Thursday, 4 April 2013

குருவாரம் குருவார்த்தை-22


நாம் பல செயல்களைச் செய்யத் திட்டமிடுகிறோம். தொடர்ந்து செயல்பட விடாமல் ஏதோவொன்று தடுக்கிறது. அல்லது இடையிலேயே மனது மாறிவிடுகிறது. ஏன் இப்படி நிகழ்கிறது ?

உங்கள் எண்ணங்கள் உங்களாலேயே தடைப்படுவதையோ தாமதமாவதையோ உணர்ந்தால், உங்கள் வாழ்வின் ஒழுங்குமுறைகளை  சரிபார்க்க வேண்டுமென்று பொருள். உங்கள்  வாழ்க்கைமுறை உங்கள் உணவுமுறை போன்றவற்றை நீங்கள் எடைபோட வேண்டும்.

உங்கள் எண்ணங்களை உணர்வு சார்ந்த ஏதேனும் தொந்தரவு செய்கிறதென்றால்,  அந்தத் தொந்தரவு எங்கே உதயமாகிறது என்பதை
முதலில்  பாருங்கள்.    உங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும்
வடிவமைப்பதில் உணவுக்குப் பெரும் பங்குண்டு. உதாரணமாக, திடீரென்று உங்களுக்குக் கோபம் வருகிறதென்றால்முந்தைய நாளோ,
சில நாட்களுக்கு முன்னரோ நீங்கள் உட்கொண்ட உணவுகூட அதற்குக்
காரணமாக இருக்கலாம்.

கோபப்படுதல்,எரிச்சலடைதல்சோம்பலாகஉணர்தல்விரைவில்  குழப்பமடைதல் போன்ற விசித்திரமான மனநிலை மாற்றங்கள், அளவுக்கதிகமாக உணவு உட்கொள்வதாலோ நீங்கள் உட்கொள்ளும் உணவின் தன்மையாலோ கூட இருக்கலாம். 

சிலர் மிக நல்ல பழக்கங்களை மேற்கொள்வார்கள். ஆனனல் அவற்றைத்
தொடர்ந்து  செயல்படுத்த  மாட்டார்கள்.   சிலர் நடைப்பயிற்சி தொடங்குவார்கள். இடையிலேயே நிறுத்தி விடுவார்கள். சிலர் யோகா
பயிற்சிகளைத் தொடங்கி,பாதியிலேயே நிறுத்திவிடுவார்கள். சிலர் துரித உணவுகளை நிறுத்த நினைப்பார்கள்.நிறுத்த முடியாமல் சிரமப்படுவார்கள். இவர்களைத்தொடங்கச் செய்தது எதுதடை செய்வது எது  என்று ஆராய வேண்டும்.

ஒரு மனிதர் நல்ல செயலொன்றைத் தொடங்குகிறாரென்றால், அது
ஒருவகைத் தெளிவின் விளைவு. அவரே அதை நடைமுறைப்படுத்துவதில் தோற்றுவிடுவதும் உண்டு. சிந்தனைக்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நடுவில் பெரும் தடை இருக்கிறது.தாங்கள் மேற்கொண்ட ஒன்றைத் தொடர்வதற்கான உறுதியோ தெளிவோ தம்வசம் இல்லை என்று சிலர் எண்ணுவார்கள். ஆனால் அவர்கள் உணவுப்பழக்கம் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

ஒரு நாளை நீங்கள் உற்சாகமாகத் தொடங்க வேண்டுமென்றால்,
அதற்கு முந்தைய நாள் இரவு உணவைத் திட்டமிடுவதில் அது
தொடங்குகிறது. முன்னதாகவே இரவு உணவவ எடுத்துக் கொள்வதும்,
அந்த உணவில் அதிகமாக பழவகைகளை சேர்த்துக் கொள்வதும் ஒரு
நாளை உற்சாகமாகத்  தொடங்க  வழிவகுக்கும். தனிமனிதர்களுக்கு எப்படி தனித்தன்மையும்   விதம்விதமான எண்ணப் போக்குகளும் உண்டோ அதேபோல,உணவுக்கென்று சில தன்மைகளும்  குணாதிசயங்களும் உண்டு.

