Thursday, 31 January 2013

GANGES: PURITY AND POLLUTION

Ganges is  considered to be  holy river.But in recent days the river is polluted in so many ways . How would you define the purity of Ganges?

The spiritual energy of Ganges and its sangalpa are intact. Even if a small water spring from a mountain emerges,it will be pure and divine by its own merit as it passes through many rare herbs .The Ganges flows though the Himalayas and forests. beholds the quality of many herbs, the blessings of many Siddhas and saints and by own Ganges is a divine entity.





The pollution in Ganges happens in few areas of its journey and up to places like Rishikesh and Haridwar it  is so pure and crystal clear. There are some people  who are indifferent to nature and they fail to treat nature with due respect either due to their ignorance or selfishness. So Ganges seems to be polluted.Since many happen to be near Ganges, they take this holy river for granted. But highest tolerance prevails in nature and nature based divinity. But people still throng for a holy dip in  the Ganga throughout its path and they feel its divinity in so many ways. They are not only benefited but they also do not claim any ill effects even if Ganges is seen as a water body. Corpses float in it.Man discharges are floating in it. Still the pilgrims are not affected by it.

So the divinity of the Ganges is there for sure beyond all external pollution happening. It is also important to realize that there is a stage beyond tolerance and people raise up to refrain from polluting any elements of nature.     

குருவாரம் குருவார்த்தை-13


கங்கை மிகவும் புனிதமான நதியாக நம் மரபில் கருதப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக பலவகைகளிலும் மாசடைந்துவருகிறது.இந்நிலையில் கங்கையின் புனிதத்தை தாங்கள் எவ்விதமாக வரையறை செய்கிறீர்கள்?

      கங்கையின் தெய்வீக சக்தியும் அதன் சங்கல்பமும் அதே தீவிரத்துடன்தான் உள்ளது.சிறிய மலையொன்றில் தோன்றும் சுனைகூட பல அரிய மூலிகைகளைத் தொட்டுக் கலந்து வருவதால் தூய்மையானதாகவும் தெய்வீகம் மிக்கதாகவே திகழும். கங்கை இமயமலையையும் பல வனங்களையும் கடந்து வருகிறது. அதில் பல மூலிகைகளின் அம்சங்களும், பல சித்தர்கள் மற்றும் முனிவர்களின் ஆசிகளும் நிறைந்துள்ளன. இவற்றையெல்லாம் தாண்டி கங்கைதன் இயல்பிலேயே தெய்வீகம் மிக்கது.


    கங்கை நடக்கிற பாதையில் சில இடங்களில் கடுமையாக மாசடைந்துள்ளது. ஆனால் ரிஷிகேஷ் ஹரித்துவார்  வரையிலும் மிகவும் தூய்மையாகவும் தெளிவாகவும் உள்ளது. சில மனிதர்கள் இயற்கையிடம் நடந்து கொள்ளும் முறை மிகவும் விசித்திரமானது. அறியாமை காரணமாகவோ அல்லது தங்கள் சுயநலம் காரணமாகவோ இயற்கைக்கு உரிய மரியாதையைத் தரத் தவறிவிடுகிறார்கள். எனவே கங்கை சில இடங்களில் மாசடைந்துள்ளது. கங்கைக்கு அருகிலேயே வசிக்க நேர்வதும் வாழ நேர்வதும் ஒரு வரம் என்ற புரிதல் இல்லாவிட்டால் கங்கையை எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் என்னும் அலட்சியப்போக்கு சிலருக்குத் தோன்றலாம். இருப்பதிலேயே அதிகபட்ச சகிப்புணர்வு இயற்கைக்கும் இயற்கை சார்ந்த தெய்வீகத்திற்கும் தான் உள்ளது.
  கங்கையில் மூழ்க வேண்டும் என்ற விருப்பத்துடன் பல்லாயிரக்கணக்கானோர் தேடி வருகின்றனர். அவர்கள் அதனால் பயனடைவது மட்டுமின்றி ஒரு நீர்நிலையாக மட்டுமே கங்கையைக் கண்டு அதில் தலைமுழுகுபவர்கள் கூட எவ்வித பாதிப்புக்கும் ஆளானதில்லை. அதில் பிணங்கள் மிதக்கின்றன. கழிவுகள் மிதக்கின்றன. இந்த  வெளிநிலை மாசுகளைக் கடந்து கங்கையின் புனிதமும் தெய்வீகமும் நிலையாக உள்ளது.எனினும் இயற்கையின் சகிப்புணர்வுக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை மனிதர்கள் உணர்ந்து இயற்கையின் எந்த அம்சத்தையும் மாசுபடுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வைப்  பெறுவது அவசியம்.

