Thursday 30 May 2013

குருவாரம் குருவார்த்தை-30

வாழ்வில் பல சாதனைகள் செய்பவர்கள் கூட மனநிறைவு கொள்வதில்லை.. இன்னும் என்னவோ செய்ய மீதமிருக்கிறது என்னும் எண்ணம் ஏற்படுகிறது. இது எதனால் வருகிறது?

நீங்கள் சாதனை என்று எதைச் சொல்கிறீர்கள் ? சில ஆசைகள், சில விருப்பங்கள்,சில நோக்கங்கள் ஆகியவற்றை நிறைவேற்றுவதையே சாதனை என்கிறீர்கள். இவை பொருளாதாரம் சார்ந்த இலக்குகளாக இருக்கலாம். அல்லது உணர்ச்சிகள் சார்ந்த இலக்குகளாக இருக்கலாம். இவற்றை வாழ்வின் குறிப்பிட்ட நேரமொன்றில் எட்டியிருக்கலாம். இவை உங்களுக்கு செல்வத்தைத் தரும். பாராட்டையும் புகழ்மொழிகளையும் பெருமைகளையும் பெற்றுத் தரும். இவற்றையெல்லாம் அடைந்து கொஞ்ச காலத்திற்குப் பிறகு இவற்றை நீங்கள் அடைய விரும்பியிருந்தாலும் இவை மட்டுமே உங்கள் இலக்கல்ல என்பதை உணர்கிறீர்கள்.

அப்படியானால் நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்கிற கேள்வியும் அந்தக் கேள்வி சார்ந்த தேடலும் உங்களுக்குள் தொடங்குகிறது. இப்போதுதான் நீங்கள் உங்கள் வாழ்வின் நோக்கத்தை நோக்கி நகரத் தொடங்குகிறீர்கள். தனிப்பட்ட இலக்குகளை எட்டுவது மட்டுமே வாழ்வின் நோக்கமல்ல என்பது உங்களுக்குப் புரிகிறது. ஒரு கட்டத்தில் உங்கள் சாதனைகள் கூட உங்களுக்கு வேடிக்கையாகவும் அர்த்தமற்றதாகவும் தோன்றுகிறது.



இந்தத் தேடல் தீவிரமாகும்போது இந்தத் தேடலே உங்கள் வாழ்வின் நோக்கத்தை நோக்கி உங்களை வழிநடத்தும். பொதுவாக, வாழ்வின் நோக்கம் என்பது உங்களை சக உயிர்களுடன் சம்பந்தப்படுத்தும் போது நீங்கள் கண்டடைவது.உங்கள் இலக்குகளையும் ஆசைகளையும் மையப்படுத்தி நீங்கள் கெயல்படும்போது தன்னலத்துடன் இயங்குகிறீர்கள்.

ஆனால் தன்னலமற்ற தன்மையில் பெரிய இலட்சியத்திற்கோ பொது நோக்கத்திற்கோ நீங்கள் இயங்குகிறபோது,உங்கள் வாழ்வின் நோக்கத்தையே கண்டடைந்ததாக உணர்கிறீர்கள். இப்போது உங்கள் வாழ்க்கை உயிர்ப்பு மிக்கதாகத் தோன்றுகிறது.வாழ்வின் நோக்கத்துக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் அர்த்தம் மிக்கதாகவும் ஆனந்தம் மிக்கதாகவும் அமைகிறது.

எனவே உங்கள் இலக்குகளையும் ஆசைகளையும் எட்டிவிட்டு வாழ்வின் அழைப்புக்காகக் காத்திருங்கள்.அதுவே உங்கள் நோக்கத்தை நோக்கி உங்களை வழிநடத்தும்.

ARE PEOPLE BORN JUST TO ACHIEVE ?


Dear Balarishi,
In-spite of so many achievements, most of the people feel something needs to be done more and there is no feel of fulfillment. Why it is so ?

Now what do you mean by achievements ? They are nothing but accomplishments of certain desires, aspirations or ambitions. They may be materialistic or emotional targets which are accomplished in a given point of time. These achievements will give pride, fame, money and words of praise. But after sometime people feel this is what they wanted but this is not the all which they wanted. Something is missing and then they try hard to find the missing link. It only means they are now searching the purpose of their life. Accomplishing personal goals need not be achieving your purpose. Sometimes all the achievements might look funny and meaningless for the achiever himself. 