ஒரு மனிதரின் சிந்தனைப் போக்குக்கேற்ப  அவரைநல்லவரென்றும் தீயவரென்றும் சமூகம் வகைபிரிக்கிறது. அதேபோல உங்கள் எண்ண ஓட்டங்களை இடர்ப்படுத்தி திசைமாற்றும் இயல்பு, உணவுக்கும் உண்டு. எனவே,நீங்கள் நினைக்கும் விதம் ஒன்றாகவும் செயல்படும் விதம் ஒன்றாகவும் இருந்தால், உங்கள் உணவுப்பழக்கத்தை கண்காணித்து சீர்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

IS YOUR FOOD EATING YOUR WORK?

Dear Balarishi,
We plan to do so many things. But are unable to accomplish them. Either something stops us from proceeding further,or some mood swing takes over. How do we deal with this?

If you see your own ideas suffocating due to lack of action or lapse in action, it is high time you take stock of the density of discipline in your lifestyle. Here discipline refers to the quality of your lifestyle, food habits and so on.






If you see some emotional disturbance altering your thought process you must see from where these disturbances originate. Food plays an important role in determining your moods and feelings. For instance if you can see anger taking over suddenly, it could be the influence of the food you took the day before or few days before.

Being angry, feeling irritated, feeling lethargic, getting easily confused are all different states of mind which could be either due to overloading of food or the nature of the food you took.

Some would have very good life habits but will be very inconsistent in keeping them up.Some would go for a walk for some days and will stop for no reason.Some will do yoga practices for some days and stop without a reason.Some would decide to give up junk foods but will not be in a position to resist temptation for a long time. Just analyze these situations.What made them to start and what made them to stop? 

If a person is commencing a good deed, it comes out of a certain clarity but the same person fails while implementing it.There is a major barrier between thought process and implementation. Many assume that they do not have either the clarity or conviction to carry it further and give up what they undertook.But it is closely associated with their food habits as what all people do in their lives are interconnected.

So,if you want to start a day afresh, the efforts towards this starts from planning the dinner of the previous day. You should have an early dinner with a major portion of fresh fruits. As individuals have different thought process and individuality food also has its own nature and character.

Society brands a person to be either good or bad by seeing his thought process. Similarly food can also induce wrong moods and disturb your ability and clarity. When you are able to see at times you think in one way and act in some other way, just be aware of your food habits and consciously correct it.

Thursday, 28 March 2013

TERRORISM IS ALSO A SUPERSTITION

Dear Balarishi,
People have certain blind beliefs and attribute them to their own religion. Is there any connection between blind beliefs and Spirituality?

Now you have pulled in three aspects to discuss one concept. Blind beliefs, religion and spirituality. Apart from these three one more aspect needs to be bought into the scene. The social practices prevailing in various parts of the world. Society is where all blind beliefs and superstitions sprout. If a particular religion is dominant in that particular part of the society, then it is misunderstood to be a part of that religion. Later, people attempted to get spiritual tags for their crude ideas .This is how things got mixed up.

If you go to China, there is a belief that chopping your nails at night will be a welcome sign for ghosts. Somehow that belief came into existence in that society.

In China a stranger will find it very hard to eat noodles because the longer the noodle is in your soup you will live longer. But if a new person attempts to swallow such a big noodle he might choke to death!! These are all local beliefs and some one tried to add religious colour and spiritual flavour to such half baked sentiments.



 In America rabbit`s foot is believed to bring good fortune and there are very many beliefs of that kind. So whether it is South or North or East or West, such crude sentiments prevail and they have nothing to do with the religion or spirituAality.

Casteism, discrimination of women are all classic examples of this misinterpretation. Once women were doing homas and now they are denied that right. So these beliefs often move from good to bad and very rarely from bad to good.

Now someone believes if he or she can kill people in name of religion it is no more a sin but accomplishing a duty. This might have nothing to do with their religion but creates an unrest and disharmony universally. So if a person decides to kill in name of religion it is not just a misunderstanding but it is also a superstition. 