Thursday, 24 January 2013

ESCAPISM AND SPIRITUALITY

Dear Balarishi,
In last week`s discussion you said escapism in spirituality is something different and you would elaborate on this. Can you throw some light on this?
There are some people who use spirituality to hide their inabilities. If they lack confidence or talent, they claim to be spiritual so that they need not take up responsibilities of their own lives. Such people get exposed soon and they fail themselves in many ways. They   are miserable and also spread misery. Such people might have some temporary satisfaction of impressing few ignorant minds.
On the other hand there are some people who are loving and selfless by their own nature. They cannot confine themselves to smaller limits. Their vision and love is universal in nature and they cannot strive for petty needs like day to day life. Such people refrain from worldly life and live for bigger reasons. They are not escapists. In fact, they stand up for a greater cause and face the realities of life.
So if someone is escaping from world to hide their own inabilities that is escapism. On the other hand, if someone discovers a bigger purpose in life and opts to stay away from petty  commitments, this should not be mistaken to be escapism.

குருவாரம் குருவார்த்தை 12

ஆன்மீகத்தில் தப்பித்தல் மனோபாவம் பற்றி பின்னர் விளக்குவதாக கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தீர்கள். அதுகுறித்து இந்தவாரம் பேசுவோமா ?

  சிலர் தங்கள் இயலாமையை மறைக்க ஆன்மீகத்தைப் பயன்படுத்துவதுண்டு. யாருக்கு தங்கள் மீதோ தங்கள் திறமைகள் மீதோ நம்பிக்கையில்லையோ அவர்கள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதற்காகவே தாங்கள் ஆன்மீகத்தில் இருப்பதாகவும் லௌகீகக் கடமைகளைக் கடந்து விட்டதாகவும் வேடம் போடுவார்கள். அவர்களின் நோக்கங்கள் விரைவில் வெளிப்பட்டுவிடும். அவர்கள் தாங்களும் துன்பப்படுவதோடு பிறருக்கும் துன்பத்தையே தருவார்கள். மூடத்தனத்தில் ஆழ்ந்திருக்கும் சிலரை நம்ப வைத்ததாய் அவர்களால் தற்காலிக சந்தோஷத்தை மட்டுமே பெற முடியும்.



அதேநேரம் சிலர் அன்புமயமானவர்களாகவும் சற்றும் சுயநலமில்லாதவர்களாகவும் இருப்பார்கள். அது அவர்களின் சுபாவமாகவே இருக்கும். அவர்களால் சிறிய எல்லைகளுக்குள் தங்களைக் குறுக்கிக் கொண்டு உலகத் தேவைகளுக்குப் போராட முடியாது. உலகளாவிய பார்வையும் பரிவும் கொண்ட அத்தகைய மனிதர்கள் சராசரி லௌகீக வாழ்விலிருந்து விலகிநின்று மகத்தான விஷயங்களுக்குத் தங்களையே அர்ப்பணித்துக் கொள்வார்கள். இவர்கள் தப்பித்தல் மனோபாவம் கொண்டவர்கள் அல்லர்.

Thursday, 17 January 2013

SPIRITUALITY AND SUCCESS

Dear Balarishi,
      There is an allegation that whoever is not competent enough to survive in this materialistic world use spirituality as a mode of escapism. How do you see this?

Spirituality is a path for higher things in life. It is unfortunate that, many think spirituality is just a tool to see that their prayers come true or a way to attain certain siddhis. They seldom realize that spirituality is a path and tool for greater aspirations and clarity.    



  In materialistic life, there are people with a spiritual insight and there are people who have only materialistic outlook. Those who are with a spiritual insight are clear about what they do and they take firm decisions. But many people who have only a materialistic outlook, often take the wrong path. They feel so insecure that they opt for any crooked means to win a deal. They see jealousy, vengeance and anxiety as the part of the game and succumb to their own limitations. They cannot take even a small setback and it's unfortunate that they assume these to be the normal traits in running their business successfully.

