Thursday, 28 February 2013

FEMINITY AND DIVINITY

Dear Balarishi
Some say women are not entitled for sannyas. Some say there is no mukthi for women. How do you see this?
Women are seen as Sakthi.The word Shiva denotes both Shiva and Sakthi because without Sakthi Shiva becomes sava.Whereas with Sakthi,Sava becomes complete and is also known as auspiciousness(mangalam).Shiva is the masculine energy and Sakthi is the feminine energy.The togetherness of these two energies is known as the ultimate fulfillment(pooranam).
The very word Sakthi denotes energy.If we give a physical form to energy,that would be a woman.This is precisely why a woman is capable of producing intense energy,either negative or positive.



Let us contemplate on the positive energy alone.A woman gives birth to child.Generally,motherliness is a feeling.As you can feel happy you can also feel motherly.Even men can feel motherly and such cases are specially referred.But for a woman,motherliness is her basic nature.When the energy of a woman is properly channelized,her home becomes the power house of positive vibrations.This great country and its age old practices have always held women in high esteem but it is unfortunate that this very same culture has been misunderstood or misrepresented by some people with a vested interest.

In vedic period,women were treated with utmost reverence and recognition.Everywhere they were given utmost priority.They were well versed in Vedas and tantraas.But it is surprising that later it was told that women should not recite vedic manthras. Once,women were so empowered that Suyamvara they had the freedom to choose their life partner.
For instance, the monthly menstrual cycle period of a woman is a natural happening and during that time they are given nutritional food, complete rest and emotional support. It was the time for them to relax and rejuvenate. In later days, this understanding was interpreted in a wrong way and society started isolating women on those days.
Whoever did not want to treat women equally and whoever did not want women to be educated bought in all these differences and disturbed the balance which was the strength of our culture.
As I said earlier,women is seen as Sakthi. Sakthi is the symbol of knowledge.She is the symbol  of power.She is the symbol of kundalini.She is the symbol of Aanandha.She is the symbol of motherliness.According to Saaktham,reaching Sakthi is mukthi.
If a woman can use her love and compassion in the right manner,even without meditating she can attain mukthi.Because the love and compassion she beholds will cleanse her to such an extent that those aspects will prove to be a vehicle for her to reach the highest liberation. 

குருவாரம் குருவார்த்தை-17

சிலர் பெண்களுக்கு சந்நியாசம் கிடையாது என்கிறார்கள். சிலர் பெண்களுக்கு முக்தி கிடையாது என்கிறார்கள். இவைகுறித்து தாங்கள் சொல்ல விரும்புவது என்ன?


பெண்கள் சக்தியின் அம்சமாகப் பார்க்கப்படுகிறார்கள்.சிவம் என்ற சொல்சிவமும் சக்தியும் இணைந்த நிலையைத்தான் குறிக்கும். ஏனெனில்சக்தியில்லாத சிவம் சவம்.சவத்துடன் சக்தி சேர்கிறபோதே அது சிவம்.சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம் என்று பொருள். சிவம் என்பது ஆண்தன்மை .சக்தி என்பது பெண்தன்மை. இரண்டும் சங்கமான நிலையே பூரணம்.
சக்தி என்ற சொல்லே சக்திநிலையைக் குறிக்கும்.சக்திநிலைக்கு வடிவம் கொடுத்தால் அதுவே பெண்வடிவம். அதனால்தான் பெண் என்பவள் தீவிர சக்தி அதிர்வுகளின் பிறப்பிடமாக இருக்கிறாள்.
அது நேர்மறை சக்தியாகவும் இருக்கலாம்.எதிர்மறை சக்தியாகவும்
இருக்கலாம்.நாம் நேர்மறை சக்தியைப் பற்றி மட்டுமே பேசுவோம்.
பெண்தான் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.பொதுவாகப் பார்த்தால்தாய்மை என்பது ஓர் உணர்வு. எப்படி மகிழ்ச்சி என்பது ஓர் உணர்வோ அதுபோல் தாய்மையும் ஓர் உணர்வுதான்.ஓர் ஆண்கூட தாய்மை உணர்வை அடைய முடியும்.அது மிகவும் அரிது என்பதால் அத்தகைய ஆண்கள் தனித்தன்மையுடன் திகழ்கிறார்கள்.ஆனால் பெண்ணைப் பொறுத்தவரை அவளுடைய இயல்பே தாய்மைதான். ஒரு பெண்ணின் சக்திநிலை சரியாக சீரமைக்கப்பட்டால் அவளுடைய இல்லம் நேர்மறை சக்தியின்  உற்பத்தி நிலையமாகவே திகழும்.
இந்த தேசமும்,ஆண்டாண்டு காலமாய் இந்த தேசம் முன்னெடுத்துச் செல்லும் பண்பாடும் பெண்ணுக்கு மிகவும் உயர்ந்த இடத்தையே தந்து வந்துள்ளது.ஆனால் அதே பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சிலர் தங்கள் உள்நோக்கங்கள் காரணமாய் திரித்துச் சொல்லி சில தவறான புரிதல்களை ஏற்படுத்தி விட்டனர்.
வேதகாலங்களில் பெண்கள் மிகுந்த மரியாதையுடனும் மகத்துவத்துடனும் நடத்தப்பட்டனர்.எல்லாவற்றிலும் அவர்களுக்கு முதலிடமும் முக்கியத்துவமும் தரப்பட்டு வந்தது. அவர்கள் வேதங்களிலும் தந்திர மார்க்கங்களிலும் தலைசிறந்து விளங்கினர்.ஆனால் காலப்போக்கில் பெண்கள் வேத மந்திரங்களை உச்சரிக்கக் கூடாது என்றொரு கட்டுப்பாடு வந்ததுதான் விந்தை,.


 ஒரு காலத்தில் சுயம்வரம் என்னும் முறையில் தன் வாழ்க்கைத்துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கு இருந்தது. அதுமட்டுமல்ல. பெண்ணுக்கு வரக்கூடிய மாதவிடாய் என்பது இயற்கை சுழற்சியில் நிகழும் இயல்பான விஷயம் என்னும் புரிதல் அக்காலங்களில் இருந்தது.எனவே அந்த நாட்களில் அவர்களுக்கு சத்துமிக்க உணவுமுழு ஓய்வுமனரீதியான ஆதரவு அனைத்தும் வழங்கப்பட்டன.காலப்போக்கில் இந்தப் புரிதல் தவறாகத் திரித்துச் சொல்லப்பட்டுஅந்த நாட்களில் பெண்களை தனிமைப்படுத்திஒதுக்கிவைக்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது.
யாரெல்லாம் பெண்கள் சமமாக நடத்தப்படுவதை விரும்பவில்லையோயாருக்கெல்லாம் பெண்கள் கல்வி பயில்வதில் விருப்பமில்லையோஅவர்களெல்லாம் நம் கலாச்சாரத்தில் இருந்த  சமநிலையைக்  குலைத்து  வேண்டாத வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் கொண்டு வந்தனர்.
நான் முன்னரே சொன்னது போல்பெண் என்பவள்  சக்தியின்   வடிவம். சக்தி என்பவள் ஞானத்தின் அடையாளம்.சக்தி என்பவள் வல்லமையின் அடையாளம். சக்தி என்பவள் ஆனந்தத்தின் அடையாளம். சக்தி என்பவள் தாய்மையின் அடையாளம்.சாக்த நெறியைப் பொறுத்தவரை சக்தியை அடைவதே முக்தியை அடைவது.
ஒரு பெண் தன் அன்பையும் கருனையையும் சரியான முறையில் சீரொழுங்கு செய்தால் தியானத்தின் துணை இன்றியே அவள் முக்தியை அடையலாம். ஏனெனில் பெண்மையின் அரிய பண்புகளான அன்பும் கருணையும் அவள் உயிரைத்  தூய்மை செய்து உச்சகட்ட ஆன்ம விடுதலையை அவளுக்கு வழங்க வல்லவை .