Spirituality always tries to connect each one with nature and bring in a harmony.It teaches you to share and care for fellow beings. It gives you a taste of love for fellow beings. When you are disturbed by the hunger of and cry of a child you identify yourself with that child. This is the way of getting to know universal oneness. If you learn to smile without a hidden agenda you are more in place in this Universe.

So blind beliefs can never be religious or spiritual. If you allow that tag on your crude beliefs you will be fooling yourself and missing the very essence of life.


குருவாரம் குருவார்த்தை - 21



மனிதர்கள் பலர் வெவ்வேறு விதமான மூடநம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றுக்கும் தங்கள் சமயங்களுக்கும்சம்பந்தம் இருப்பதாய் நினைக்கிறார்கள். மூடநம்பிக்கைகளுக்கும் ஆன்மீகத்துக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா?

இப்போது நீங்கள் ஒரு விஷயத்தை விவாதிக்க மூன்று அம்சங்களைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். மூடநம்பிக்கை, சமயம், ஆன்மீகம். இப்போது நான்காவதாய் இன்னோர் அம்சத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும். அதுதான் சமூகப் பழக்க வழக்கங்கள். உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு சமூகங்களில் விதம்விதமான மூடநம்பிக்கைகள் முளைவிடுகின்றன. எல்லா நம்பிக்கைகளுக்கும் சமூகம்தான் விளைநிலம். அங்கே குறிப்பிட்டவொரு சமயம் செல்வாக்குடன் இருந்தால் அந்த சமயத்துடன் அந்த நம்பிக்கை தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. பின்னர் மனிதர்கள் தங்களின் மனக்கோணல்களுக்கு ஆன்மீகச் சாயம் பூச முற்பட்டனர். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளதுபோல் ஒரு பிம்பம் உருவானது இப்படித்தான் நீங்கள் சீனாவுக்குச் சென்றால், இரவில் கைகால் நகங்களை வெட்டுவது தீய ஆவிகளை ஈர்க்கும் செயல் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது. அதுமட்டுமல்ல. புதியவர் ஒருவர் சீனா சென்றால் நூடுல்ஸ் சாப்பிட மிகவும் சிரமப்படுவார். ஏனெனில் சூப்பில் நூடுல்ஸ் எவ்வளவு நீளமாக இருக்கிறதோ, ஆயுளும் அத்தனை நீளம் என்று நம்புகிறார்கள். ஆயுள் நீளும் என்கிர நம்பிக்கையில் நீளமான நூடுல்ஸ் சாப்பிட்டு ஒருவர் தொண்டை அடைபட்டு சாகவும் வாய்ப்புண்டு. இவையெல்லாம் அந்தந்த சமூகங்களில் நிலவுகிற மூடநம்பிக்கைகள். காலப்போக்கில் மனிதர்கள் தங்கள் அரைவேக்காட்டுத்தனமான மூடத்தனங்களுக்கு சமயச் சார்பை ஏற்றி ஆன்மீக முலாம் பூச முற்பட்டார்கள்.

