சிவனுடன் நடனம்
சிவன் மங்கலத்தின் வடிவம்
சிவன் பிரபஞ்சத்தின் நடனம்
சிவன் அவனே பூரணம் ..
சிவன் அவனே ஆனந்தம்
மந்திரமும் கனல் பொறியும் என்னை சிவனிடம் சேர்த்த போது என் வாழ்வு நோக்கி பெருகியது திவ்ய மங்கலம்.
என்னுள் அவன் தங்க தீர்மானித்த போதும்
என்னில் உச்சாடனங்களை எழுப்பத் திருவுள்ளம் கொண்ட போதும்
உருவானது ஒரு சூனியம் .அந்த சூனியம் அழைத்து சென்ற இடம் ஆனந்தம்.
சிவம் எனும் பேரொளி ..
எனக்கு என்ன தெரியும் என்று எனக்கு தெரியாது ஆனால் எனக்கு எதுவும்
தெரியாது என்று எனக்குத் தெரியும்.
ஸ்தூல குரு இல்லாது ஆன்மீக வாழ்க்கை என்பது மிகவும் சிரமம்.
இறை வாழ்வுக்கு வந்த பின்னரும் அந்த சிரமங்கள் தொடர்ந்தன..
சந்தேகங்களில் சிரமப்பட்டேன். செல்லும் மார்க்கத்தில் சிரமப்பட்டேன்.
முடிவுகள் எடுப்பதில் சிரமபப்ட்டேன்.
என் மனதில் இருந்ததெல்லாம் சிவன் மட்டுமே.
அவனை இறுகப் பற்றுவதைத்தவிர எனக்கு வேறுவழி தெரியவில்லை.
அவனே மங்கலம்.அவனே கருணா ரூபம். அவனே அதிர்வுகளாகவும் நாதமாகவும் என்னில் இருக்கும் அன்னை.
அது பிறரைத் தூய்மை செய்ததுடன் என்னையும் பெருமளவில் தூய்மை செய்தது.ஒருவகை வாழ்விலிருந்து இன்னொருவகை வாழ்வுக்கு மாறுகையில் இருக்கும் தடங்கல்களைத் தகர்த்தது..
அவனே விளையாடுகிறான்.அவனே பெருக்கெடுக்கிறான்.
சிவனே என்னில் நடனமாடுகையில் எனக்கு வேறென்ன வேண்டுமென்று தோன்றுகிறது.
நானென்று ஏதுமில்லை. இருப்பதெல்லாம் சிவனே.
என்னில் நானே பிடிப்பிழத்தல் எவ்வளவு அற்புதமானது!
சிவனின் தெய்வீக அதிர்வில் இருப்பதே போதுமானது.
சிவனோடு நடனமாடுவதும்.இறுகப்பற்றி இருப்பதும், அவனின் நடன அதிர்வில் காணாமல் போவதுமே எனக்கு வேண்டும்
தம்தம் தம்தம் தம்தம்
அடுத்ததென்ன என்று நீங்கள் என் னைக் கேட்டால்
எனக்கு இன்றைய நிரலே என்னவென்று தெரியாதே!
நான் வெற்றிடமாய் இருக்கிறேன்.அடுத்து என்னவோ அதனைக் கொண்டு
நிரப்பப் போவதும் அவனே.
என் தெய்வீகப் பாதையின் தாளமென்ன வாத்தியமென்ன என்பதை
நிர்ணயிக்கப் போவதும் அந்த நடனகர்த்தாவே!
உங்களுக்கொரு வார்த்தை...
எல்லாமே ஓர் எதிர்பார்ப்பில்தான் நடக்கிறது.
எதிர்பார்ப்பு இருக்குமிடத்தில் இன்பமும் துன்பமும் எழுவது நிச்சயம்.
எல்லைக்குள் இருக்கையில் எல்லாமே எதிர்பார்ப்பு.
எல்லைதாண்டிச் செல்கையில் எல்லாமே வெற்றிடம்.
எல்லாமே வெளிச்ச மயம்.
குருமார்களின் கருணையோடும்
சிவனின் பேரொளியோடும்
வாழ்வை இன்னும் நன்றாய்ப் புரிந்து, செயல்களை நுட்பமாக்கி
இதயத்தின் ஆழத்திலிருந்து வரும் புன்னகையோடு வாழுங்கள்.
அன்பும் ஆசிகளும்
ஶ்ரீ பாலரிஷி
No comments:
Post a Comment