Wednesday 31 July 2013

குருவாரம் குருவார்த்தை -38

சுவாசம்


 (பாலரிஷி எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்)

சுவாசம்... மனதுக்கும் விழிப்புணர்வுக்கும் பாலம் அமைக்கிறது
சுவாசம்... பாதையை வெளிப்படுத்துகிறது..மனதிலும் எண்ணங்களிலும்
இருக்கும் மடிப்புகளை சீராக்குகிறது
.
 

சுவாசம்.. சுட்டெரியும் ஆசையை சுட்டெரிக்கிறது,
உள்ளிருக்கும் சாரத்தைக் கண்டறியும் பொருட்டு கடைகிறது
 

சுவாசத்தின் சுவாசமே உண்மையும் ஞானமும்
சுவாசத்தின் சுவாசம் சிலருக்கோ ஒருமை
விழிப்புணர்வுள்ள சுவாசமே விடை.! அதுவே திறவுகோல்!
விழிப்புணர்வுள்ள சுவாசமே நாடகத்தை அர்த்தப்படுத்துகிறது.
 
 

சுவாசத்தின் சுவாசமே ஞானத்தின் கனல்.
சுவாசத்தின் சுவாசமே ஆனந்தத்தின் பாதை
பிராணசக்தியின் சுவாசமே தாண்டவ தாளம்
 

தாண்டவ தாளம்...தாண்டவ தாளம்..
உதயமாகையில் ...ஓங்கியெழுகையில்..
அதுவே உள்நிலை ஆனந்தத்தின் உயிர்சுவாசம்
 

 

THE BREATH AND BLISS



Sri Balarishi’s poem on THE BREATH AND BLISS


The breath bridges the mind with awareness .
The breath unfolds the path .. unfolds the folds  of mind and thoughts .
The breath burns the burning desire ; churns to discover the inner essence .
The breath of breath is that truth and knowledge .
The breath of breath is ONENESS for few

The breath with awareness is the answer ; is the key .

The breath with awareness makes the drama meaningful
The breath of breath is the fire of knowledge
The breath of breath is the path of bliss.
The breath of the life force (prana) is the dancingbeat.
The dancing beats .. the dancing beats
Rising .. raising…
O.. The breath of inner bliss
.

Thursday 25 July 2013

GURU BHAKTHI

Dear Balarishi,
Guru bhakthi is considered to be a very important aspect for a seeker. Can you elaborate on this ?
 
In any given point of time many people would have thought you certain things and would have guided you on certain issues. They are your teachers or guides and they deserve your respects and regards every time. But a Guru is someone above all these. The very word GURU means the one who eradicates ignorance and provides the light of knowledge. Inwardly you have so many search and questions. Once you meet your Guru, you will realize that your Guru is the one who is going to answer all your questions and will be guiding you in the path you are supposed to walk.   
 
 
The blessings of a Guru is so auspicious that it can relieve you from so many hurdles in life. This can be realized by seeing the difference between the lives of those who have a Guru and those who don't have a Guru. The life of those without a Guru will be dependent on so many aspects. For instance they will need the guidance of astrology. They will be totally controlled by karmic structure. It is not so with those who have a Guru. The grace of the Guru will help you out from above said entanglements. Similarly, ego level is the one which isolates you from your Guru. In the presence of your Guru you will see your ego level dropping and you will be comfortable with it. It is the place where you willfully let go your ego and in turn enjoy tremendous clarity and peace.

When you become an instrument for your Guru`s thoughts and mission you can know that you have been showered with the anugraha of your Guru. The shraddha and commitment you have in taking them further will make you a complete instrument in your Guru`s hand. The tremendous transformation which descends in your inner level is the greatest bliss you get through Guru bhakthi.

குருவாரம் குருவார்த்தை-37

 
ஆத்ம சாதகருக்கு குருபக்தி மிகவும் இன்றியமையாதது என்கிறார்கள். இதுகுறித்து தாங்கள் விவரிக்க முடியுமா?

வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் பலரும் உங்களுக்கு எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருப்பார்கள். முக்கியமான நிலைகளில் வழிகாட்டியிருப்பார்கள். இவர்கள் உங்கள் ஆசிரியர்கள், வழிகாட்டிகள். எப்போதும் உங்கள் மதிப்புக்கும் நன்றிக்கும் உரியவர்கள். ஆனால் இந்த நிலைகளையும் கடந்தவர் குரு. குரு என்ற சொல்லுக்கே அறியாமை இருளைப் போக்கி ஞான வெளிச்சத்தைத் தருபவர் என்றுதான் பொருள். உங்களுக்கு உள்நிலையில் எவ்வளவோ கேள்விகளும் தேடல்களும் இருக்கலாம். ஆனால் முதன்முதலாக உங்கள் குருவை சந்தித்த மாத்திரத்தில் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் தேடல்களுக்கும் பதிலளிக்கப் போகிறவர் அவர்தான் என்பது புலப்படும். உங்களுக்குரிய பாதை எதுவோ அதில் உங்களை வழிநடத்தப் போகிறவரும் அவரே.

குருவின் அருள் மிகவும் மங்கலகரமானது.ஏனெனில் உங்கள் வாழ்வில் ஏற்படும் எத்தனையோ தடைகளை அது நீக்கவல்லது. இதனை நுட்பமாக உணர வேண்டுமானால் வாழ்வில் தங்களுக்கென்று ஒரு குரு அமையப் பெறாதவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலே புரியும். ஒரு குரு வாய்க்கப் பெறாதவர்கள், எத்தனையோ விஷயங்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக அவர்களுக்கு ஜோதிடத்தின் உதவி தேவைப்படுகிறது. கர்மவினையால் முற்றிலும் வழிநடத்தப்படுகிறார்கள். ஆனால் குருவின் அருள் உங்களை இந்தத் தடைகளிலிருந்தும் தளைகளிலிருந்தும் விடுவிக்கும். அதேபோல ஒருவரை அவருடைய குருவை அண்டவிடாமல் பிரித்து வைத்திருப்பது அவருடைய அகங்காரம்தான். குருவின் முன்னிலையில் உங்கள் அகங்காரம் உடைவதையும் அப்படி உடைவதை நீங்கள் விரும்புவதையும் உணர்வீர்கள். மற்ற இடங்களில் அகங்காரம் சிறிது காயப்பட்டாலும் உங்களால்  பொறுக்க முடியாது. ஆனால் உங்கள் குருவின் முன்னிலையில் நீங்கள் தாமாக முன்வந்து அகங்காரத்தை விட்டுத்தந்து அதன்விளைவாக நிகரற்ற அமைதியையும் தெளிவையும் பெறுவீர்கள்.

எப்போது நீங்கள் உங்கள் குருவின் எண்ணங்களுக்கும் சங்கல்பங்களுக்கும் கருவியாகிறீர்களோ,அப்போது உங்களுக்கு குருவின் அனுக்ரஹம் முழுமையாகக் கிட்டியிருப்பதாகப் பொருள். முழுமையான சிரத்தையோடும்
உறுதியோடும் அவற்றை நீங்கள் மேலெடுத்துச் செல்லும்போது, குருவின் கரங்களில் உங்களை முழுமையான கருவியாக ஒப்புவிக்கிறீர்கள். உள்நிலையில் ஏற்படும் மகத்தான நிலைமாற்றத்தால் உங்களுக்குள் மலரும்
பேரானந்தம் குருபக்தியின் விளைவாக உங்களுக்கு நிகழும் அற்புதம்!

Thursday 18 July 2013

Invitation for Guru poornima 2013

 
We cordially welcome all for the Guru Poornima 2013, celebration at Sri Vishvashirasini Bala Peetham !

Thursday 11 July 2013

குருவாரம் குருவார்த்தை-36



உத்தர்காண்ட்டில் ஏற்பட்ட உயிர்சேதம் உலகையே உலுக்கியிருக்கிறது. இறைநம்பிக்கையுடன் சென்றவர்களுக்கு இந்தகதி ஏன்என்கிற கேள்வி பலருக்கும் எழுகிறது. இதுகுறித்து தங்கள் கருத்து என்ன?

இமயமலை கேதார்நாத் போன்ற இடங்களுக்கான புனித யாத்திரைகள் முன்பெல்லாம் தீவிரமான ஆன்மீகத் தேடல்கொண்ட மிகச்சிலரால் பாதயாத்திரையாக மேற்கொள்ளப்படும். இப்போது சாலை வசதிகள், கட்டமைப்பு வசதிகள் மூலம் இத்தகைய புனிதத் தலங்கள், சுற்றுலாத் தலங்களாகிவிட்டன.

உத்தர்காண்ட் சம்பவம் இருவேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது. ஒன்று இயற்கை சார்ந்த பார்வை.இன்னொன்று,தெய்வீகம் சார்ந்த   பார்வை. இயற்கையை    மாசுபடுத்திவிட்டு,    இயற்கையின்    இருப்பை அலட்சியப்படுத்திவிட்டு எல்லாம் நம் தேடல்போல் நடக்கும்  என்று கருதுவதில் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வோம் என்பதற்கு உத்தர்காண்ட் ஒரு சாட்சி.

இறை நம்பிக்கையுடன் சென்றவர்கள் இறந்துவிட்டார்களே,அவர்கள்மேல்
இறைவனுக்குக் கருணையில்லையா என்று கேட்பவர்கள் ஒருபுறம். அந்தத் தேதியில் அங்கே இருப்பதாக திட்டம்.பயணம் ரத்தாகிவிட்டது.கடவுளுக்கு என்மேல் கருணை அதிகம் என்பவர்கள் மறுபுறம்.இரண்டிலுமே உண்மை இல்லை.நடந்ததொரு விபத்து. அங்கே இறந்தவர்களின் உயிர்நிலை அவர்களின் பிறவி சுழற்சி போன்றவற்றில் கடவுள் நிச்சயம் கருணை காட்டுவார். அதற்காக விபத்திலிருந்து தப்பித்தவர்கள்மேல் மட்டும்தான் கடவுளுக்கு கூடுதல் கருணை என்று நினைப்பது அபத்தம்.
 
பிரளயம் எழுந்தது,உலகின் பெரும்பகுதி அழிந்தது என்றெல்லாம் புராணங்களில் சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
.
இயற்கையை அலட்சியப்படுத்தி அழிவுகளை நிகழ்த்துகிற மனிதன் இயற்கை பதிலுக்கு சின்னதாய் சீறினால் கூட தாங்கிக் கொள்ளத் தகுதியற்றவன். எந்தநேரமும் நிலச்சரிவுகளுக்கான சாத்தியக்கூறுகள் கொண்ட கன்னிநிலப் பகுதிகளை இன்னும் எச்சரிக்கையாகக் கையாண்டு இயற்கைக்கு  உரிய  மரியாதையை மனிதர்கள் தரவேண்டும் என்பதே உத்தர்காண்ட் நமக்கு உணர்த்தும் பாடம்.

IS CALAMITY A CURSE?

 

Dear Balarishi,
The disaster which has happened in Uttarkand  has caused concerned all over the world. People who went there were staunch believers of God. Now many question why such a tragic end happened to them. May we have your views on this? 

Going to sacred places like Himalayas and Kedar was once considered to be a pilgrimage and demanded much commitment. Now, it has been reduced to a picnic spot as infra structure and transport facilities have been increased. The disaster which happened in Uttarkand has two different perspectives. One is based on nature. The other is based on spirituality. When some people neglect the demands and purity of nature and tries to manipulate things to their own convenience, are just fooling themselves. The happening in Uttarkand reveals this fact.

On one side people question why this has happened to devotees who went on a pilgrimage. On the other hand some claim that they were supposed to be there during that time but somehow cancelled the pilgrimage. So God has been extra kind to them. Not these views are unjustified. For all set and done, what has happened is a disaster. An accident is not due to some curse or unkind attitude of God. Infact God will be more caring towards those who left their lives and the calculations of their rebirth and such subtle things would be taken care. But just because someone cancelled their yaatra, it doesn't mean that God has shown some special care towards them.   

We read in scriptures that pralayaa took place and thousands of people lost their lives. This is no imagination. This is the impression we get through these happenings.

Human race is so indifferent towards nature. But even if nature retorts in a small way we are unable to bear it. Himalayan range is a virgin land where landslides are very common. It is important to handle them properly and should show more reverence towards nature. This is the lesson people should learn from this disaster 

Thursday 4 July 2013

குருவாரம் குருவார்த்தை-35

 
 இந்த தேசம் சமயம் மற்றும் கலாச்சார சிதைவுகளைக் கண்டு வருகிறது. மனிதகுலத்திற்கெதிராகவும் மகளிருக்கெதிராகவும் பல சம்பவங்கள் நடக்கின்றன. விளைநிலங்கள் சீரழிக்கப்படுகின்றன. இந்தச் சூழலில் நானோ பிற நல்ல ஆத்மாக்களோ தேசத்தின் நலனுக்காக எப்படி உழைப்பது?
 
-வெங்கட்ராமன்,சென்னை
 

இந்த சமூகத்தில் பல்வேறு சம்பவங்கள்,பல்வேறு காரணங்களால் நிகழ்கின்றன. சமயத்தையும் கலாச்சாரத்தையும் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் அவற்றின் அடிப்படைகள் புரியாமல் அவற்றை சிதைக்கும் முயற்சிகளில் இறங்குகிறார்கள்.அதேபோல பெண்களுக்கெதிரான குற்றங்கள், இன்று வளர்ச்சி என்று கருதப்படும் நவீனயுகத் தீமைகளால் மட்டுமின்றி தமோகுணத்தாலும் நிகழ்கின்றன. விளைநிலங்களின் சீர்குலைவு, மக்களின் சுயநலப்போக்கால் நிகழ்வது. அறியாமையாலும் வாழ்வு குறித்த தெளிவின்மையாலும் இப்படி எத்தனையோ வேண்டாத சம்பவங்கள் சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன.
 
தர்மங்கள் பரிந்துரைத்த வண்ணம் சரியானவற்றையே செய்து, எளிமையான வாழ்வை வாழ்வது இன்று பலருக்கும் சாத்தியமேயில்லாத விஷயமாகிவிட்டது. இந்த கலாச்சாரத்திலும் சமூகத்திலும் இருந்த பல அற்புதமான அம்சங்கள் உருக்குலைந்து போகின்றன. பலருக்கும் அவர்களின் முதன்மையான காதல் பணத்தின்மீதுதான் என்றாகிவிட்டது. செல்வம் சேர்ப்பதற்கே வாழ்வில் முதலிடம் என்கிற நிலை தோன்றி விட்டது. இந்தப் பணத்தை சேர்ப்பதற்காக குழந்தைப்பருவத்திலிருந்தே சுயநல உணர்வும் ஊட்டி வளர்க்கப்பட்டு வருகிறது.
 
அறிவை வளர்க்க வேண்டிய கல்வி கேம்பஸ் இண்டர்வியூவில் முதலிடம் பெறுவதற்கான வழிவகையாகிவிட்டது.இது போன்ற எத்தனையோ முரண்களால் இளைய  தலைமுறை  குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. 
 
அதேநேரம் இப்படியொரு மாயையில் இருக்கிற மனிதர்கள் அந்த  மாயையிலிருந்து  மீண்டு வரவும் காலம் தரப்பட வேண்டும்.பணம் என்பது நிஜம்தான். ஆனால் பணம் ஒன்றே மகிழ்ச்சியையும் அமைதியையும்  தருமென்று  யாரேனும்  கருதினால் அது  மாயை. ஆதிகாலங்களிலிருந்தே இந்த உலகம்  விதம்விதமான  தீமைகளைக்  கண்டு  வந்திருக்கிறது. அந்தத் தீமைக்கெல்லாம் அசுரர்கள் என்றொரு வடிவம் தரப்பட்டது.
 
