Wednesday 7 November 2012

குருவாரம்- குருவார்த்தை1





கேள்வி:  ஒரு சாதகர் தன் வினைகளைக் கழிக்க குரு எப்படியெல்லாம்உதவுகிறார் ?

பாலரிஷி :

குருமார்கள் தங்கள் வினைகளைக் கழிக்கத்தான் பலவற்றையும்
செய்கிறார்கள் என்பதே பலருக்கும் தெரிவதில்லை. சில இடங்களில்
சீடர்களுக்கு குரு ஏகப்பட்ட வேலைகளைக் கொடுத்துக்
கொண்டேயிருப்பார். சீடருக்கே புரியாது. நாம் ஆன்மீகத்தில் வளர
 இங்கே வந்தோம்,ஆனால் மாடு மாதிரி வேலை செய்ய வேண்டியுள்ளதே என்று நினைப்பார்.

அவரிடம் கர்மயோகம் வழியாக நீக்க வேண்டிய அளவுக்கு கர்மவினைகள்
இருக்கின்றன என்று பொருள். சில ஆண்டுகள் இப்படி வேலை பார்த்த பிறகு அவருக்கு தீவிரமான ஆன்மநிலைப் பயிற்சிகள் தந்தால் அந்தப் பயிற்சி அவருக்கு உடனே பலனளிக்கும்..உள்ளே அடைத்துக் கொண்டிருந்த கர்மவினைகளை அகற்றியதும் அவருக்கு ஆன்மீக நிலை கைகூடுகிறது என்பதுதன் சூட்சுமம். .

அடுத்து "நான் " என்ற அடையாளத்திலிருந்து ஒரு குரு உங்களை
வெகுதூரம் விலக்கிக் கொண்டு வந்து விடுவார். இதனால் நீங்கள் செய்யும்
வேலையை இன்னும் தெளிவுடன் செய்ய முடியும். பலரும் ஒரு குருவை சென்று சேர்ந்தபின் எங்கள் தொழில் வளர்ந்துவிட்டது, விருத்தியடைந்து விட்டது என்று சொல்ல இதுதான் காரணம்.பெரிய அளவில் பற்றில்லாமலும் பதட்டமில்லாமலும் நீங்கள் செயல்படக்கூடிய சமநிலையும் தெளிவும் குரு உங்களுக்குத் தருகிற உன்னதங்கள்.

இந்தத் தெளிவு காரணமாக நீங்கள் செய்யும் பணிகள், மேற்கொள்ளும் உறவுகள் மூலமாக கர்மவினைகளை நீங்கள் பெருக்கிக் கொள்வதில்லை. முன்னர் செய்த அதே வேலையை இப்போதும் செய்வீர்கள்.ஆனால் முற்றிலும் வேறோர் அனுபவத்தை உணர்வீர்கள்.

             

No comments: