Monday 5 June 2017

Are you in search of Peace of mind ?


What is peace of mind?

Life is a harmony. When everything is in harmony it creates a magical music. 
If that is not tuned right, the harmony is not heard and so is life.

The beauty of life is,
It is very simple to live with all its complexities, 
only if you know how to operate and when to synchronize with harmony. 
Only if you know to mute your ego, or operate it with awareness.

The complexities which I am talking here are not external. Be it the beauty of life or the ugly, they are from within.

When you are not happy, or not in peace, it becomes an obvious blame either on something or someone.  But, how can someone or something can create pain and pleasure unless your own mind perceives the same way?
You must comprehend that all the convolutions of your life are within the self which you see as life.
So, to find solace and peace in life, you must find peace within yourself.




What is peace? Ask people 

Many has their own assumptions and definitions for peace.
One might say, constructing a multi-storey building is his peace.
Another might say winning in a society finds him peace.
For some, finding a soul mate is peace. For others, good food every day is peace.

At some point, everyone tries to find peace one way or another.  Some likes to reach the desire to find peace. If you know, reaching desire is, in a way getting rid of it. Desire federates mind very differently. Desire axis through karma.
As the karma gets strong so be the desire.
Hence is the struggle many faces to reach their desires either to feel complete or get rid of desire to move on. This is how Desire works.

Life is always about reaching and let go, until we know what is peace. Until we find the real peace, the pattern is followed. 
Finding harmony within the self is a path to find solace. The body, mind-intellect emotions and the heart centre senses these where one must tune to find his harmony of life.
Mind-Body relationship is like a profound lover bond, so real yet an illusion. One must be mindful about its reality and the illusion as well.

In the real world, body is an instrument but it must be maintained to understand and work on your life, and karma. Body cannot be rejected so easily. Rejection happens out of ego. Acceptance happens out of wisdom. So, respecting the body is vital.

Mind is the very complex instrument of a human. Everything is attuned according to mind. All that the body goes through is because of mind. Even a small ailment in the body is nothing but the pain and suffering of the mind which is manifested in the body in a certain way.

Hence one must understand his own mind which is very much like understanding an ocean.

Is it easy to understand the massive ocean?
No. But you can accept the limitlessness of an ocean which is very much like your mind. You must accept the mind and detach yourself from it. It is one of the many ways you can see how the mind works.

How do you detach? 
Few minutes of meditation can help you get a glimpse of what I am saying.

  1. Pull up a mat. 
  2. Do some basic yoga stretches. Observe your breath as you inhale deeply and chant AUM while exhale.
  3. If your exhalation limit is 6 sec, then A..U.. can be chanted for the first 3 seconds and M alone for the next 3 seconds.
  4. Repeat the steps 2 & 3 for 5 mins.  Observe. If you have felt that you were out of your mind at least for 2 mins, then that is the glimpse.

When we detach from mind, we detach from thoughts.  Thoughts are the one that keeps you either in past or in future. Being in present brings solace in life.


We will talk more on peace.

தேடிக் கிடைப்பதா அமைதி?


உயிர் வாழ்க்கை என்பதே ஓர் இசைநிகழ்ச்சி போலத்தான்வாத்தியங்களும் வாய்ப்பாட்டும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகும் வேளையில்எல்லாம் மகத்துவமான இசை மலர்கிறது.ஆனால் சுருதி விலகினால் அங்கே ஒத்திசைவு இல்லாமலாகிறதுவாழ்க்கை கூட அப்படித்தான்.
 
வாழ்வின் அழகிய அம்சமே அதன் விதம் விதமான முரண்களுடன் எளிதில் வாழ்ந்து விட முடியும் என்பதுதான்.ஆனால்உங்கள்முரண்களுக்கிடையிலான ஒத்திசைவை உருவாக்க உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.உங்கள் அகங்காரத்தை மௌனமாக்கத்தெரிந்திருக்க வேண்டும்.அல்லது அதனை விழிப்புணர்வுடன் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
 
இங்கே நான் குறிப்பிடும் முரண்கள் புறவயமான முரண்களல்லவாழ்வின் அழகானாலும் சரி ஆபாசமானாலும் சரிஅவை உள்ளிருந்தேவெளிப்படுகின்றன.
 
நீங்கள் மகிழ்ச்சியை இழக்கும் போதோ அமைதியை இழக்கும்போதோ அதற்கான பழியை யார் மீதோ அல்லது எதன்மீதோ போடுகிறீர்கள்ஆனால் உங்கள் மனமும் அதே தன்மையில் உணராதவரை மற்றவர்களால் உங்களுக்குள் வலியையோ மகிழ்வையோ உருவாக்க முடியாது.
 
உங்கள் வாழ்வில் வரும் எல்லா ஏற்றத் தாழ்வுகளுமே,உங்களுக்குள்தான் நிகழ்கின்றனஅவை வாழ்வில் நிகழ்வதாய் நீங்கள்நினைக்கிறீர்கள்.
 
எனவே,வாழ்வில் நீங்கள் அமைதியைத் தேடினாலும் ஆறுதலைத் தேடினாலும் உங்களுக்குள்தான் தேட வேண்டும்.
 
மனிதர்கள் எதை அமைதியென எண்ணுகிறார்கள்கேட்டால் விதம்விதமான பதில்கள் வரும்.
 
எது அமைதி என்பதற்கு ஒவ்வொருவரும் விதம்விதமான அபிப்பிராயங்களையும் அளவுகோல்களையும் வைத்திருக்கிறார்கள்.