விஷயம் என்னவென்றால் அப்போதெல்லாம் அசுரர்கள் வாழ அசுரலோகம் என்றோர் இடம் தனியாக இருந்தது. இப்போது அவர்கள் எங்குமிருக்கிறார்கள்,தனியாக அடையாளம்  காண முடியாத அளவு எல்லோருடனும் கலந்திருக்கிறார்கள். தீய விஷயங்களால் சமூகத்தில் ஒருபோதும் அமைதியைத் தர முடியாது. எனவே அது  நீண்டகாலம்  நீடிக்க  முடியாது . ஆனாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற ஆற்றலை அது பெற்றுள்ளது.ஒரு மனிதன் எவ்வளவுதான் தீயவனாக இருந்தாலும்,அவனும் தேடுவது நிம்மதியைத்தான்.அவனுடைய உச்சத்தேடல் அதுதான்.அவன் தேடுகிற முறைகள்  வேண்டுமானால் தவறாக இருக்கலாம்.
 
எனவே,ஒருவகையில் சந்தொஷமும் அமைதியும்தான்  எல்லோருக்குமான விருப்பமாய் இருக்கிறது என்பதால் நீங்கள் அது குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை.புறச்சூழல் எவ்வளவு மோசமாக    இருந்தாலும், நன்மை  தருகிற  காரியங்கள்  நடந்துகொண்டேயிருக்க  வேண்டும்.பரிவு,சேவை,தன்னலமில்லாத உதவி போன்றவற்றுக்கு சமூகத்தில் எப்போதும் இடமிருக்க வேண்டும்.அதர்மத்தின் பாதையில் செல்பவர்கள் சக்தி மிக்கவர்களாகத் தோற்றமளிக்கிறார்கள். உண்மையில் தர்மத்தின் பாதையில் செல்பவர்கள் அவர்களை விட ஆயிரம்  மடங்கு  சக்தி  வாய்ந்தவர்கள்.  ஏனெனில் தர்மம்,அமைதி,நற்பண்புகள் போன்றவையே ஆற்றலுக்கும்  சக்திக்குமான ஊற்றுக்கண்கள்.
 
(பாலரிஷி அவர்களிடம் உங்கள் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன. ombalarishi@gmail.com   எனும் மின்னஞ்சலுக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம்)

GOOD PEOPLE IN A BAD WORLD

Dear Balarishi,

How do I or the other good aathmas in the society work for the welfare of our country which is facing culural, religious demolition, anti humanity activities, harrasment of woman, afforestation of fertile lands and so many?

-Venkatraman,Chennai

Dear Venkatraman.
There are so many things happening in this country due to so many reasons. Cultural and religious demolitions are happening due to misinterpretation about religion and culture. They have got the basics wrong. Similarly harassment of women happens not only due to modern evils which have arisen with all the so called developments but also due to tamasic trend.

Afforestation of forest lands happen due to the selfish attitude of people. There are many more unwanted happenings which are due to ignorance and lack of clarity towards life.
 

Today many find it hard to stick with right activity, as prescribed by dharma and lead a simple life. The beauty of this culture and society are changing for bad. For many people, money is their first love. Wealth has become the top priority. So as to accumulate wealth, selfish attitude is fed into everyone right from childhood.

Studies are meant to impart knowledge but now they are seen as means to equip for campus interview. These trends are so confusing and the present generation is by and large mislead.

At the same time, though people are in illusion they have their own transition time. Money is real. But if someone thinks money alone can give peace and happiness, this thought is an illusion. The world has witnessed adharma in many forms right from the beginning and the physical form given to evilness was known as Asura.

But those days Asuras had a separate place to exist which was known as Asuraloka. But today the asuras are everywhere in the society without any distinctive identity. Negativity can never give a peaceful solution in the society, so it cannot survive for a long time. Even then it has the power to manifest itself. See, however evil a person is, he is in search of peace and clarity. That is what he ultimately seeks but the ways and formulas are wrong.

So you need not worry as peace and harmony are the real priorities for everyone. However worse the external condition is, good things should consistently happen. Service, compassion, selfless help should all find its place in the society. When the people in path of adharma seem to be powerful, peace seekers should be thousand times powerful than them. I am telling this because the thought of dharma, peace and nobility are the greatest sources of power and energy.

So, keep spreading your commitment for peace and compassion. They are infectious!! 

 
(PN: Readers are welcome to send their questions to ombalarishi@gmail.com)