Thursday, 29 August 2013

குருவாரம் குருவார்த்தை-41



 ஆன்மீகப் பயிற்சியைத் துரிதப்படுத்தவும்,கர்ம வினையைக் கரைக்கவும் ஆத்ம சாதகன் முயலும்போது அதில் குருவின் பங்கு என்ன?

ஆன்மீக வழியில் இருப்பவர்கள் தங்கள் குருவிடம் சரணடைகிற போது, எதுவும் தவறாகப் போகாது.தலைதூக்கும் அகங்காரத்தைத் தாண்டீந்த சரணாகதி நிகழ்ந்தால் சாதகருக்கு பலவிதமான நன்மைகள் நடக்கும்.ஏனெனில் கர்மவினை சுழற்சிகள் குருவருளால் பெருமளவு குறையும்.சில சமயங்களில் சாதகர் முற்றிலும் தீவிரத்தோடு சரணாகதி மனநிலையில் இருந்தால்,அவருடைய குரு விரும்பினால் அவருடைய கர்மவினையின் கட்டுக்களிலிருந்து மீட்க முடியும்.அதாவது அந்தக் குறிப்பிட்ட பகுதி கர்மவினைஅயை குரு வாங்கிக் கொள்கிறார் என்று பொருள்.

No comments: