நாதப்பிழம்பு
ஜகமாளும் வசியத்தின் வீச்சே
உமையாள் நிலை ஊறும் காற்றே
மோனவாசி மோகமாய் படர,
உன் உக்ர வீச்சே என் நெற்றிப்பிழம்பு ….!
பிழம்பு தரு ஜோதி தரு -தரு
என அமிர்த தாகம் போல பேதலிக்க
அட லாஹிரி வஸ்து என்ன போதை
என் ஈச வாசி பிழம்பாய் படர்கையில்...!
சிவசிவ சிவசிவ சிவசிவ
வானம் வையகம் பிழம்பொளிக்குள்
சிவசிவ சிவசிவ சிவசிவ
ஜகமாளும் சாம்பனின் கனகனல் அதிர்வோ...!
ஹரஹர ஹரஹர ஹரஹர
சுழுமுனை ஆட்டமாம் சம்போ ஸோஹம்
சங்கின் ஓசை சர்ப்பத்தில் ஒங்க
அதிர்ந்தது அதிர்ந்தது புவனமும் கமலமும்...!
No comments:
Post a Comment