Such people cannot understand the calm and composed manner of the people with spiritual insight. They have no idea how someone can handle failures with calmness and clarity. So they misconceive that people with spiritual insight are not competent enough. The fact is spirituality gives people the strength to stay away from negative feelings like jealousy or vengeance. They have the right attitude towards their business and progress patiently in whatever they do. They succeed with full satisfaction. So whoever has spirituality as their tool can always exhibit balance in their thoughts and emotions .Escapism is something totally different. We shall discuss about this later.

குருவாரம் குருவார்த்தை-11


பொருளாதார  உலகில்  யாருக்கெல்லாம்  போட்டி  போட முடியவில்லையோ    அவர்களெல்லாம்     தப்பித்தலுக்காக ஆன்மீகத்தைப் பயன்படுத்துகிறார்கள்  என்றொரு குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து  தங்கள்  கருத்து ? 

ஆன்மீகம் என்பது உயர்ந்த இலட்சியங்களுக்கான பாதை.பொதுவாக ஆன்மீகம் என்பது பிரார்த்தனைகள் பலிப்பதற்கும் சில சித்திகளைப் பெறுவதற்கும்தான்  என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆன்மீகம் என்பது உயர்ந்த இலட்சியங்களுக்காகவும் தெளிவுக்காகவும் என்பதையே பலரும் உணர்வதில்லை.
பொருளாதாரத் தேடலில் உள்ளவர்களில் ஆன்மீகப் பார்வை உள்ளவர்களும் உண்டு. ஆன்மீக சார்பு இல்லாதவர்களும் உண்டு. ஆன்மீகப் பார்வயுள்ளவர்கள் உலகியல் நிலையிலும் தெளிவாக சிந்திப்பார்கள். தீர்க்கமான முடிவுகளை எடுப்பார்கள். ஆனால் ஆன்மீக சார்பு இல்லாத பலர் உலகியல் வாழ்வில் நேர்மையில்லாமலும் வஞ்சனையோடும் பழிவாங்கும் குணத்தோடும் நடந்து கொள்வார்கள். தோல்வி வந்தால் பதறிப் போவார்கள்.துரதிருஷ்டவசமாக,இவையெல்லாம்தான் உலகியல் வாழ்வுக்கும் பொருளாதார வெற்றிக்குமான தகுதிகள் என்று சிலர் கருதுகிறார்கள். இவர்களால் ஆன்மிகப் பார்வை உள்ளவர்களின் தெளிவையும் நிதானத்தையும் தோல்வியில் கலங்காத மனப்பான்மையையும் புரிந்து கொள்ள முடிவதில்லை.எனவே அவர்கள் ஆன்மீகத்தைக் கருவியாகக் கொண்டவர்களால் போட்டி போட முடியாதென்று தவறாக எண்ணுகிறார்கள்.
பழிவாங்கும் உணர்வோ பதட்டமோ இல்லாமல்,தோல்வியில் கலங்கும் எண்ணமோ இல்லாத பக்குவம் ஆன்மீகத்தின் பலம். அவர்களால் நிதானமாக எதையும் அணுக முடியும்.எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் பொறாமை உணர்வே இல்லாமல்,போட்டிகள் நிறைந்த உலகில் பொறுமையாகவும் மகிழ்ச்சியாகவும் அவர்கள் தங்கள் தொழிலில் ஈடுபட்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே ஆன்மீகத்தைக் கருவியாகக் கொண்டவர்களுக்கு எண்ணங்களிலும் உணர்ச்சியிலும் சமநிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும்.தப்பித்தல் மனோபாவம் என்பது முற்றிலும் வேறோர் அம்சம்த்தைச் சார்ந்தது.அதுகுறித்து பின்னர் விரிவாகப் பேசுவோம்.

Thursday, 10 January 2013

குருவாரம் குருவார்த்தை-10

  Image Crossroads (C) by www.martin-liebermann.de

தாய்நிலம் தந்தவரம் தாவரம் என்கிறார்கள். ஆனால் சில மரங்கள் தீய சக்திகளின் இருப்பிடங்களாகக் கருதப்படுகின்றன. மனிதர்களைப் போலவே மரங்களிலும் நல்லவை கெட்டவை என்னும் பாகுபாடுகள் உண்டா?

மரங்களைப் பொறுத்தவரை அவற்றின் தாவரவியல் தன்மையையும் தாண்டி சில குணாதிசயங்கள் இருக்கும். சில மரங்கள் ஆன்மீகத் தன்மை கொண்டவையாக இருக்கும். சில மரங்கள் வெறும் தாவரங்களாக இருக்கும். ஒருசில மரங்கள் தீய சக்திகளை ஈர்க்கும் தன்மை கொண்டவையாக இருக்கலாம். இதைப் பொதுவாகப் பார்த்தால்ஆன்மீகத் தன்மை கொண்ட மரங்களுக்கருகே தீய அதிர்வுகளை ஈர்க்கிற மரங்கள் இருக்காது. மரங்களில் அவற்றுக்கான அதிர்வலைகள் போலவே மற்ற சக்திகளை ஈர்க்கிற அம்சமும் உண்டு. ஒரு தாவரம் தன்னுடைய சக்திநிலைக்கு ஒத்த அதிர்வுகளை ஈர்க்கின்றது.


உதாரணமாகவேப்பமரத்தைப் பொறுத்தவரைஅதில் அம்பாளின் சக்திநிலை உள்ளது. அம்பாளுக்குரிய மந்திரங்களைச் சொன்னால் அதன் அதிர்வுகளை வேப்பமரம் ஈர்க்கும். ஏனெனில் மந்திரங்களின் அதிர்வலைகளும் வேப்பமரத்தின் சக்திநிலையும் ஒன்று.  அதேபோல புத்தர் போதிமரத்தின் கீழ் ஞானமடைந்தார் என்பது எதேச்சையான நிகழ்வல்ல. நீண்ட நெடுங்காலம் தவம் செய்த ஒருவர் ஞானோதயம் அடைய உறுதுணையான அதிர்வுகள் போதியில் இருப்பதாகவே பொருள்.


நேர்மறை போலவே எதிர்மறையும் இருக்கும். நல்லவற்றை ஏற்பது போலவே தீயதை ஏற்கும் தன்மையும் சில தாவரங்களில் இருக்கும். இதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்று தெரிந்து வைத்துக் கொண்டாலே போதுமானது. மரங்களின் பாஷைகளைப் புரிந்து கொள்வதும்அவை என்ன சொல்கின்றன என்று அறிந்து கொள்வதும் அற்புதமான விஷயங்கள் !

THE LANGUAGE OF TREES

It is normally said that trees are the boons by mother earth. It is also said certain trees are capable of extending negative energies too. As in human, do we have good and bad among trees also?

 Apart from the botanical aspects, a tree also has certain natural tendencies. Certain trees have a kind of spiritual quality. Certain trees are just trees. Few more species might have the tendency to attract negative energies. Broadly speaking, trees which attract negative energies will not grow near the trees which are very positive and spiritual in terms of vibrations. Apart from their own vibrations, trees also have the quality of attracting certain qualities which suits their nature.

For instance, neem is a very positive species and spiritually it is connected to the qualities of Ambaal. It can observe the vibrations of Devi Mantra as their energy levels are the same.

Similarly, when it is said Buddha attained enlightment under the Bodhi tree, it is not incidental. If a person also has been in thapas for a very long time attains enlightment under a certain tree, it clearly indicates that particular tree has something special in it. As certain trees have positive and spiritual qualities, there are certain trees with negative vibrations too. They attract certain negative energies. It is enough to know that it is possible. It is always wonderful to know the language of the trees and to understand what they say.


Thursday, 3 January 2013

குருவாரம் குருவார்த்தை-9




நமக்கு நன்மை தரக்கூடிய புதிய பழக்கங்கள் எதையாவது மேற்கொள்ள நினைக்கிறோம்.காலை நடைப்பழக்கத்திலிருந்து யோகா வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தொடங்குகையில் உற்சாகமாகத் தொடங்கினாலும் நாட்கள் செல்லச் செல்லதொடர்ந்து செய்ய்ய முடிவதில்லை. எங்களையும் அறியாமல் அந்தப் பழக்கம் கைவிட்டுப் போவதை வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்நிலையை எப்படி மாற்றுவது?

உங்கள் வாழ்வின் போக்கை இரண்டு அம்சங்கள் வடிவமைக்கின்றன.ஒன்று உங்கள் சம்ஸ்காரங்கள்.மற்றொன்று உங்கள் வாசனைகள். இரண்டும் ஒன்று போலத் தோன்றினாலும் இரண்டுக்குமிடையே சில நுட்பமான வேறுபாடுகள் உண்டு. நீங்கள் சிந்திக்கிற விதம்,உங்களுக்குள் உறுதியாகப் படிந்திருக்கும் சில உந்துதல்கள் எல்லாம் சம்ஸ்காரங்கள்.