Thursday, 21 February 2013

குருவாரம் குருவார்த்தை-16


           யோகா தியானம் போன்றவற்றில் ஈடுபடும்போது சில சித்திகள் கிடைக்கும் என்கிறார்கள்.  இந்த சித்திகளுக்கு அதிக முக்கியத்துவம்தரலாமா ? சித்திகளால் முக்தி கிடைக்குமா ?

நீங்கள் ஆன்மீகப் பாதையில் செல்கிறீர்கள்  என்றால்,  அது குறிப்பிட்ட திசைநோக்கி     செல்லும்   பயணம்   போன்றது.   போகிற      பாதையில்    சில கைகாட்டி    மரங்கள்   தென்படும்.  எவ்வளவு   தூரம்   கடந்து   வந்திருப்பீர்கள் என்பதை உணர்த்தும்    மைல்கற்கள்   இருக்கும்.   இவையெல்லாம்,   நீங்கள் சரியான   பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்த்தும் அடையாளங்கள். சித்திகளும்   அத்தகைய   அடையாளங்கள்தான். ஆன்மீகப் பாதையில்   சில   எல்லைகளைக்   கடக்கையில்   சில சித்திகள் கிடைப்பது  இயற்கை.   இது மிகவும்     பரந்துபட்ட   ஒரு விஷயம்.      இது பரந்துபட்டது    என்று    நான்    சொல்லக்   காரணம்,    இதைப் பல்வேறு பரிமாணங்களில்   புரிந்து   கொள்ள வேண்டும்.



சிலர்     உலக   வாழ்வில்   சில   நன்மைகள்   பெறுவதற்காக    ஆன்மீகப் பயிற்சிகளை   மேற்கொள்வார்கள். சிலருக்கு    செல்வவளம்    தேவையாய் இருக்கிறது. சிலருக்கு  ஆரோக்கியம்  தேவைப்படுகிறது. சிலருக்கு   மன அமைதி  தேவைப்படுகிறது.  இவற்றுக்கென்றே     சில     ஆத்மசாதனைகளை மேற்கொள்கிறார்கள். அவற்றை அவர்கள் முறையாக மேற்கொள்ளும்போது ,அவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். இந்த ஆசீர்வாதமே சில சித்திகளாய் உருவாகின்றன. இது   சித்திகள்   பற்றிய ஒரு   மேலோட்டமான    அம்சம் மட்டும்தான். ஒரு   புரிதலுக்காக   இந்த   உதாரணத்தைச் சொல்கிறேன்.

ஆனால்   ஆன்மீகத்தையே  உச்சபட்ச     நோக்கமாகக்       கொண்டவர்களுக்கு உலக    வாழ்க்கை   சார்ந்த    விருப்பங்கள்   இல்லை.      அவர்களின்   இலக்கு ஆன்மீகம்   மட்டுமே.   இந்தப்    பிரபஞ்சத்துடன்      ஒன்றாவதையோ,   தங்கள் இஷ்ட     தெய்வத்துடன்        சங்கமிப்பதையோ        அவர்கள்        நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.   இந்தப் பயணத்தில்   சில     எல்லைகளைக்       கடந்து செல்கையில்   சில   சித்திகளை   அடைகிறார்கள்.    சிலருக்கு       உள்ளுணர்வு பலப்படும்.   சிலருக்கு   வாக்கு     சித்திக்கும்.   அவர்கள்      சொல்வதெல்லாம் பலிக்கும்.   சிலருக்கு     உணவு     உண்ணத்   தேவையிருக்காது.     இத்தகைய  ஆரம்ப    நிலை     சித்திகளிலிருந்து     அஷடமாசித்திகள்    வரை    ஓர்    ஆத்ம சாதகருக்குக்   கிடைக்க    வாய்ப்புகள் உள்ளன.

 உலக வாழ்வில் உள்ள ஒரு மனிதருக்கு இத்தகைய சித்திகள் பிரமிப்பாகவும் சுவாரசியமாகவும்   இருக்கலாம். ஆனால்    ஆன்மீகத்தையே     பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கும் ஒருவர், இத்தகைய சித்திகளில் ஈடுபாடு கொள்ளத் தொடங்குவாரென்றால் அவருடைய நோக்கம் திசைதிரும்ப வாய்ப்புகள் உண்டு.அவரைச் சுற்றி அதிசயங்கள் நிகழ்கையில்,அனைவரும் அவரைக் கொண்டாடுகையில் அவர் தன்னைக் கடவுளாகக் கருதிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அவருடைய ஆத்ம சாதனையின் சங்கல்பம் நீர்த்துப் போவதோடு அவர் தன் பாதையையே தவற விடவும் வாய்ப்பிருக்கிறது.