முயலின் கால் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்பது அமெரிக்காவில் நிலவும் மூடநம்பிக்கைகளில் ஒன்று. எனவே கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்று திசைபேதமில்லாமல் மூடநம்பிக்கைகள் உலகெங்கும் பரவிக் கிடக்கின்றன. இவற்றுக்கு சமயங்களுடனோ ஆன்மீகத்துடனோ எந்த சம்பந்தமும் இல்லை. சமூகத்தில் நிலவுகிற தவறான நம்பிக்கைகளை சமயத்தோடும் ஆன்மீகத்தோடும் சம்பந்தப்படுத்தி அபத்தமாகப் புரிந்து கொள்வதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள் ஜாதீய வேறுபாடுகளும் பெண்ணடிமைத்தனமும். முன்னொரு காலத்தில் பெண்கள் வேள்விகள் புரிந்தனர். காலப்போக்கில் அந்த உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. சமூகத்தின் தவறான புரிதல்கள் சமய சம்பந்தம் கொண்டவையாகவும் ஆன்மீக சம்பந்தம் கொண்டவையாகவும் புரிந்து கொள்ளப்பட்டன. இவற்றில் தீயவை மாறி நல்லவை நிகழ்ந்ததை விட நல்லவை உருமாறி தீய நம்பிக்கைகளானதே அதிகம். யாரேனும் ஒருவர் சமயத்தின் பெயரால் மற்றவர்களின் உயிர்களைப் பறிப்பது பாவமல்ல என்றும் அது தங்கள் சமயத்துக்காக செய்ய வேண்டிய கடமையென்றும் நினைக்கலாம். இதற்கும் அவர்கள் சமயத்திற்கும் தொடர்பே இருக்காது. ஆனால் இது உலக அளவில் பெரும் பாதிப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே ஒருவர் தீவிரவாதத்தில் சமயத்தின் பெயரால் ஈடுபடுவார் என்றால் அதுவும் ஒருவிதமான மூடநம்பிக்கைதான்.ஆன்மீகம் எப்போதுமே உயிர்களை இயற்கையுடன் ஒன்றுபடுத்தி நல்லிணக்கத்தை உருவாக்க முற்படுகிறது. அடுத்தவர்கள் மீது பரிவும் அக்கறையும் கொள்ள கற்றுத் தருகிறது.சக உயிர்கள்மீது காட்டும் அன்பின் மகிமையை உணர்த்துகிறது.

ஒரு குழந்தை பசியால் வாடுகிறபோது அந்த வாட்டத்துடன் நீங்கள் உங்களை அடையாளப்படுத்துகிறீர்கள்.இது பிரபஞ்சம் முழுவதையும் உங்களில் ஒன்றாகக் காண்பதற்கான சாத்தியங்களின் ஒருகூறுதான். உள்நோக்கம் ஏதுமின்றி உங்களால் புன்னகைக்க முடிகிறதென்றால் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்துடன் நீங்கள் பொருந்திப் போவதாகவே பொருள்.

எனவே மூடத்தனமான நம்பிக்கைகள் சமயத்துடனோ ஆன்மீகத்துடனோ எவ்விதத்திலும் சம்பந்தமில்லாதவை. அவற்றுக்கு யாரேனும் ஆன்மீகச் சாயம் பூச முற்படுவார்களென்றால் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதுடன் வாழ்வின் சாரத்தையும் இழக்கிறார்கள் என்றே பொருள்.

Thursday, 21 March 2013

NAKEDNESS AND MAHA NIRVANA

Dear Balarishi,
Naaga Babas are found to be naked. Is there any connection between Spirituality and Nakedness?

Among those in the spiritual path, a few have always been naked.The Thigambaras, a few siddhas Naga Babas,Saints like Sri Sadhashiva Bramendhra were all in this state.




Now who can afford to be naked? Only those who can leave their own identities can be naked. A person is always conscious about his own identities. As he cares about how he looks, what is his complexion, he is also much conscious about his attires. In social level it is believed that the dress is half of the man. So a person`s caliber and qualifications are judged by what he wears. So a person covers his inner nature with ego and external cover is his dress.

As a person keeps on accumulating his identities in so many ways, a person being naked signifies the fact that he is beyond his own identities. It does not mean that all those who are naked in spiritual path are realized. Some would have realized and others would be in that process.

The nakedness of a spiritual person can be equated to the innocence of a child. If one person or a group of people choose to lead their life in nakedness, it is natural that the society is puzzled or surprised. But what is more important is, they are not bothered about their own nakedness. It does not emerge as a disturbance in their mind. So it will not affect others. This childlike innocence is not out of ignorance. On the other hand, they have crossed all good and bad aspects praise and insult and any such dualities. They have rise beyond such things and reached that stage of child like nature.The bliss in spirituality manifests in so many  levels from different individuals. Some express it as wisdom. Some express it as grace. Some express it as innocence.

In spirituality, the ultimate liberation is referred as Maha Nirvana. Some symbolize their inner nakedness through the external nakedness. Some pursue the path for inner nakedness by starting with external nakedness.