So when the search continues the search itself will lead you towards the purpose of life. Normally, finding the purpose of life might begin to get shape when you connect with others. Whenever you reach out to other living beings or human beings suddenly you feel now you are working towards the purpose of life. When you work on your ambitions and aspirations you work in  a self centered manner. On the other hand, when you work with a selfless attitude for a bigger cause or a social cause suddenly you feel that you have discovered the purpose of your life. Once you work towards it life becomes so lively and each and every simple step you take towards your purpose unfolds with lots of joy and meaning. So, achieve your goals and await the call of life which will guide you towards realizing the very purpose of your being.

Friday 24 May 2013

BEING CHILD LIKE IS A BLESSING


A child is normally compared to God.This is because,a child is very true and transparent in everything. It is an embodiment of playfulness,freedom and love.It has no much of self identity or ego.A child lives in the present moment. He does not have future plans or a mindset to worry for the past. Its expression is so transparent that it cannot think one thing and say something else.Mainly it has no hidden agendas.Even while crying it is so intense and true.Later on it again settles back to its own nature in a very normal way.
 
But what happens when a child grows up?Now it has loads of identity to carry.Identity given by home,given by education all occupies 90% of its mental space and sometimes even more.The child did not carry all these identities earlier and so its feelings were so genuine and beautiful.The human adapts so many things from outside.Some are good and some or bad.Some feelings are very essential,whereas some just boosts up the ego.
 
Whenever social status and other kinds of status are gathered,they come with certain pressures and problems. Such identities distance you away from your originality and gives a made up appearance. Love and compassion are always predominant aspects in any human being.But due to the external influences on your own self,you are now denied to see your  basic nature.
 

Your inner self says you to give others,help others and love others.But the learning you got from the society asks you why should you give?Why should you help? It misguides you that compassion and love in you are meant only for your family.
 
This is the major struggle of human beings.Their inner nature is an embodiment of love and purity but the layers of wrong learning have made them forget their own nature.
 
Other living beings stick to their own instinct.Human mind alone jumps here and there and this is a game of the sixth sense.The sixth sense came as a blessing to human but sometimes that itself becomes a problem.Other living beings are driven by their natural instinct.So they are not monitored or mastered by some other attitudes.
 
But human beings still have a choice.Using their sixth sense they can either master selfishness or master love. beings need to use the great tool called awareness to go beyond the social identities and other such identities instead of just clinging to them.
 
So you need to practice  to use your awareness to be a path towards happiness,towards laughter and giggling and towards whatever a child will do. Practice to be in tune with your inner self and disconnect from your false identities.If you practice this for a whole day you will know what is peace.
 
So smile without any intentions,Love without measuring,Play like a child and give just for the sake of giving.
When you go beyond your ego and see from there you will be able to see how beautiful this life is !!

Thursday 23 May 2013

குருவாரம் குருவார்த்தை-29



குழந்தையைப் பெரும்பாலும் கடவுளுடன் ஒப்பிடுவார்கள். இது ஏனென்றால் குழந்தையின் எல்லாச் செய்கைகளுமே மிகவும் வெளிப்படையாய் இருக்கின்றன. நேர்மை, விளையாட்டுத்தனம், அன்பு, சந்தோஷம் ஆகியவற்றின் வடிவமாகவே ஒரு குழந்தை திகழ்கிறது. அதற்கு சுய அடையாளமோ அகங்காரமோ பெரிதாக
இல்லை. எண்ணிக் கிடக்க எதிர்காலத் திட்டங்களோ ஏங்கியழ கடந்த காலம் குறித்த கவலைகளோ இல்லை.

அது நிகழும் கணத்தை முழுமையாக உள்வாங்கி அனுபவிக்கிறது. உள்ளே ஒன்றை நினைத்துக் கொண்டு  வெளியே வேறுவிதமாக செயல்பட குழந்தைக்கு ஒருபோதும் தெரியாது. குழந்தைக்கு மறைமுகத் திட்டங்கள் ஏதுமில்லை. அழும்போது கூட வெளிப்படையாக அழுகிறது. பின்னர் தன் இயல்புநிலைக்குத் திரும்புகிறது. 