 இதையும் தாண்டி சித்திகள் ஒருவருக்கு ஏற்படும்போது அவருக்கும் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் அதனால் சில   நன்மைகள்   ஏற்படக் கூடும். உதாரணமாக   இந்த சமூகத்தை அவர் ஆசீர்வதித்தால்   அதனால் சில நன்மைகள் நிகழும். கிரியைகள்   மூலமாகவோ,   பக்தி மூலமாகவோ, தீவிரமான  தவத்தின் மூலமாகவோ மந்திர தியானத்தின்   மூலமாகவோ இஷ்ட தெய்வ வழிபாடு மூலமாகவோ   இத்தகைய சித்திகளை அடையலாம். இந்த சித்திகளை   ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தி,  தன்னலமில்லாமல் ஒருவர் சமூக மேன்மைக்காக அதைப் பயன்படுத்துவார் என்றால் அது மிகவும் அற்புதமான விஷயம். 

Wednesday, 20 February 2013

HOW TO HANDLE SIDDHIS ?

Dear Balarishi, 
In the path of yoga and meditation it is said certain siddhis are attained.Should the siddhis be given the main  focus? Will the siddhis be helpful to attain Moksha ?

If you are going in the spiritual path you have undertaken a journey towards a particular direction.There will be some road signs and indications which would indicate that you are going in the right path.Siddhis are such indicators in the spiritual path.When you cross certain stages in your spiritual journey you will naturally get some siddhis.This is a very vcast subject.I call it to be a vast subject because it has to be understood in different dimensions.

Some undertake spiritual practises so as to attain certain materialistic goals. Some need wealth,some need well being,some look for peace and they undertake certain spiritual practises.When they do their saadhanas
properly,they are being blessed and this blessing manifests as certain siddhis.This is a gross level perception of siddhis and i say this just for your understanding.

But for a spiritual seeker,all the saadhanas are aiming towards spiritual goals.There are no aspirations for him in materialistic life.He wishes to become one with the Universe or his Ishta Devatha.In this seeking as he
crosses a particular stage certain siddhis are bestowed on him. Some will get intiution poer.Some will attain
Vaak Siddhi and whatever they tell will become true. Some will have no need for food.From siddhis of this primary level the seeker can go to the level of attaining Ashtamaa Siddhis.

When one person is more into materialistic life,these siddhis may look colourful and interesting.But if a person with a spiritual quest induldges much into siddhis his focus might change. When miracles happen around him all will celebrate the person and he too might assume that he is God.His concentration might be diverted towards worldly life again. His purpose of saadhanas might get diluted and he might miss the whole journey.

Apart from this the siddhis might do some good to the person who has attained them and also to those around him. For instance If a person with sidhis can use it as selfless instrument for the welfare of the society it would bring positive changes.

Siddhis can be attained by any serious spiritual practise.It can be attained through kriya,through Bhakthi, through Thapas through manthra yoga or any kind of intense worship towards a particular deity. But
the purpose of starting any kind of practice should not be mislead by siddhis. A seeker should raise beyond the siddhis to attain blissful state or become complete with the divine.This is the main purpose of any saadhana and siddhis are just milestones in that journey !

Thursday, 14 February 2013

குருவாரம் குருவார்த்தை-15

நம்முடைய மரபில் எத்தனையோ யோகமுறைகள் குறிப்பிடப்பட்டும்
பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. ராஜயோகா க்ரியா யோகா போன்றவை அவற்றில் மிகவும் பிரபலமானவை. இவற்றில் மந்திர யோகாவை எவ்விதமாக வகைப்படுத்துவீர்கள்?

எந்தவிதமான யோகமுறையாய் இருந்தாலும் அதன் முக்கிய நோக்கம், ஓர் ஆத்ம சாதகரின் ஆன்மீக உந்துதலை மேம்படுத்துவதுதான். ராஜயோகம் என்பது வரையறுக்கப்பட்ட ஆத்ம சாதனை. எட்டு அங்கங்களாய் வகைப்படுத்தப்பட்டு அஷ்டாங்க யோகம் என அழைக்கப்படுகிறது. 



க்ரியா யோகாவில் சுவாசம் மற்றும் ஓசையின் சங்கமம் உள்நிலைத் தெளிவுக்குப் பாதை வகுக்கிறது . ஆசனம் மற்றும் பிராணாயாமத்தில் ஒருவர் நல்ல முதிர்ச்சியடையும் போது அவருக்கு க்ரியா யோகாவில் தீட்சை தரப்படுகிறது. தந்திர மார்க்கம் உட்பட க்ரியா யோகாவில் எத்தனையோ வகைகள் உள்ளன.க்ரியா என்ற சொல்லுக்கு செயல் என்று பொருள்.விழிப்பு நிலையுடன் கூடிய பல செயல்கள் க்ரியா யோகாவின் அங்கங்களாய் உள்ளன.

மந்திரயோகத்தைப் பொறுத்தவரை,மந்திர தீட்சை வழங்கப்படுகிறது. துரித கதியில்உள்முகமாகவோ வெளிமுகமாகவோ மந்திரம் உச்சாடனம் செய்யப்படும்போது அதிர்வுகள் உண்டாகின்றன. இந்த மந்திரங்கள் உள்நிலையில் தூய்மை உண்டாக்குகின்றன. ஓர் ஆத்மசாதகரின் உள்நிலைப் பயணத்தில் அபரிமிதமான தெளிவையும் தூய்மையையும் உண்டாக்கும் கருவிகளாக மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாகப் பார்த்தால் மந்திரங்களை மனிதர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றவும் பயன்படுத்த முடியும். மறைந்த மூதாதையர்களுக்கான சில கர்ம நியமங்களை நிறைவேற்றவும், அவரவர்களின் வழக்கமான ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொள்ளவும் மந்திரங்கள் பயன்படுகின்றன. வேள்விகள் நிகழ்த்தும் போது வேள்விகளில் எழுந்தருளச் செய்யப்படும் தெய்வங்களுக்கான       சங்கல்பங்களை     சமர்ப்பிக்க     மந்திரங்கள்
பயன்படுகின்றன. மேல்நிலைகளிலான சக்திகளை எழுந்தருளச்செய்ய அக்னி ஓர் ஊடகமாக இருப்பதைப் போலவே மந்திரங்களும் அவற்றுக்கான ஊடகங்களாய் அமைகின்றன.

குருவிடமிருந்து ஒரு மந்திரம் தீக்ஷையாகப் பெறப்படும்போது அது தனித்தன்மை மிக்க அதிர்வுகளுடன் திகழ்கிறது.ஏனெனில் அம்மந்திரம் ஒரு குருவால் விதைக்கப்பட்டு தன் உச்சபட்சஅதிர்வுகளுடன் சாதகருக்குள் செயல்படுகிறது.வெளிமனதில் முழு விழிப்புணர்வுடன் செயல்படுவது மட்டுமின்றி, உள்மனதில் இருக்கும் வெளித்தெரியாத தடைகளையும் அகற்றி தூய்மை செய்யும் சக்தி இத்தகைய மந்திரங்களுக்கு உண்டு.

ஒரு மந்திரத்தை பெறுகிற விதத்திலும் பிரயோகிக்கும் விதத்திலும் குருவின்
பாரம்பரியத்துக்கேற்ப சில முறைகளும் பயிற்சிகளும் தரப்படுகின்றன. எனவே மந்திர யோகத்தைப் பொறுத்தவரை  மந்திரங்கள் உபதேசிக்கப்படுகின்றன. அவற்றைப் பிரயோகம் செய்யும்போது அவை உடலிலுள்ள சக்திநிலைகளைத் தூண்டுகின்றன. சக்திநிலைகள் தூண்டப்படும்போது    உள்நிலையில்   தூய்மையும்   தெளிவும்    பிறக்கின்றன.
இந்நிலை  ஸ்திரமடையும்  பொழுது,  மனமானது  ஐம்புலன்களையும்   கடந்து
தியானநிலையை உணர்கிறது.இதன்வழியாக ஆத்மசாதகர் படிப்படியாக தியானநிலைக்கு வழிநடத்தப்பட்டு அந்நிலையிலேயே லயித்திருக்க முடிகிறது.