 
சிலரைப் பொறுத்தவரை பலமாடிக் கட்டிடங்களை எழுப்புவது அவர்களுக்கு அமைதி தரும்.சிலருக்கோ சமூக வாழ்வில் வெற்றி பெறுவதுஅமைதியைத் தரும்.சிலருக்கோ ஓர் உயிர்த்துணைவரைக் கண்டடைவது அமைதியைத் தரும்.சிலருக்கோ தினமும் நல்ல உணவுகிடைத்தால் அதுகூட அமைதியைத் தரும்.
 
எல்லோருமே ஏதோ ஒரு நிலையில் அமைதியைக் கண்டடைய முற்படுகிறார்கள்.சிலர் தங்கள் ஆசையை அடைவதன் மூலம் அமைதியைக்கண்டடைய நினைக்கிறார்கள்.ஆசையை அடைவது கூட அதிலிருந்து விடுபடுவதற்கான வழியே ஆகும்.ஆசையின் சுழற்சி கர்மவினையின்அடிப்படையிலேயே நிகழ்கிறது.கர்மவினை வலிமையாக ஆக ஆசையும் வலிமையாகிறது.
 
மனிதர்கள் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தங்கள் ஆசைகளை அனுபவிக்கும் பொருட்டோ அதனைக் கடந்து செல்லும் பொருட்டோதங்கள் ஆசைகளை அடைகிறார்கள்.இப்படித்தான் ஆசை செயல்படுகிறது.
 
வாழ்க்கை என்பதேஅமைதியை அடையும் வரையில் ஒன்றை அடைந்து விடுவதும் அடைந்ததைக் கடந்துசெல்வதும்தான்.உண்மையிலேயே அமைதியை உணரும் வரை இந்த சுழற்சியையே அனுபவிக்கிறீர்கள்.
 
உள்நிலையில் ஓர் ஒத்திசைவை உணர்வதே அமைதிக்கான வழிஉடல்-மனம்-அறிவு-இருதயத்தி ன் மையப்பகுதி ஆகிய இடங்களிலேயேஒருவர் ஒத்திசைவை உணரமுற்பட வேண்டும்.
 
உடலுக்கும் மனதுக்குமான பிணைப்பு காதலர்கள் இடையிலான பிணைப்பு போன்றதுஉண்மை போல் தோன்றும்ஆனால் அது மாயைஒருவர் அதன் உண்மைத்தன்மை,அதன் மாயைத்தன்மை இரண்டைக் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்.
 
உலக வாழ்வைப் பொறுத்தவரை உடல் என்பது ஒரு கருவியானால் இந்த வாழ்வையும் கர்மவினையையும் புரிந்து கொள்ளவும் அந்தத்தளத்தில் செயலாற்றவும் அதனை பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.உடலை அவ்வளவு எளிதில் நிராகரிக்க இயலாதுநிராகரித்தல்அகங்கரத்தால் நிகழ்வது.ஏற்பதே ஞானத்தால் நிகழ்வதுஎனவே உடலை மதித்தல் மிகவும் முக்கியம்.
 
மனம் என்பது மிகவும் நுட்பமானதொரு கருவி.மனம் செல்லும் வழியில்தான் உடல் செல்கிறது.மனதில் ஏற்படும் பாதிப்புதான் உடலில்பலநேரங்களில் வலியாக வெளிப்படுகிறது.
 
எனவே ஒருவர் தன் மனதைப் புரிந்து கொள்வதென்பது சமுத்திரத்தைப் புரிந்து கொள்ள முயல்வதற்கு ஒப்பாகும்.அவ்வளவு பெரியசமுத்திரத்தைப் புரிந்து கொள்ள முடியுமா என்னமுடியாதுதான்.ஆனால் மனமும் சமுத்திரம்போல் எல்லையற்றதென்பதைப் புரிந்துகொண்டால் போதுமானது.மனதை ஏற்றுக்கொண்டு அதனிடமிருந்து விலகியும் நிற்கப் பழக வேண்டும்.அதுதான்உங்கள் மனம் எப்படிசெயல்படுகிறது என்று பார்ப்பதற்கான எத்தனையோ வழிகளில் ஒன்று.
எப்படி விலகி நின்று பார்ப்பது?
 
1. ஒரு விரிப்பில் அமருங்கள்
2. அடிப்படையான சில யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.உங்கள் சுவாசத்தை  உள்ளிழுக்கும் போது அதைக் கவனித்துவெளிவிடும் போது ஓம் உச்சாடனம் மேற்கொள்ளுங்கள்.
3.உங்கள் வெளி சுவாசநேரம்,6 விநாடிகள் என்றால்,முதல் 3 விநாடிகள் .... உச்சாடனத்திற்கும் அடுத்தவிநாடிகள் ம்உச்சாடனத்திற்கும் ஒதுக்குங்கள்.
4. இவற்றை 5 நிமிடங்களுக்கு தொடருங்கள் .2 நிமிடங்களுக்கேனும் மனதைக் கடந்து இருந்தீர்களேயானால் ஏதோ ஒன்றுபுலப்பட்டதாக;ப் பொருள்.
 
மனதிலிருந்து விலகி நிற்கையில் எண்ணங்களில் இருந்தும் விலகி நிற்கிறீர்கள்எண்ணங்கள்தான் உங்களை கடந்த காலத்திலோஎதிர்காலத்திலோ வைத்திருப்பவை.நிகழ்கணத்தில் நிற்பதே அமைதியையும் ஆறுதலையும் தரும்.
 
அமைதி குறித்து மேலும் பேசுவோம்