இதே குழந்தை வளர்ந்து வரும்போது என்ன நடக்கிறது?சமூகம் கொடுத்த சுய அடையாளம், குடும்பம் கொடுத்த சுய அடையாளம்,கல்வி கொடுத்த சுய அடையாளம் ஆகியவை குழந்தையின் மனப்பாங்கில் 90%ம் அதற்கு அதிகமாகவும் ஆக்ரமித்துக் கொள்கிறது. இந்த அடையாளங்கள் ஏதுமில்லாத குழந்தைப்பருவம் அத்தனை அற்புதமாய் இருந்தது. ஆனால்வளர்ந்த பிறகு,வெளியிலிருந்து அந்த மனிதர் எத்தனையோ விஷயங்களை உள்வாங்கிக் கொள்கிறார். சில விஷயங்கள் நல்லவையாக இருக்கின்றன. சில விஷயங்கள் வேண்டாதவையாக இருக்கின்றன. சில தன்மைகள் மிகவும் அவசியமானவையாய் இருக்கின்றன. சிலவோ வெறுமனே அகங்காரத்தை வளர்த்து விடுகின்றன.

சமூக அடையாளங்களையும் பிற அடையாளங்களையும் நீங்கள் சேகரிக்கத் தொடங்கும்போது, அவை சில அழுத்தங்களையும் சிக்கல்களையும் கூடவே கொண்டு வருகின்றன. அவை உங்கள் இயல்பான தன்மையிலிருந்து உங்களைத் தள்ளிவைத்து, இல்லாத ஒரு தன்மையை உங்களுக்குக் கற்பிக்கின்றன. அன்பும் பரிவும் எப்போதுமே மனித மனத்தின் முக்கியமான தன்மைகளாக இருந்து வந்துள்ளன. ஆனால் உங்களிடம் வெளிப்புற பாதிப்புகள் ஏற்படுகிற காரணத்தால், உங்கள் இயல்பான தன்மையே உங்களிடமிருந்து மறைக்கப்பட்டு விட்டது.

உங்களுக்குள் இருக்கிற மனிதத்தன்மை, ஏழைகளுக்குத் தருமாறும் எல்லோரையும் நேசிக்குமாறும் உங்களுக்குச் சொல்கிறது. ஆனால் இந்த சமூகத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட விஷயங்களோ, ஏன் கொடுக்க வேண்டும்? ஏன் நேசிக்க வேண்டும்? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறது. எனவே உள்நிலையில் அன்பும் மனிதநேயமும் தூய்மையாகத் திகழ,சமூகத்தின் தவறான கற்பிதங்கள் பாளம் பாளமாகப் படிந்து  நீங்கள் யாரென்பதையே இந்த உலகம் மறக்கச் செய்து விடுகிறது.

மற்ற உயிரினங்கள் தங்கள் உள்நிலை உந்துதலின்படி வாழ்கின்றன. மனிதமனம்தான் அங்குமிங்கும் அலைபாய்ந்து தடுமாறுகிறது. மனிதனுக்கு ஆறாம் அறிவு ஒரு வரமாக வழங்கப்பட்டிருந்தாலும் சில நேரங்களில் அதுவே சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மற்ற உயிரினங்களை அவற்றின் உந்துதல்களே வழிநடத்துவதால் அவை சமூகத்திலிருந்து கூடுதலாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் மனிதர்களுக்கு தேர்வு செய்யும் உரிமை என்றும் உண்டு. ஆறாம் அரிவைப் பயன்படுத்தி அவர்கள் சுயநலத்தை வளர்த்துக் கொள்ளலாம், அல்லது அன்பை வளர்த்துக் கொள்ளலாம். விழிப்புணர்வு என்னும் மகத்தான கருவியைப் பயன்படுத்தி, மனிதர்கள் சமூக அடையாளங்களைக் கடந்து போக வேண்டுமே தவிர, அவற்றையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது.

