiva Shiva
Sky and Earth in the Shiva flame 
 Shiva Shiva Shiva Shiva Shiva Shiva
 The vibrations of intense fire of Shambo who rules..!


Hara Hara Hara Hara Hara Hara
The dance of Sushumna  Sambo Soham
The blow of counch enrthralls the snake
   As the world and the lotus reverberates !!!



 

குருவாரம் குருவார்த்தை​-44

 
 
நாதப்பிழம்பு
 



 
 
ஜகமாளும் வசியத்தின் வீச்சே
 
 உமையாள் நிலை ஊறும் காற்றே
 
மோனவாசி மோகமாய் படர,
 
உன் உக்ர வீச்சே என் நெற்றிப்பிழம்பு ….!

 
பிழம்பு தரு ஜோதி தரு -தரு
 என அமிர்த தாகம் போல பேதலிக்க
அட லாஹிரி வஸ்து என்ன போதை
 
   என் ஈச வாசி பிழம்பாய் படர்கையில்...!

 
சிவசிவ சிவசிவ சிவசிவ
வானம் வையகம் பிழம்பொளிக்குள்
 
 சிவசிவ சிவசிவ சிவசிவ
 
    ஜகமாளும் சாம்பனின் கனகனல் அதிர்வோ...!
 

 ஹரஹர ஹரஹர ஹரஹர
சுழுமுனை ஆட்டமாம் சம்போ ஸோஹம்
 
சங்கின் ஓசை சர்ப்பத்தில் ஒங்க
 
அதிர்ந்தது அதிர்ந்தது புவனமும் கமலமும்...!

 

Thursday, 12 September 2013

குருவாரம் குருவார்த்தை​-43


கேள்வி : ஒரு மனிதர் தனக்கென்று சில கனவுகளையும் இலட்சியங்களையும் வகுத்திருக்கிறார். முயற்சியின் மூலம் அவற்றை அடையவும் செய்கிறார். தான் அடைந்த வெற்றிகளுக்கு கடவுளுக்கோ ஆன்மீகத்திற்கோ சம்பந்தமில்லையென்று அவர் எண்ணினால் அது சரியா? இது பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?




நீங்கள் ஒரு கனவை வகுத்துக் கொண்டு வேலை பார்க்கும்போது அதில் கடவுளுக்கும் பங்கு வேண்டும் என்று எண்ண வேண்டுமா என்ன?அது உங்கள் கனவு.உங்கள் இலட்சியம்.உங்கள் கனவையும் இலட்சியத்தையும் பற்றி நீங்கள் சில கனவுகளை வளர்த்துக் கொள்கிறீர்கள்.அந்தக் கனவுகள் வலுப்பெறும்போது அந்த இலட்சியத்தை எட்ட வேண்டும் என்னும் உந்துதலும் தீவிரமாகிறது. நீங்கள் எவ்வளவு தூரம் கனவு காண்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் இலட்சியம் வலிமையடைகிறது.இந்தத் தீவிரம் பெருகப் பெருக நீங்கள் உங்கள் இலட்சியத்தை நெருங்குகிறீர்கள்.

எந்த இலட்சியமாக இருந்தாலும் நீங்கள் அதனை எட்டியே தீர வேண்டும்.இல்லையென்றால் அப்படியொரு இலட்சியத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ளாமலேயே விட்டு விடலாம்.இல்லையென்றால் அந்த இலட்சியம் உங்களை உறுத்திக் கொண்டேயிருக்கும்.அந்த உறுத்தலிலிருந்து தப்பிக்க ஒரே வழி அந்த இலட்சியத்தை எட்டிவிடுவதுதான்.

அடிப்படையில் பார்த்தால் கனவுகள் என்பவை,வலிமையும் செயல்திறனும் மிக்க கருவிகள்.நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் கனவு காணலாம்.சுவையான உணவைச் சாப்பிடுவதிலிருந்து சொந்தமாக ஒரு வீடு கட்டுவது வரை எதை வேண்டுமானாலும் நீங்கள் கனவு காணலாம்.ஒருவரை  விரும்பி திருமணம் செய்வது உங்கள் கனவாக இருக்கலாம்.அல்லது ஒரு தொழிலைத் தொடங்கி நடத்துவது உங்கள் கனவாக இருக்கலாம். எனவே உங்களுக்கென்றொரு கனவும்,அதை நோக்கிய தீவிரமான ஆர்வமும் இருந்தால் அது நல்லதுதான்சமூக அளவிலோ சிந்தனை அளவிலோ உணர்வுரீதியிலோ நீங்கள் வகுத்துக் கொண்ட கனவுக்கு நீங்கள் போதிய கவனம் செலுத்தா விட்டால் வேரெதிலும் கவனம் செலுத்த விடாமல் அந்தத் தீவிரமே உங்களை ஈர்த்து நீங்கள் அவற்றை எட்டும்படி செய்துவிடும்.

இப்போது, இதில் ஆன்மீகம் எங்கே வருகிறதென்று கேட்கிறீர்கள்.நீங்கள் அறிந்திருந்தாலும் அறியாவிட்டாலும்,ஆன்மீகம் உங்கள் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் அங்கம் வகிக்கிறது.அந்த அம்சம் உங்களுக்குள் இருக்கிறது என்பது கூட உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.ஆனால் நீங்கள் எட்ட வேண்டிய கனவுகள் குறித்தும் அடைய வேண்டிய இலட்சியங்கள் குறித்தும் இடையறாமல் உங்களுக்கு நினைவுபடுத்தி உங்களை ஊக்குவிக்கிறது.அந்த இலட்சியங்களை நீங்கள் எட்டிய பிறகு உங்களுக்குள் ஒரு வெறுமை ஏற்படுகிறது. அப்போது, இலட்சியங்கள் என்பவை வாழ்வின் ஓர் அங்கம் மட்டுமே என்ற தெளிவு உங்களுக்கு வருகிறது.உங்களுக்குள் இடையறாமல் இயங்குகிற இந்த நினைவூட்டலுக்குத்தான் ஆன்மீகம் என்று பெயர்.  

 

 

Wednesday, 11 September 2013

DREAMS & DESIRES

Dear Balarishi,
A person has a dream designed in his mind.He acts on it and reaches it.He feels God or spirituality has no role in his accomplishment. Is he right? How do you see this?





When you have a dream and work on it,why do you need God or Spirituality to have a role in it?
It is your dream and your desire. You need not expect god  to have a role in your dream.You build up imaginations about your dream or desire.If the imaginations grow strong,it becomes powerful as you have to attain it.The more you dream  it becomes more and more stronger. If this intensity increases you are nearing your dream.

But any desire has to be achieved or else you don`t have the desire at all.This is because the strong desire will intensify the urge to achieve it. it will keep on pestering you. So the best way to get relieved from the urge is,achieving it.

Basically dreams are powerful and effective techniques.Your dream could be of anything.Right from having a delicious food or building a house,you can have dreams.You can dream about loving a person and getting married.Or you can imagine of starting a business and running it successfully.So, if you have a dream and intense passion towards it, that is always good.If you do not give attention to your social or emotional or intellectual dreams,the intensity will demand the attention and make sure you accomplish it.

Now you ask where spirituality comes.Though you are unaware,spirituality is an integral part of all the happenings in your life.You may not even know that the element of spirituality exists in you.It reminds and inspires you about the goals to reach and dreams to accomplish.Once you accomplish the goals or overcome your dream you feel a vacuum inside.Now you get a clarity that the dreams and goals are just a part of your life.
THIS REMINDER SYSTEM WHICH CONSTANTLY WORKS IN YOU IS CALLED SPIRITUALITY .

Thursday, 5 September 2013

குருவாரம் குருவார்த்தை -42

 
 
 
மனிதர்கள் பலரும் மலர்களை ரசிக்கிறார்கள். பழங்களின் சுவையைப் பாராட்டுகிறார்கள்.செல்லப் பிராணிகளைக் கூடக் கொஞ்சுகிறார்கள்.ஆனால் தாவரங்களை,மரங்களை முழுமையாக நேசிப்பதில்லை.அவற்றின் பயன்களை மட்டுமே பார்க்கிறார்கள்.ஏனிந்த நிலை?

 
மனிதர்களின் உலகம் வார்த்தைகளால் ஆனது.எல்லாவற்றுக்கும் நேரடி பதில்களையும் உடனடி எதிர்வினைகளையும் அடிப்படையான உரையாடல்களையும் எதிர்நோக்கியே பழகி விட்டார்கள். ஆனால் தாவரங்களைப் பொறுத்தவரை அவற்றின்தன்மைகள் மிகவும் சூட்சுமமானவை. அவைஇசைக்கு எதிர்வினையாற்றுகின்றன. இதமான தீண்டலுக்கு எதிர்வினை ஆற்றுகின்றன.தாவரங்களிடம் நீங்கள் அன்பு காட்டினால் அவை நன்கு வளர்கின்றன.உங்கள் பரிவுக்கு தங்கள் பசுமையின் வழியாக பதில் சொல்கின்றன.ஆனால் மனிதர்கள் இந்த உண்மைகளைத் தவற விடுகிறார்கள்.

மனிதர்கள் சொல்வதை ஓரளவு புரிந்து கொள்ளும் தன்மையிலிருப்பதால் செல்லப் பிராணிகள் மனிதர்களுக்குப் பிடித்தமானவையாய் இருக்கின்றன.ஆனால் பண்டைய காலங்களில் ரிஷிகளும் முனிவர்களும் அடர்ந்த வனங்களில் தவங்கள் புரிந்தனர். சிங்கம் புலி போன்ற விலங்குகள் இருக்கும்.ஆனால் அவை  தொந்தரவு செய்யாது.ஏனெனில் அவற்ருக்கு அந்த மகான்களிடம் வெளிப்படும் நல்லதிர்வுகள் புலப்படும்.எனவே அவர்களை தாக்கியிராது.மாறாக அவர்களுக்குக் காவலிருந்திருக்கும்.ஆனால் அவற்றை வேட்டையாடலாம் என்பது போன்ற எதிர்நிலை உணர்வுகளுடன் மனிதர்கள் நுழைகிறபோது அவை தாக்குகின்றன. எனவே மனிதர்கள் அவற்றை கொடிய விலங்குகள் என்று அழைக்க முற்படுகிறார்கள்.எனவே தாவரங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மிகவும் சூட்சுமமான மனநிலை தேவை.வெறுமனே வாழ்க்கைக் கணக்குகள் நிறைந்தவர்களுக்கு அது சாத்தியமில்லை.
 
ஒருவர் மலர்களை ரசிக்கிறார் பழங்களை சுவைக்கிறார் என்றாலே, அவற்றை உருவாக்கித் தருகிற மரங்கள் எவ்வளவு புனிதமானவை என்கிற புரிதல் அவருக்கு இருக்க வேண்டும்.மாறாக மனிதர்கள் மரங்களை வெட்டுகிறார்கள்,ஆனால் மலர்களை ரசிக்கிறார்கள் என்பதே அபத்தமான முரண்.மனித மனம் சூட்சுமமான தன்மைக்கு உயர உயர மரங்கள் நேர்மறை அதிர்வுகளையும் அன்பையும் மட்டுமே வெளிப்படுத்துவதை உணர முடியும்.

Tree's do speak !

Dear Balarishi,
 
Many people are able to enjoy the beauty of a flower or the taste of a fruit. They are even able to enjoy the company of pet animals. But a plant is not loved adored or admired as a whole. They just see the beneficial parts. Why is this so?
 
 
 
 
People  are used to a world of words. They expect immediate verbal reaction evident responses to their emotions and gross level of communication. But,when it comes to plants, they are of a more subtle nature. They respond to music,they respond to touch but in a far subtler way. If you show love to a plant it is bound to grow well .It responds through its greenery. People miss this many times.

Nowadays people are comfortable with pet animals as they are graceful enough to understand human language.But in those days,Rishis and Saadhus would have done penance  in deep thick forests. Wild animals would have been there but would not have disturbed them.This is because they would have felt the subtle divine vibrations and would have guarded them instead of harming them. But today, if a person enters into a forest and comes across such animals they tend to attack.So people have labelled them as wild animals. Your thoughts, negative emotions and the threat of being hunted have all made them wild. So understanding the communication of plants is possible for a subtle mind. it is not possible for a gross,calculative mind.

If you relish the fruits and flowers a man with basic sense will see that it has come from a plant and a plant is capable of producing such things.Cutting trees and loving flowers is a very sad paradox. When a person elevates to a subtler level he will understand that the plants and trees have only love and positive things to offer.