Thursday, 28 November 2013

IS IGNORANCE A BLISS?

A common belief is that one has to be blessed even to go to holy places on a pilgrimage.On the other hand,even in such holy places,there are people who cheat others and manipulate things.Similarly,there are some people near a Guru even without realizing the greatness of the Guru.Does these things mean that people though not qualified for certain things manage to achieve such heights.Are people with no integrity are also blessed?
 
 
 
 
There is a common perspective about this.Based on the good deeds a person does in this birth, the place where he will be born in next birth,the family,the life style and whatever he would gain in next life is determined.This is a normal perception.

 
If you look at this in a deeper sense,what you did fifteen to twenty years ago,reflects on your today`s life. Similarly,
what you did fifty to hundred years ago in your earlier birth also reflects in your today`s life.Had a person been spiritually cleansed and lead a life with some level of knowledge and clarity,the same level of knowledge and clarity is carried over in his next birth also.Similarly he lived his life in ignorance that same quality is carried over to his next life also.In case he did many good things,but was ignorant throughout that life,these both qualities are carried over in his next life also.

 
Now he is either born in a sacred place or in a good family due to his good deeds.But due to his ignorance,he is not even aware that he is born in such a place.His activities reflect that ignorance in a big way.even then the vibrations of that place touches him and elevates him.Even if a person is not aware of the intricacies of music,he feels some peace in listening music.This is something very similar to this person`s plight.

 
Such people might even live in a temple.They might even be with a Guru.But they might not be aware of the greatness of the Guru.Even without they being aware,they might be blessed with all kinds of fortunes.
 
 
You reap according to what you sowed knowingly or unknowingly.Similarly,whether you are able to identify what has come to you with clarity or you don`t even know such things have happened to you all depends on your receptivity and sensitivity

குருவாரம் குருவார்த்தை​-52

ஒருபுறம் பார்த்தால் புனிதத் தலங்களுக்கு யாத்திரை போகவே புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள். இன்னொரு புறம் பார்த்தால் அந்த புனிதத் தலங்களில் பலர் வியாபார நோக்கிலும் வஞ்சக நோக்கிலும் வருபவர்களை ஏமாற்றுகிறார்கள். இன்னும் சிலர் ஒரு சிறந்த குருவின் அருகே இருந்தாலும் அவரின் அருமை தெரியாமல் இருக்கிறார்கள். அப்படியென்றால் தகுதியில்லாதவர்கள் தகுதிக்கும் மீறிய பெருமைகளை அடைகிறார்களா ?
 
 
 

இது பற்றி ஒரு சிந்தனை.ஒரு பிறவியில் மனிதர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கேற்ப,அடுத்த பிறவியில் அவர்கள் பிறக்கக்கூடிய இடம்,குடும்பம்,வாழ்க்கைமுறை, போன்றவை நிர்ணயிக்கப்படுகின்றன.இது பொதுவான கண்ணோட்டம். 
 
 
பொதுவாகப் பார்த்தால் நீங்கள் இப்போது செய்கிற செயல் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் செய்த ஒரு செயல் உங்களின் இன்றைய நிலையைத் தீர்மானிக்கிறது.அதேபோல ஐம்பது அல்லது நூறாண்டுகளுக்கு முன்னர் நீங்கள் முற்பிறவியில் ஒன்றை செய்திருந்தால் இந்தப் பிறவியில் அதன் பலன்  உங்களுக்குக் கிடைக்கிறது.
 
 
ஒருவர் ஒரு பிறவியில் போதிய அள்வு ஆன்மத் தூய்மை பெற்று ஒருவகை ஞானத்துடன் இறக்கிறார் என்றால் அந்த ஞானம் அடுத்த பிறவியிலும் தொடர்கிறது. அதேபோல ஒருவர் அறியாமையில் ஒரு பிறவியைக் கழிக்கிறார் என்றால் அடுத்த பிறவியிலும் அந்த அறியாமை தொடர்கிறது.அவர் பல நல்ல காரியங்களையும் செய்து அறியாமையிலும் இருந்திருந்தார் என்றால் அடுத்த பிறவியில் இந்த இரண்டு அம்சங்களுமே அவரைப் பற்றுகின்றன. 
 
 
அடுத்த பிறவியில்நல்ல குடும்பத்தில் நல்ல சூழலில் பிறக்கிறார்.அதுபோல் புனிதமான தலங்களில் பிறக்கிறார்.அப்படி பிறந்தவர் அப்படியோர் இடத்தில் பிறந்திருக்கிறோம் என்கிற விழிப்புணர்வே இல்லாமல்  நடந்து கொள்ளலாம்.ஆனாலும் அப்படியோர் இடத்தில் பிறந்ததாலேயே அதன் பலாபலன்களுக்கும் நல்லதிர்வுகளுக்கும் அவர் பாத்திரராகிறார்.சங்கீதம் என்றால் என்னவென்றே தெரியாமல் சங்கீதம் கேட்பவர்களுக்குக் கூட அது அமைதியைத் தருகிறதல்லவா! அதுபோலத்தான் இதுவும்.
 
அத்தகைய மனிதர்கள், ஒரு கோயிலிலேயே இருக்க நேரலாம். ஒரு குருவின் அருகேயே இருந்தும் அவரின் அருமை தெரியாமல் இருக்கலாம்.அவருக்கே தெரியாமல் வாழ்வில் அவர் தேடும் வளங்களும் பெருமைகளும் அவரை வந்தடையலாம்.
 
நீங்கள் விதைத்த விதைகளுக்கேற்ப நற்பலன்கள் உங்களை வந்தடைகிறது. அந்த நற்பலன்களை தெளிவுடன் அடையாளம் காண்கிறீர்களா,அல்லது அவை வந்ததே தெரியாமல் இருக்கிறீர்களா என்பதெல்லாம் உங்களைப் பொறுத்தது 

Thursday, 21 November 2013

குருவாரம் குருவார்த்தை-51

 

ஒரு  மனிதரிடம் பழகத் தொடங்கும் முன்னால் அவரை எடை போடுகிறேன்.எடைபோட்டு அவரை கவனிக்கிறபோதுதான்,அவர் பூரணமானவர் இல்லையென்று தெரிகிறது.அப்படி இருப்பவருடன் ஏன் பழக வேண்டுமென்றும் தோன்றுகிறது.இது சரியா?
 

முழுமையான, பூரணமான இயல்புகள் கொண்ட மனிதர் என்று யாருமே இல்லை. இன்னும் சரியாகச் சொன்னால்,மனிதர்களைப் பொறுத்தவரைமுழுமையை நோக்கிய பயணம் இருக்கிறதே, அது சென்றடையும் இலக்கல்ல.சென்று கொண்டேயிருக்கும் பயணம் மட்டுமே.மனிதர்களை எடைபோடுகிறபோது அவரவர் விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தே எடைபோடுகிறார்களே தவிர மனிதர்களின் இன்றைய தன்மையை வைத்து எடைபோடுவதில்லை.
 
 
 
உதாரணமாக ஒருவர் உங்களை 15 ஆண்டுகளுக்கு முன்பு திட்டி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். இன்று அவரைப் பார்த்தாலும் உங்கள் மனதில் அதே வெறுப்பு தோன்றுகிறது.உடனே அந்த வெறுப்பின் அடிப்படையில் அவரை எடை போடுகிறீர்கள்.எந்த ஒரு மனிதருக்கும்,எந்த ஒரு சம்பவத்துக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும்.ஆனால் ஒருதலைப் பட்சமாகவே பார்க்கும் போது வெறுப்பு ,அவஸ்தை  போன்ற வேண்டாத குணங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.ஒருவரைப் புரிந்து கொள்வதற்காக அவரை எடை போடலாமே தவிர ஓர் எல்லைக்கு மேல் அந்த குணம் உதவாது.

ஆன்மீகத்திலும் எடைபோடுவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. தங்களுக்கென்று சில முன்முடிவுகளை வைத்துக் கொண்டு அந்த முன்முடிவுகளுக்கேற்ப இருக்கிறார்களா என்று எடைபோடுவார்கள். ஆன்மீகவாதியென்றால் அவர் முகம் இறுக்கமாக இருக்க வேண்டும்.அவர் கண்களில் ஒருவித கோபம் தென்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பார்கள்.இப்படி முன்முடிவுகளுடன் வருபவர்களைப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கும்.


பொதுவாக ஒரு மனிதரை எப்படி எடை போடுவீர்கள்? அவருடைய நடை உடை பாவனை,பேச்சு போன்றவற்றை வைத்து எடை போடுவீர்கள்.அவை சில அபிப்பிராயங்களை உருவாக்குமே தவிர அந்த இயல்புகள் அவர்களிடம் நிலையாய் இருக்கும் இயல்புகள் இல்லை.எனவே உங்களின் எடைபோடுதலும் அதனால் உருவாகும் அபிப்பிராயங்களும் உங்களை எவ்விதத்திலும் உண்மைக்கு நெருக்கமாகக் கொண்டு போகப் போவதில்லை
 