எனவே உங்கள் விழிப்புணர்வை ஆனந்தத்தை நோக்கிய பாதையாகவும், சிரிப்புக்கும் நகைப்புக்குமான பாதையாகவும் குழந்தை எதையெல்லாம் செய்யுமோ அதையெல்லாம் செய்வதற்கான தூண்டுகோலாகவும் பயன்படுத்துங்கள். உங்கள் உள்தன்மையுடன் தொடர்பிலிருங்கள். உங்கள் போலித்தனமான அடையாளங்களிலிருந்து உங்களைத் துண்டித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு முழுநாள் பயிற்சியாக மேற்கொண்டால், அமைதியென்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும்.

எனவே எவ்வித உள்நோக்கமுமில்லாமல் புன்னகையுங்கள். எதிர்பார்ப்பில்லாமல் நேசியுங்கள். கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சிக்காகவே கொடுங்கள். உங்கள் அகங்காரத்தைக் கடந்து சென்று, அங்கே நின்று பார்த்தால் இந்த வாழ்க்கை எத்தனை அழகானதென்று உங்களுக்குத் தெரியும்

Wednesday 15 May 2013

DOES GOD KNOW ALL LANGUAGES?

Dear Balarishi? How does our prayers reach God?
You may stand before Lord Ganesha and pray in Tamil.Some may pray in English.One may pray in spanish,the other in german and yet another in japanese.Lord Ganesha accepts those prayers and gives his grace.Now,some may ask whether God knows all languages.In that case,if a person learns all languages,can he become God?Muruga is known as God of Tamil.If an African prays to muruga he too finds peace. Here what is happening between Aarumugan and African? This is not about in which language you pray.
Naadham is the base of all languages.naadham is the life force of all sounds.So what matters is the vibrations in a language and the intensity in your prayers.
If a foreigner sits before the jeeva samaadhi of a saint he too finds peace.He gets answer for all questions.This clearly indicates that God  or the saint do not use language as a medium of communication.
You are able to understand even the silence of certain people.have you ever thought how is this possible?Silence also has its own vibrations.Each life has a laya reverbrating into it.All vibrations belong to that laya.For an understanding to happen beyond language and in peak of silence this laya is very important. This laya provides the path of Naadha Yoga.
The purity in prayer and its vibrations are more important. A very obvious example of this laya is your heartbeat.
.

குருவாரம் குருவார்த்தை​-28

பாலரிஷி அவர்களே! கடவுளிடம் நம் பிரார்த்தனை எப்படி சென்று சேர்கிறது?

பிள்ளையார் முன்பு நின்று நீங்கள் தமிழில் வேண்டலாம்.ஒருவர் ஆங்கிலத்தில் வேண்டலாம்.ஒருவர் ஸ்பானிஷ் மொழியிலும் இன்னொருவர் ஜெர்மானிய மொழியிலும் மற்றொருவர் ஜப்பானிய 
மொழியிலும்கூட வேண்டலாம்.பிள்ளையார் அந்தப் பிரார்த்தனையை ஏற்று அருள வேண்டியவற்றைஅருள்கிறார்.இதைக்கேள்விப்பட்டு சிலர்,கடவுள் என்றாலே அவருக்கு எல்லா மொழிகளும் தெரியும் போலிருக்கிறது என்று நினைக்கலாம்.அப்படியானால் ஒருவர் எல்லா மொழிகளையும் கற்றுக் கொண்டால் கடவுளாகிவிட முடியுமா என்ன?
தமிழ்க்கடவுள் ஆறுபடையப்பனை ஆப்பிரிக்கர் வழிபட்டால் ஆப்பிரிக்கருக்கும் அமைதி வருகிறது.அப்படியானால் ஆறுபடையப்பருக்கும் ஆப்பிரிக்கருக்கும் நடுவே என்ன நடக்கிறது?
மொழிகளுக்கெல்லாம் மூலமாக இருப்பது நாதம்.அதுதான் ஒலிகள் அனைத்திற்கும்உயிராக இருக்கிறது.அந்த மொழியின் அதிவுகளும்,அந்தப் பிரார்த்தனையில் இருக்கும்உணர்வுகளுமே பிரதானம்.
ஒரு மகானின் ஜீவசமாதியில் அயல்நாட்டவர் அமர்ந்து பிரார்த்தனை செய்கிறார்.அவருக்கு அமைதி கிடைக்கிறது,அவருடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது என்றால் கடவுளோ மகானோ எல்லா மொழிகளையும் புரிந்து கொண்டா பதில் தருகிறார்கள்?
அந்தப் பிரார்த்தனையில் இருக்கும் தூய்மையும் அதிர்வலைகளூமே பிரதான  இடத்தை வகிக்கின்றன.சிலருடைய மௌனம்கூட உங்களுக்குப் புரிகிறதே எப்படி?மௌனத்தில் கூட எத்தனையோ அதிர்வுகள் இருக்கின்றன.ஒவ்வோர் உயிருக்குள்ளும்
ஒரு லயம் ஓடிக்கொண்டேயிருக்கிறது.எல்லா அதிர்வுகளும் அந்த லயம் சார்ந்தவைதான். மொழியைக் கடந்த நிலையிலும் மௌனம் கனிந்த நிலையிலும் ஒரு புரிதல் ஏற்பட இந்த லயமே பிரதானம். இந்த லயம் சார்ந்த உணர்வே நாதயோகத்திற்கான திசையை உணர்த்துகிறது. இந்த லயத்துக்கோர் எளிய உதாரணம் 
இதயத்துடிப்பு.