WHAT IS MANTHRA YOGA ?

Dear Balarishi,
In our tradition,many types of yoga are being mentioned and practiced. To name a  few Raja yoga, Kriya yoga  are all widely known. Among this, how would you define Mantra yoga?

Essentially any yoga practice is to enhance and improve the spiritual inclination of the seeker. Raja yoga is a defined pattern, in which eight steps are precisely mentioned and they are known as Ashtaanga Yoga. Kriya yoga is a combination of breathing and sound to bring inner clarity.When one person is well versed in Aasana and Praanayaama, can easily be initiated into Kriya yoga. There are very many branches in kriya yoga which also includes tantric practises. The word "kriya" indicates action and there are many aspects of concious action involved in kriya yoga.


In Manthra yoga, the manthras are being initiated and used in a speed which creates a vibration.The manthras can be chanted either internally or externally. This vibration brings in cleansing. In manthra yoga, manthra is being used as an instrument through which immense clarity and cleansing descends in a seeker`s inner journey.

Broadly speaking, manthras are used to accomplish one`s responsibilities. It is used to do certain rituals for one`s ancestors and regular spiritual practises.When yagnas are done vedha manthras are used as the instruments to communicate certain sankalpas to the
deity invoked through yagnas. As Agni is used to invoke higher forces manthras are also used as instruments to invoke and communicate with higher forces.



When a manthra is got from a Guru as a deeksha it is unique and powerful in its own way.This is because it is given as a seed from the Guru and it gets into the Seeker with utmost vibrancy. It is capable of bringing awareness not only in the conscious mind but also can cleanse the unknown barriers which are there in the sub conscious mind of the seeker.

According to the tradition of the Guru, certain practises are given in adapting a manthra and using it. So,in manthra yoga the manthra which is chanted and used activates the energy centres. When energy centres are activated cleansing and clarity happens. As this becomes consistent mind is able to raise beyond the barrier of five senses  and enter into meditative states. By this way a seeker is clearly led into a stage of meditation and able to be in meditativeness.



Thursday, 7 February 2013

குருவாரம் குருவார்த்தை-14

அனைத்து  சாதுக்களும்  முனிவர்களும்  கும்பமேளாவில்  கலந்து கொள்வதில்  மிகவும்  முனைப்புடன்  இருக்கிறார்கள். கும்பமேளா
சாதுக்களுக்கான  விழாவா ? ஒரு சராசரி மனிதனைப் பொறுத்தவரை  கும்பமேளாவுக்கான முக்கியத்துவம் என்ன ?



       ஆன்மீகத்தில் நாட்டமுள்ள ஒவ்வொருவருக்குமே  கும்பமேளா  மிகவும்
முக்கியமான வைபவம்.நமது தேசத்தின் நான்கு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில், சில துல்லியமான கணக்குகளின் அடிப்படையில் கும்பமேளா நடத்தப்படுகிறது.