எனவே உங்கள் எடைபோடுதலை அடிப்படை நிலையிலேயே நிறுத்துங்கள். உங்கள் வலி,உங்கள் மனநிலை இவற்றின் அடிப்படையில் எழும் முன்முடிவுகளைக் கொண்டு மற்றவர்களை முடிவு செய்யாதீர்கள்.எந்த அளவு தீவிரமாக மற்றவர்களை எடை போடுகிறீர்களோ அந்த அளவு மற்றவர்களைப் பற்றி தவறான அபிப்பிராயங்களையே உருவாக்கிக் கொள்வீர்கள்.உங்கள் மனதை வெளிச்சூழலுக்கும் நீங்கள் எதிர்கொள்கிற மனிதர்களுக்கும் ஏற்ப திறந்த நிலையில் வைத்திருந்தால் அதன்மூலம் வாழ்க்கை உங்களுக்கு பல அற்புதமன விஷயங்களைக் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கும். மாறாக நீங்கள் எல்லாவாற்றையும் எடைபோட்டுக் கொண்டேயிருப்பது வாழ்க்கையை முழுமையாக உணர உங்களுக்குத் தடையாக இருக்கும்.

Can you Judge others?

Dear Balarishi,

Before interacting with a person, judge them.As i judge and observe,i come to know that they are not perfect.I wonder why should i develop the contact with them? Am i right?
 
 
Nobody is perfect.In fact,the human life itself is just a travel towards perfection and just a travel.People judge others on the influence of their own whims and fancies.They seldom evaluate their current mindset or maturity.
For instance,let us assume that someone scolded you 15 years back.Even if you see that person today,the same hatred raises up in you.Now,based on the hatred feel,you judge them.For any person and any incident, there will always be another side.But when you have a biased view,negative emotions like hatred and uneasiness gains momentum.So if you are going to judge someone only to get a basic understanding,it is fine.Beyond that extent,judging others will not help.
 
 
Even in spirituality,certain people come with their judgements.They have some preconceived notions about spiritual people and come to judge if they fit in to those expectations.They expect spiritual people to be with a tight face,and fiery eyes.Its really funny to watch people who come with such expectation.
 
 
Now,basically how do you judge people?By the way they dress,by the way they carry themselves and the way they converse,right?These are not their permanent qualities.They might help you to form certain opinions but they are not the authentic parameters to judge a person and will not take you anywhere closer to truth.

 
So limit all your judgements to a basic level. Don't count your pain and hatred as the means to interpret the quality of a person.To whichever extent of intensity you start judging others, to that extent you will develop wrong opinions about them.If you keep yourself open and receptive while moving with others, life will provide you wonderful opportunities to learn valuable things.On the other hand,if you keep on judging others,it would be a hindrance to experience life in its own essence
 
 

 
 
 
 
 
 
 
 
 

Thursday, 14 November 2013

Look Inward


One thing which is puzzling about many people is,they carry fears about past,present and future.Certain things which happened in the past is also troubling them.Certain things happening now is also troubling them.Their projections about future is also troubling them.Lack of clarity is the main reason for these disturbances.Once you are aware that you are trapped in such troubles you should immediately come out of it.
Otherwise you will become clueless even in things you regularly do.A kind of turbulence interrupts you in your daily routine.if you are starting something new and getting confused  it is something which we can understand.But if your regular business gets disturbed and distracted,then it is obvious that it comes from you.
The only way to come out from this disturbance is,closing your external eyes and opening your internal eye.This is where you realize the importance of spirituality even to win in materialistic life.Because,when you close your eyes and look inwards you transcend from the life style where you blindly did certain things even without being aware of it.This vision came because you closed your eyes.This exactly how great saints and seers closed their eyes in meditation and came out with solutions for the hindrances of humanity.
For instance,in ancient days,when certain diseases started spreading,saints and siddhas came out with solutions through their intuition.I am not talking just about the medicines they provided.They gave so many solutions including a total change in the lifestyle of people.Now scientists and doctors are acknowledging those solutions.
Just because certain so called individuals who are obsessed with the argumentative quality of mind, cannot grasp the power of mind,it doesn't mean that certain facts do not exist.Our ancient puranas define the planets in so many ways.They talk of a planet which is in red color,and they say  there are storms happening there and rainfall happens there.Now scientists are carrying out research to find if any living beings exist mars.
If science had not accepted this fact the puranas would be seen as mere imagination.Wherever Spirituality goes,science is bound to follow its path.So if you need any solutions,you search for them in spirituality.If you are going to wait for science to come and endorse whatever spirituality has said well in advance,it is your choice.But you must know that spirituality will not wait for your arrival.   