Thursday 9 May 2013

HUMANITY - NO CONDITIONS TO APPLY


(Sri Balarishi gave a lecture on Humanity in a multiple district leadership conference organized by Lions International on May 4th at Hotel Le Meridian, Coimbatore on MANITHA NEYAM (Humanity).This is the English version of her lecture)


In many places, the concept of humanity arises as a thought and diminishes. In some places, people talk about humanity and leave it there. But the real sense of humanity comes alive only when the thought and the word translate into action.
When a human being loves his fellow human beings, it is called as humanity. When he is loving towards birds, animals and any living beings, that also is called as humanity. This is only to remind that humanity is the responsibility of human beings.

Even animals and birds are capable of showing love, fury and many such emotions. But they act on an instinct but human beings can choose to love out of awareness. Very recently a case history was presented in media where a woman showed extensive love to the cats. As she loved cats she gave shelter for them at her home and pampered them. At a given point of time her house sheltered 81 cats!! Now this was seen as an obsession and a hoarding tendency and that observation could be right. However that woman had intensity in doing this. That intensity with a constructive attitude and mindset is needed today, to enhance humanity.

When you take an overlarge view, some are bestowed with love, care and compassion in abundance. On the other hand certain sections of the world are denied all such tender feelings in total. So there is an imbalance in the society. As there is an economical imbalance, there is also an emotional imbalance. 

Today we see many advertisements which announce attractive offers to certain brands and products. If you take a closer look to those advertisements, there will be a small star. Below the advertisement, the star will have a statement in tiny font, which would read,"Conditions Apply". Humanity will become a commercial transaction if it is subject to conditions. Unconditional acceptance and love can only establish humanity in clear sense and that is the need of the hour. 

One expression of humanity is giving to the needy. Our culture and spirituality encourages giving not because someone is in the need. It is because you need the quality of giving and sharing for your inner cleansing. It is a very important for self purification. Giving without any expectation or any craving for recognition is known as karma yoga.

So many consider their love towards the near and dear as humanity. Some feel being kind to their own pet animals is humanity. This is a very gross and basic level. When it is inclusive to unknown persons it becomes subtle and when you are loving to all living beings unconditionally it becomes subtler and when love becomes your basic nature and quality, it becomes the subtlest. It is important for everyone to reach the subtlest level of humanity !