         புனிதம்    மிக்க   நதிகளின்    கரைகளில்     கும்பமேளாக்கள்  நிகழ்கின்றன.
ஹரித்துவாரில் கங்கைக்கரையிலும், நாஸிக்கில் கோதாவரிக்கரையிலும், உஜ்ஜையினியில் ஷிப்ரா நதிக்கரையிலும் அலகாபாத்தில் கங்கை-யமுனை-சரஸ்வதி சங்கமமாகும் திரிவேணி நதிக்கரையிலும் கும்பமேளாக்கள் நடைபெறுகின்றன.
       தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது திரண்ட அமுதத்தை எடுத்துக் கொண்டு அசுரர்கள் ஓடிவிட தேவர்கள் அவர்களைத்   துரத்திக் கொண்டு பன்னிரண்டு பகல்களும் பன்னிரண்டு இரவுகளும்  ஓடினார்களாம். அப்போது   நான்கு   இடங்களில் அமுதம் சிந்தியதாகவும் அந்த நான்கு இடங்களில்தான் தற்போது கும்பமேளா கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. கும்பமேளா நடக்கும் நாட்களில் அமுதம் இந்தப் புனித நதிகளில் கலப்பதாகவும் ஐதீகம்.
       கும்பமேளாவின் மிக முக்கிய நிகழ்வு, நாகசாதுக்கள் ஊர்வலமாக வந்து
நதிகளில் புனிதநீராடுவதாகும். பல்வேறு மார்க்கங்களையும் தந்திர நெறிகளையும் ஆன்மீக வழிமுறைகளையும் பின்பற்றும் இந்த சாதுக்கள் புனித நீராடுகையில் தங்கள் தவத்தின் பயனை புனித நதிகளுக்கு அர்ப்பணிக்கிறார்கள். ஏற்கெனவே புனிதம் மிக்க இந்த நதிகளில் சாதுக்களின் தவபலனும் சங்கமிக்கும்போது அவை மேலும் புனிதமும் சக்தியும் மிக்கவையாகத் திகழ்கின்றன. அதனால்தான் சாதுக்கள் ஸ்நானம் செய்தவுடன் இந்நதிகள்ளில் நீராடுவது முக்கியமாகக் கருதப்படுகிறது. கும்பமேளாவின்போது குறிப்பிட்ட நாட்களில்தான் சாது ஸ்நானங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய புனிதயயத்திரைகளையும் புனித நீராடுதல்களையும் மேற்கொள்வதால் ஆத்மசாதகனின் கர்மவினை மூலமாய் இருக்கும் தடைகள் அகன்று உள்நிலைத்தூய்மை ஏற்படுவதோடு,வாழ்விலும் சில முக்கியத் திருப்புமுனைகள் நிகழ்கின்றன.
        கும்பமேளாவில் பல வகைகள் உண்டு. அர்த்த கும்பமேளா, பூர்ண கும்பமேளா, மஹா கும்ப மேளா, மஹா மேளா என்னும் பலவகைப்பட்ட
கும்பமேளாக்களில் தற்போது அலகாபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது மஹா கும்பமேளா ஆகும்.

KUMBH MELA - FOR EVERY ONE

Dear Balarishi,
All saints and sadhus make it a point to attend Kumbh mela. Is it meant mainly for saadhus? What is the the importance of Kumbh mela for a common man?


Kumbh Mela is a very important event for anyone who has some interest in spirituality. Kumbh mela happens in four places at different periods , based on subtle calculations. All these four places are banks of holy rivers. The places are Haridwar (bank of river ganga), Nashik,( bank of river Godhavari), Ujaini (bank of river kshipra) and Allahabad (the union spot of Ganga, Yamuna and Saraswathi). It is said that when Devas and Asuras churned Amirtha from the ocean of milk , the Asuras ran away with Amrutha and Devas chased them for twelve days and twelve nights. During this chase Amirtha is said to have spilled in these four places.
The Amritha is said to merge in these holy rivers during Kumbh Mela.
In Kumbh mela the important event is all the Naaga Saadhus coming in procession for their holy dip. This is very important because in spirituality, the galaxy of these Saadhus representing various tantra traditions and spiritual orders is something very rare. By taking a holy dip these saadhus offer the essence of their penance to the holy river.These rivers which are holy by their own nature becomes holier as they carry the powerful energies of these Saadhus. This is why it is considered to be very auspicious to take a dip immediately after the Snaanam of the Saadhus. This procession happens only on prescribed days for Snanam.
By taking this holy dip the karmic obstacles for a Sadhaka vanishes and his life is cleansed to a great level. Important turning points in the path of life happens after such spiritual sojourns for a saadhaka. There are various classifications in Kumbh Mela like Ardha Kumbh Mela, Poorna Kumbh Mela, Maha kumbh mela and Maha Mela.
The kumbh mela which is happening now in Allahabad is Maha kumbh Mela.