குருவாரம் குருவார்த்தை-20




நாகாபாபாக்கள் நிர்வாணக் கோலத்தில் இருக்கிறார்கள்.நிர்வாணத்துக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்?


ஆன்மீகத் தேடலில் உள்ளவர்களில் ஒரு பகுதியினர் நிர்வாணக் கோலத்தில் இருப்பது புதிதல்ல. திகம்பரர்கள், நாகா பாபாக்கள் ஒருசிலசித்தர்கள், சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற ஞானிகள் நிர்வாணமாகவே இருந்து வந்துள்ளனர்.
நிர்வாணம் என்பது யாருக்கு சாத்தியமென்றால், "நான்' என்னும் அடையாளத்தை விட்டவர்களுக்கு சாத்தியம்.ஒரு மனிதன் தன்அடையாளங்கள் குறித்தே மிகவும் கவனமாக இருக்கிறான். தன் தோற்றம்,தன் நிறம் போன்றவற்றின் முக்கிய அங்கமாக ஆடையும் திகழ்கிறது.ஆள்பாதி ஆடைபாதி என்று நம்பப்படுகிற சமூகத்தில் ஆடையை வைத்தே ஒரு மனிதனின் தகுதியும் மனநிலையும் தீர்மானிக்கப்படுகிறது.மனிதன் தன் வெளிப்புறத்தை ஆடைகளால் மறைக்கிறான்.  உள்நிலையை அகங்காரத்தால் மறைக்கிறான்.

இப்படி தன்னைக் குறித்த அடையாளங்களை மனிதன் சேகரித்துக் கொண்டே போகிற நிலையில் தனைப் பற்றிய அடையாளங்களை ஒரு மனிதன் கடந்ததன் குறியீடே நிர்வாணம்.நிர்வாண நிலையில் இருப்பவர்கள் அனைவருமே அந்த நிலையை  அடைந்தவர்களா என்ற கேள்வி எழலாம். சிலர் அந்த நிலையை அடைந்திருப்பார்கள். சிலர் அந்நிலையை அடைவதற்கான படிநிலைகளில் இருப்பார்கள்.

ஞானிகளின் நிர்வாணம் ஒரு குழந்தையின் நிர்வாணத்தைப் போன்றது. எவ்வித விகல்பமும் இல்லாதது. இப்படி ஒருவரோ ஒரு குழுவினரோ இருக்கும்போது அது சமூகத்தில் வியப்பை ஏற்படுத்துவது இயற்கை. இதில் முக்கியமானது என்னவென்றால் தாங்கள் நிர்வாணமாக இருக்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாதவர்களின் அத்தகைய இருப்பு மற்றவர்களை பாதிக்காது.அந்தக் குழந்தைத்தனம் அறியாமை சார்ந்ததல்ல. வாழ்வின் சுகதுக்கங்கள்,இன்பதுன்பங்கள், மான அவமானங்கள் என்று வெவ்வேறு எல்லைகளைக்  கடந்ததால் வருகிற குழந்தைத்தனம்.ஆன்மீகத்தில் வருகிற ஆனந்தம் பலரிடமிருந்தும் பலவிதமாக வெளிப்படும். சிலரிடம் ஞானமாகவெளிப்படும். சிலரிடம் கருணையாக வெளிப்படும். சிலரிடம் குழந்தைத்தனமாக வெளிப்படும்.

முக்தியடைவதை மஹா நிர்வாணம் என்கிறோம்.சிலர் தங்கள் உள்நிலை நிர்வாணத்தின் வெளிப்பாடாக புறத்தோற்றத்தில் நிர்வாணமாக இருக்கிறார்கள். சிலரோ புறத்தோற்றத்தின் நிர்வாணத்தில் தொடங்கிஉள்நிலை நிர்வாணத்தை நோக்கி நகர்கிறார்கள்.

Thursday, 14 March 2013

குருவாரம் குருவார்த்தை-19


கடந்தவாரம் மஹாசிவராத்திரி குறித்துப் பேசும்போது சிவதாண்டவம் பற்றி சொன்னீர்கள். இதுபற்றி மேலும் விளக்கமாகக் கூற முடியுமா?