குருவாரம் குருவார்த்தை-50

                                                    உள்முகமாய் காணுங்கள்

மனிதர்களில் பலருக்கும் முக்காலமும் தொந்தரவு தருவதாக இருப்பதுதான் விசித்திரம்.நடந்து முடிந்த சம்பவங்களின் ஞாபகங்கள் தொந்தரவு செய்கின்றன.நடந்து கொண்டிருக்கும் நிகழ்கால விஷயங்கள் தொந்தரவு செய்கின்றன.எதிர்காலம் குறித்த அச்சங்களும் தொந்தரவு செய்கின்றன.தெளிவின்மைதான் இதற்குக் காரணம். இந்தத் தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன என்று தெரிந்தால் உடனுக்குடன் அவற்றிலிருந்து வெளிவந்து விட வேண்டும்.

இல்லையென்றால் நீங்கள் வழக்கமாக செய்து வரும் தொழிலிலும் வேலையிலும் கூட அடுத்த கட்டமாக என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போய் நிற்பீர்கள்.இங்கே உங்கள் கண்களை மறைப்பது தடுமாற்றம்தான். புதிதாக மேற்கொள்ளும் ஒரு செயலில் தடுமாற்றம் வருகிறது என்றால் அது இயல்பான விஷயம். ஆனால் எப்போதும் செய்து கொண்டிருக்கிற வேலையில் தடையும் தடுமாற்றமும் வருகிறதென்றால்,அது உள்ளே இருந்துதான் வருகிறது.

இந்தத் தடுமாற்றத்திலிருந்து வெளியே வருவதற்கு வழி,உங்கள் கண்களை மூடி அகக்கண்ணைத் திறப்பதுதான்.இங்கேதான் உலகியல் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் ஆன்மீகம் எவ்வளவு அவசியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் கண்களை மூடி உள்ளே பார்க்கிறபோது கண்மூடித் தனமாக் செயல்பட்ட நிலை மாறி விழிப்புணர்வு வருகிறது. கண்களை மூடுவதால் வருகிற விழிப்பு நிலை இது.
இப்படித்தான் முந்தைய காலங்களில் மனிதகுலத்தின் சிக்கல்களுக்கான தீர்வுகளை ஞானிகள் கண்களை மூடிக் கண்டறிந்தார்கள்.

உதாரணமாக,முந்தைய காலங்களில் மனிதர்களுக்கு பலவிதமான நோய்கள் வரத்தொடங்கிய போது சித்தர்கள் தங்கள் உள்ளுணர்வால் அந்த உபாதைகளுக்கென்று எத்தனையோ தீர்வுகளைக் கண்டறிந்தார்கள்.நான் சொல்வது மருந்துகளை மட்டுமல்ல. வாழ்க்கைமுறையில் மாற்றம் உட்பட ஏராளமான தீர்வுகளை உருவாக்கினார்கள்.அவையெல்லாம் இன்று விஞ்ஞானிகளாலும் மருத்துவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

தர்க்க அறிவை மட்டுமே வளர்த்துக் கொண்டிருக்கும் சில அறிவாளிகளால் மனதின் ஆற்றலைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதற்காகவே சில உண்மைகள் இல்லையென்று ஆகிவிடாது. புராணங்களில் கோள்கள் இப்படித்தான் இருக்கின்றன. சிவந்த நிறத்தில் ஒரு கிரகம் இருக்கிறது,அதில் புயலடிக்கிறது  என்றெல்லாம் வரும்.இவற்றை  இன்று விஞ்ஞானம் உண்மையென்று சொல்கிறது.செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உண்டா என்கிற ஆய்வே நடக்கிறது.
இதை விஞ்ஞானம் ஒப்புக் கொண்டிராவிட்டால் புராணங்கள் வெறும் கற்பனை என்று முத்திரை குத்துவார்கள். ஆன்மீகம்,மெய்ஞானம் எதையெல்லாம் நோக்கிச் செல்கிறதோ அதையெல்லாம் நோக்கி விஞ்ஞானம் வந்தே தீரும்.எனவே உங்கள் சிக்கல்களுக்கான தீர்வுகளை மெய்ஞானத்தில் தேடுங்கள். விஞ்ஞானம் வந்து சொல்லட்டும் அதுவரை காத்திருப்பேன் என்று நீங்கள் எண்ணினால் அது உங்கள் விருப்பம்.ஆனால் ஒன்று...நீங்கள் வந்து சேர்வதற்காக மெய்ஞானம் காத்திருக்காது


Thursday, 7 November 2013

குருவாரம் குருவார்த்தை​-49

சத்சங்கம் என்றால் என்ன?