குருவாரம் குருவார்த்தை-27


(2013 மே மாதம் 4ஆம் நாள் ஸ்ரீ பாலரிஷி விஸ்வசிராசினி அவர்கள்,கோவை லீ மெரீடியன் கலையரங்கில்,பன்னாட்டு அரிமா சங்கம் நிகழ்த்திய அரிமா தலைவர்களுக்கான ஒருங்கிணைந்த மாநாட்டில் "மனிதநேயம்" என்னுந் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அந்த உரையின் சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்)

எத்தனையோ இடங்களில் மனிதநேயம் என்பது ஓர் எண்ணமாக மட்டுமே எழுந்து அந்த அளவிலேயே காணாமல் போய்விடுகிறது.சில இடங்களில் மனித நேயம் குறித்து பலவும் பேசப்பட்டு, வெறும் சொல்லளவிலேயே நின்று விடுகிறது.ஆனால் அந்த எண்ணமும் சொல்லும் எங்கே செயல்வடிவம் பெறுகிறதோ அங்கேதான் மனிதநேயம் முழுமை பெறுகிறது.
மனிதர்கள் சக மனிதர்களிடம் அன்பு செலுத்தும்போதும் அதை மனிதநேயம் என்றுதான் அழைக்கிறோம்.பறவைகளிடமும் விலங்குகளிடமும் சக உயிரினங்களிடமும் அன்பாக இருக்கும் போதும் அதை மனிதநேயம் என்றுதான் அழைக்கிறோம். எனவே மனிதநேயம் என்பதே மனிதகுலத்தின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்பது இதன்மூலம் புலனாகிறது.
அன்பு கோபம் போன்ற பலவிதமான உணர்ச்சிகளை பறவைகளும் விலங்குகளும் கூட
வெளிப்படுத்துகின்றன.அவையெல்லாம் ஓர் உந்துதலின் விளைவாய் வெளிப்படுபவை.
ஆனால் மனிதநேயத்துடன் திகழ வேண்டும் என்ற தீர்மானத்தை உள்நிலை விழிப்புணர்வுடன் வெளிப்படுத்துவது மனிதர்களுக்கே சாத்தியம். சமீபத்தில் ஊடகமொன்றில் ஓர் உண்மைக்கதை வெளியானது. அயல்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், பூனை வளர்ப்பில் அதீத ஆர்வம் கொண்டு செயல்பட்டார். பூனைகள்பால் கொண்ட அளவு கடந்ய்த அன்பால் அவற்றுக்குத் தன் வீட்டில் இடம் கொடுத்து உணவளித்தார். ஒரு நேரத்தில் பார்த்தால் பெரிதும் சிறிதுமாய் அவர் வீட்டில் 81 பூனைகள் வளர்ந்தன. இது ஒருவிதமான மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்று நிபுணர்கள் கருதினாலும் அந்தப் பெண்ணின் செயலில் ஒரு தீவிரம் வெளிப்பட்டது. மனிதநேயத்தை
 பொறுத்தவரை ஆக்கபூர்வமானஅணுகுமுறையுடன் கூடிய தீவிரம்தான் உடனடித் தேவையாக உள்ளது.

பொதுவாகப் பார்த்தால்,சிலருக்கு அன்பும் பரிவும் பராமரிப்பும் அளவின்றிக் கிடைக்கும்
விதமாக அவர்கள் வாழ்க்கை அமைந்திருக்கிறது.சிலருக்கோ அத்தகைய மென்மையான தன்மைகள் எதுவும் கிடைப்பதில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வு சமூகத்தில் நிகழ்வது போலவே மனிதநேயத்திலும் ஏற்றத்தாழ்வான சூழல் நிலவுகிறது. இன்று பல விளம்பரங்களில் சில தயாரிப்புகளை வாங்கினால் வசீகரமான சலுகைகள் வழங்கப்படுமென அறிவிக்கிறார்கள். ஆனால் அந்த அறிவிப்பின் அருகிலேயே ஒரு நட்சத்திரக் குறி இருக்கும். விளம்பரத்தின் கீழ்ப்பகுதியில் பார்த்தால் "நிபந்தனைகளுக்கு உட்பட்டது"என்னும் சிறுகுறிப்பு இருக்கும். அதுபோல் மனிதநேயமும் ஒரு வர்த்தக செயல்பாடாகக் கருதப்பட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக ஆகிவிட்டது.நிபந்தனை இன்றி ஏற்கும் தன்மையும் அன்புகாட்டும் தன்மையுமே மனிதநேயத்தை நிலைநிறுத்த வல்லவை. இப்போதைய உடனடித் தேவையும் அதுதான். 