From a Homa, at Bala peetham

தாண்டவத்திற்கு இரண்டு வகையான வெளிப்பாடுகள் உண்டு. ஒன்று உள்நிலையிலான தாண்டவம். இன்னொன்று வெளிநிலையிலான
தாண்டவம். பரதநாட்டியம், கதக் போன்ற எண்ணற்ற நாட்டிய வகைகள்
வெளிநிலை வெளிப்பாடுகள் கொண்டவை.உள்நிலை தாண்டவம் பற்றி
மட்டும் இப்போது பார்க்கலாம்.

வாழ்க்கை என்பதே ஒரு நடனம்தான். உங்கள் உள்நிலையில் ஒலிக்கும் விதம்விதமான தாளங்களுக்கேற்ப இந்த நடனம் நிகழ்கிறது. உள்ளே ஒலிக்கும் இந்தத் தாளங்கள்  ஒவ்வொருவருக்குள்ளும் விதம்விதமான நடனங்களை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. சிலசமயங்களில் அந்த நடனம் அற்புதமாக இருக்கிறது. சில சமயங்களிலோ கோணல் மாணலாக நிகழ்கிறது. உள்ளே நிகழும் எண்ண ஓட்டங்களும்,எண்ண ஓட்டங்களில் நிகழும் மாற்றங்களுமே அந்த நடனங்களின் இயல்பைத் தீர்மானிக்கின்றன. 

 அதேபோல, வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் மாற்றங்களே இந்த உள்நிலை நடனத்தின் போக்கைத் தீர்மானிக்கின்றன. அந்த நடனம் துரித கதியில் நிகழ்வதும், மந்தமாக நிகழ்வதும், வாழ்வின் வெவ்வேறு சூழல்களுக்கேற்ப நிகழ்வதால்,அதில் எத்தனையோ வித்தியாசங்களும் ஏற்றத் தாழ்வுகளும் வருகின்றன.ஒருவர் தன்னுடைய உள்தன்மையில் சமநிலையை நெருங்கும் போதெல்லாம், அந்த நடனத்தில் சமநிலை ஏற்படுகிறது. சிவனின் நடனம் ஆனந்த நடனம். இந்தப் பிரபஞ்சத்துக்கான பூரணமான ஆனந்ததாண்டவம். ஒருவர் அந்த முழுமையான நிலையை நோக்கி முதிரவும் மலரவும் வேண்டும்.

 உள்நிலை தாளங்கள் பற்றிப் பேசும்போது அவற்றிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று தீவிரமான உணர்வுகளின் அடிப்படையிலான ஆண்தன்மை கொண்டது. இதனை உக்ரதாண்டவம் அல்லது ருத்ரதாண்டவம் என்கிறோம். இன்னொன்று பெண்மையின் அம்சங்களாகிய மென்மை,தாய்மை,அன்பு பரிவு ஆகியவற்றின் வெளிப்பாடு. இதற்கு லாஸ்யம் என்று பெயர்.யோக மரபில் பெண்தன்மையை இடகலை என்றும் ஆண்தன்மையை பிங்கலை என்றும் குறிக்கிறோம். இந்த இருவேறு சக்திநிலைகளின் சங்கமமே ஒவ்வோர் உயிருக்குள்ளும் நிகழும் மூல நடனம்.

மஹாசிவராத்திரியன்று இந்த இரு சக்திகளும் சங்கமமானதைக் குறிக்கவே சிவனும் சக்தியும் திருமணத்திற்குப் பிறகு ஆனந்ததாண்டவம் ஆடியதாக சொல்லப்படுகிறது.தன்னுடைய உள்நிலையில் ஒலிக்கும் தாளத்தின் தன்மையை உணர்ந்து கொண்டால், தங்கள்சக்தி நிலையிலேயே சிவசக்தி ஐக்கியத்தின் தாண்டவம் நிகழ்வதை  ஒவ்வொருவரும் உணரலாம்.