சங்கம் என்றால் கூடுதல். சத்சங்கம் என்றால் நல்லெண்ண அலைகள் கொண்டவர்கள் ஒன்று கூடுதல்.எதையும் இறைநிலையில்,ஆன்மீக நிலையில் நின்று புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவுமான ஏற்பாடுதான் சத்சங்கம்.பொதுவாகப் பார்த்தால் மனிதர்கள் ஏதோ ஒருவகையில் நல்லதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.நல்லதே நடக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

வெளியே விதம்விதமான அலைவரிசைகளில் மனிதர்கள் இருந்தாலும்,சத்சங்கத்திற்குள் வந்தமரும் போது நல்லெண்ண அலைகளே பிரதானமாகின்றன.நல்லது என்றால் மங்கலம்.நல்லவை அதிகமாக ஆக,நீங்கள் மங்கலமாக இருக்கிறீர்கள்,சௌபாக்கியமாக இருக்கிறீர்கள் என்று பொருள்.
எந்த அளவுக்கு உங்களால் நல்லவற்றை செய்ய முடிகிறதோ அந்த அளவுக்கு உங்களைச் சுற்றி சௌபாக்கியம் வியாபிக்கும்.

நல்லவற்றை நோக்கி செல்கையில் சௌபாக்கியம் பெறுவது போலவே,எதிர்மறையான விஷயங்களை நோக்கிச் செல்கையில் மனிதர்கள் எதிர்மறையான அம்சங்களை உள்வாங்கிக் கொள்கிறார்கள்.

நீங்கள் மகாபாரதம்,இராமாயணம் போன்றவற்றில் பார்த்தால்,நல்லவர்கள் எல்லாம் ஒரு பக்கம் இருந்ததாகவும் தீயவர்கள் எல்லாம் இன்னொரு பக்கம் இருந்ததாகவும் வருகிறது.
எனவே எந்தப் பக்கம் போகலாம்,எந்தப் பக்கம் போகக்கூடாது என்று முடிவு செய்கிற தெளிவும் வாய்ப்பும் அன்றைக்கு இருந்தது.

ஆனால் இன்றைக்கு நல்லதும் தீயதும் மனிதர்களுக்குள்ளேயே இருக்கிறது.எல்லோரும் நல்லதையே நோக்கிப் போவதாக நினைக்கிறார்கள். ஆனால்,எப்போது உங்களுக்குள் உற்சாகம் இல்லையோ,எப்போது கோப தாபங்களும் விருப்பு வெறுப்புகளும் கூடுகின்றனவோ,அப்போதெல்லாம் எதிர்மறையாக ஏதோ உங்களுக்குள் தலைதூக்கியிருக்கிறது என்று பொருள். இவற்றை உடனடியாக சரிசெய்ய சத்சங்கம் உங்களுக்குத் துணையாக இருக்கும்.

சத்சங்கத்தில் இருக்கக்கூடிய இறையருள்,குரு சாநித்யம்,மந்திரங்கள்,நாதம், பிரார்த்தனைகள் ஆகியவை மங்கலத்தையும் சௌபாக்கியத்தையும் உங்களுக்குள் பெருகச் செய்து தீமையைப் போக்குகின்றன.வாழ்க்கையின் நல்ல அம்சங்களோடு நீங்கள் பொருந்திப் போக உங்களுக்குத் துணை செய்வதே சத்சங்கம்.   



Dear Balarishi,
Why do people need Sathsangh?

Sangh means assembly.Sath Sangh means,people with positive vibrations,assembling together.Sathsangh is a wonderful opportunity for people to perceive things  on the basis of divine grace and spirituality.Generally speaking,people seek good things in life.They move towards good thoughts and good deeds.

Though people are prone to various vibrations in worldly life,when they enter a sathsangh they are amidst positive vibrations.Positive vibrations denote prosperity.So when you are in positive vibrations and when you seek good things you are in Sowbaghya.

As people gain sowbaghya or auspiciousness by doing and being good, they acquire negativity if they move towards negative aspects.When you read Mahabharata and Ramayana you will see that these epics depict the social situations that all good people were in one side and bad people were in the other side.So people had a choice to decide on which side should they align with.

  But today,both good and bad are within oneself.People think they go towards good things in life. But whenever enthusiasm is absent in you,whenever you are in anxiety,hatred and anger it is a clear indication that something is wrong somewhere and you need to set it right.
At such situations SathSanghs will be of a great help to put you back in right track.

In a sathsangh, the presence divinity,the grace of Guru,the manthras,the naadha(The divine sound),the prayer  are all the ones which would enrich the sowbaghya  in you and also do away negativity.Sathsangh keeps you in tune with the positive and divine aspects of life.