சிறிது இடைவெளி விட்டாலும் மீண்டும் உங்களுக்கு மிக எளிதில் கைவருகிற திறமைகள்ஈடுபாடுகள்,புதுப்பிக்கப்படும் உறவுகள் எல்லாம் முந்தைய வாசனைகளின் அடிப்படையில் விளைபவை. இவற்றின் பாதிப்பால் உங்களுக்குள் ஆழமாகப் படிந்துவிட்ட சில வாழ்க்கை முறைகளும் சில எண்ணங்களின் போக்குகளும் நீங்கள் மேற்கொள்ள விரும்புகிற சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்கும்.இதற்கு ஆழமான புரிதலும் அக்கறை மிகுந்த செயல்பாடும் அவசியம்.

இதைத் தாண்டிவர வேண்டுமென்றால் இத்தகைய கர்மவினைகளின் கட்டமைப்பு பற்றி உங்களுக்கு ஆழமான புரிதல் இருப்பதுடன்,முழு விழிப்புணர்வுடன் வேண்டாத பழக்கத்தை மாற்றுவதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

வைராக்கியம்,சிரத்தை இரண்டையும் தாண்டிய தீவிரத்துடன் நீங்கள் இதில் ஈடுபட வேண்டும்.உதாரணமாகமதியம் தூங்குகிற வழக்கத்தை மாற்ற
விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு தகுந்த மாற்று என்னவென்று சரியாகக் கண்டறிந்து அதில் ஈடுபடுவதன் மூலம் மதியம் உறங்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும். அந்த நேரத்தில் ஒரு புத்தகம் படிக்கலாம் என்று நீங்கள் தொடங்கினால் மூளை களைப்படைந்து தூங்கி விடுவீர்கள்.

சிலர் காலை நான்கு மணிக்கு தியானம் செய்யலாம் என்று தொடங்கி பத்து நிமிடங்களில் தூங்கி விடுவார்கள். அவர்களுக்கு தியானம் வராதென்று பொருளல்ல. யோகாவிலோ உடற்பயிற்சியிலோ நாளைத் தொடங்கி பிறகு தியானத்தில் அமரவேண்டும்.

நீங்கள் எதையாவது புதிதாகத் துவங்க முற்படும்போது  உங்கள் உள்நிலையிலேயே அதற்கான தடைகள் வருகிறதென்றால், பல வருடங்களாகவோ பல பிறவிகளாகவோ குறிப்பிட்ட வாழ்க்கைமுறை உங்களுக்குள் படிந்து விட்டதாகப் பொருள். இதை உங்கள் விழிப்புணர்வில் கொண்டுவந்து முழு ஈடுபாட்டுடன் மாற்று நடவடிக்கை ஒன்றினைத் தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் அந்தத் தடைகளை நீங்கள் தாண்டிவர முடியும்.


WHEN EFFORTS FAIL..


Dear Balarishi,
We often try to cultivate a new beneficial habit. It may be a  regular morning walk or morning yoga. We start with all enthusiasm but as days pass by the commitment withers away and we helplessly watch our inability to cope up with our own commitment. How do we overcome this?

Your life pattern is mostly sculptured by two things. One is your Samskaara. The other one is your Vaasana. They seems to be the same but they do have a subtle difference. Your thought pattern and stubborn instincts are mostly out of your samskaara. If you regain or rebuild certain interests, talents or relationships again after an interval it is because of your vaasana. You would have been a good singer in the previous birth. If it comes naturally to you in this birth, it is due to your vaasana. These two factors contribute to certain thought patterns and life patterns which are rigid enough to interrupt any reforms you bring in.

To overcome this you need a deep understanding of this karmic back up and with total awareness you need to replace an old habit. For this it takes lots of analysis and action. This is something more than vairaagya and shradhha. For example if you cannot go about without an afternoon nap and if you want to overcome this, you must know the right alternate to break that habit for instance you cannot try reading a book at that time as it will make you apply your mind more and chances are there for you to fall asleep.

Some would try to start meditation at four am and would fall asleep. It doesn't mean they cannot meditate. Instead, they should start with yoga, do some physical exercise and then settle down to meditation.



Whenever you start something new, if there is some resistance in your inner system, just realise it is because of a certain life pattern which you have got used for years together or may be for lifetimes together. Stay aware and bring in an alternate activity with enough commitment and you will be able to replace the old habits with the new life style.