இல்லாதவர்களுக்கு உதவுவது என்பதும் மனிதநேயத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று.
இதில் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.யாரோ ஒருவருக்கு ஏதோ ஒன்று தேவைப்படுவதால் மட்டும்நீங்கள் கொடுப்பதில்லை. அவருக்கும் கொடுப்பதன் மூலம்
உள்நிலைத் தூய்மைக்கு வழிவகுத்துக் கொள்ளும் தேவை உங்களுக்கும் இருக்கிறது.
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், ஈகை புரிந்ததற்கான அங்கீகாரத்தையோ பாராட்டையோ எதிர்பாராமல் கொடுக்கிற இயல்புதான் மனிதநேயத்தின் உண்மையான வெளிப்பாடு. இது   கர்மயோகமாகவே கருதப்படக்கூடியது.




பலரும் தங்களிடம் நெருக்கமாக இருப்பவர்களிடம் அன்பாக இருப்பதைத்தான் மனிதநேயம் என்று கருதுகிறார்கள்.இன்னும் பலரோ தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளிடம் அன்பாக இருப்பதை மனிதநேயம் என்று கருதுகிறார்கள். இவையெல்லாம் மனிதநேயத்தின் மிகவும் மேலோட்டமான அம்சங்கள். முன்பின் தெரியாதவர்களையும் மனிதநேயத்துடன் நடத்தும்போது அந்த அன்பு நுட்பமான நிலையை அடைகிறது. அனைத்து உயிரினங்களையும் நீங்கள் மனிதநேயத்துடன் அணுகும்போது அந்த அன்பு அதிநுட்பமான தன்மையை அடைகிறது.
அன்பு செலுத்துவதும் மனிதநேயத்தை வெளிப்படுத்துவதும் உங்கள் செயலாக மட்டும் இல்லாமல் அதுவே உங்கள் உயிர்த்தன்மையாக ஆகும்போது மனிதநேயம் அதிசூட்சுமமான தன்மையை அடைகிறது. ஒவ்வொருவரும் தங்கள் உள்நிலையில்
அத்தகைய நிலையை அடைவதே மிகவும் முக்கியம்.

Thursday 2 May 2013

குருவாரம் குருவார்த்தை-26

ஆன்மீகத்தின் வெளிப்பாடு பல நேரம் கவிதைகளாகவும் மலரும். பாலரிஷி அவர்களின் அழகிய கவிதையை இந்த வாரம் வெளியிடுவதில் மகிழ்கிறோம்.


வேஷத்திலிருந்து ஈசனுக்கு

வேஷம் அது அப்பட்டமோ?

ஊறிய அனுபவம் வேஷத்தின் வழியே:

அது அப்பட்டமான உண்மை

அடிபடாமல் புரிவதில்லை.
அனுபவம் பெற நாம் உடுத்தும் உடை வேஷம்.
வேஷம் என்றறிய வெவ்வேறு வேஷத்தில்
பொருத்திப் பொருத்தித் தாவுகிற மனம்:
வேஷம் தொலைக்க வேஷம் இட்டு இட்டு

உண்மையைத் தேடும் உயிர்;
இந்த வேஷத்தில் ஒரு நிஜம் இருக்கிறது.

அந்த நிஜம் அறியவே வெளிவேஷம்.

அந்த நிஜம் புரியவே பல வேஷம்.
வேஷம் அதன் எல்லையில் நிற்க,

உந்தும் உயிர் உந்தி உந்தி

திறந்தது  சிவானந்தம்

ஹர ஹர ஓம்

From Disguise to Divinity


Poetry is yet another expression of Divinity.We take immense pleasure in sharing the
translation of a beautiful poem by Sri Balarishi.
From Disguise to Divinity
Disguise is obvious.
With a well versed experience
Without being jolted
Its true sense cannot be realized.
All disguises are made up to taste that experience.
Mind gets into so many disguises just
to discover it is a disguise.

The soul gets into disguises 
Just to do away with disguises ..
in search of truth.
There is a truth in the disguise.
Outward make ups are only to realize that truth.
Various make ups are only to realize that single truth.
As disguise stays at its boundary,
upsurging soul upsurged on and on.
Then opened up SHIVANANDHA
Hara Hara Om