Thursday 28 February 2013

குருவாரம் குருவார்த்தை-17

சிலர் பெண்களுக்கு சந்நியாசம் கிடையாது என்கிறார்கள். சிலர் பெண்களுக்கு முக்தி கிடையாது என்கிறார்கள். இவைகுறித்து தாங்கள் சொல்ல விரும்புவது என்ன?


பெண்கள் சக்தியின் அம்சமாகப் பார்க்கப்படுகிறார்கள்.சிவம் என்ற சொல்சிவமும் சக்தியும் இணைந்த நிலையைத்தான் குறிக்கும். ஏனெனில்சக்தியில்லாத சிவம் சவம்.சவத்துடன் சக்தி சேர்கிறபோதே அது சிவம்.சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம் என்று பொருள். சிவம் என்பது ஆண்தன்மை .சக்தி என்பது பெண்தன்மை. இரண்டும் சங்கமான நிலையே பூரணம்.
சக்தி என்ற சொல்லே சக்திநிலையைக் குறிக்கும்.சக்திநிலைக்கு வடிவம் கொடுத்தால் அதுவே பெண்வடிவம். அதனால்தான் பெண் என்பவள் தீவிர சக்தி அதிர்வுகளின் பிறப்பிடமாக இருக்கிறாள்.
அது நேர்மறை சக்தியாகவும் இருக்கலாம்.எதிர்மறை சக்தியாகவும்
இருக்கலாம்.நாம் நேர்மறை சக்தியைப் பற்றி மட்டுமே பேசுவோம்.
பெண்தான் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.பொதுவாகப் பார்த்தால்தாய்மை என்பது ஓர் உணர்வு. எப்படி மகிழ்ச்சி என்பது ஓர் உணர்வோ அதுபோல் தாய்மையும் ஓர் உணர்வுதான்.ஓர் ஆண்கூட தாய்மை உணர்வை அடைய முடியும்.அது மிகவும் அரிது என்பதால் அத்தகைய ஆண்கள் தனித்தன்மையுடன் திகழ்கிறார்கள்.ஆனால் பெண்ணைப் பொறுத்தவரை அவளுடைய இயல்பே தாய்மைதான். ஒரு பெண்ணின் சக்திநிலை சரியாக சீரமைக்கப்பட்டால் அவளுடைய இல்லம் நேர்மறை சக்தியின்  உற்பத்தி நிலையமாகவே திகழும்.
இந்த தேசமும்,ஆண்டாண்டு காலமாய் இந்த தேசம் முன்னெடுத்துச் செல்லும் பண்பாடும் பெண்ணுக்கு மிகவும் உயர்ந்த இடத்தையே தந்து வந்துள்ளது.ஆனால் அதே பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சிலர் தங்கள் உள்நோக்கங்கள் காரணமாய் திரித்துச் சொல்லி சில தவறான புரிதல்களை ஏற்படுத்தி விட்டனர்.
வேதகாலங்களில் பெண்கள் மிகுந்த மரியாதையுடனும் மகத்துவத்துடனும் நடத்தப்பட்டனர்.எல்லாவற்றிலும் அவர்களுக்கு முதலிடமும் முக்கியத்துவமும் தரப்பட்டு வந்தது. அவர்கள் வேதங்களிலும் தந்திர மார்க்கங்களிலும் தலைசிறந்து விளங்கினர்.ஆனால் காலப்போக்கில் பெண்கள் வேத மந்திரங்களை உச்சரிக்கக் கூடாது என்றொரு கட்டுப்பாடு வந்ததுதான் விந்தை,.


 ஒரு காலத்தில் சுயம்வரம் என்னும் முறையில் தன் வாழ்க்கைத்துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கு இருந்தது. அதுமட்டுமல்ல. பெண்ணுக்கு வரக்கூடிய மாதவிடாய் என்பது இயற்கை சுழற்சியில் நிகழும் இயல்பான விஷயம் என்னும் புரிதல் அக்காலங்களில் இருந்தது.எனவே அந்த நாட்களில் அவர்களுக்கு சத்துமிக்க உணவுமுழு ஓய்வுமனரீதியான ஆதரவு அனைத்தும் வழங்கப்பட்டன.காலப்போக்கில் இந்தப் புரிதல் தவறாகத் திரித்துச் சொல்லப்பட்டுஅந்த நாட்களில் பெண்களை தனிமைப்படுத்திஒதுக்கிவைக்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது.
யாரெல்லாம் பெண்கள் சமமாக நடத்தப்படுவதை விரும்பவில்லையோயாருக்கெல்லாம் பெண்கள் கல்வி பயில்வதில் விருப்பமில்லையோஅவர்களெல்லாம் நம் கலாச்சாரத்தில் இருந்த  சமநிலையைக்  குலைத்து  வேண்டாத வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் கொண்டு வந்தனர்.
நான் முன்னரே சொன்னது போல்பெண் என்பவள்  சக்தியின்   வடிவம். சக்தி என்பவள் ஞானத்தின் அடையாளம்.சக்தி என்பவள் வல்லமையின் அடையாளம். சக்தி என்பவள் ஆனந்தத்தின் அடையாளம். சக்தி என்பவள் தாய்மையின் அடையாளம்.சாக்த நெறியைப் பொறுத்தவரை சக்தியை அடைவதே முக்தியை அடைவது.
ஒரு பெண் தன் அன்பையும் கருனையையும் சரியான முறையில் சீரொழுங்கு செய்தால் தியானத்தின் துணை இன்றியே அவள் முக்தியை அடையலாம். ஏனெனில் பெண்மையின் அரிய பண்புகளான அன்பும் கருணையும் அவள் உயிரைத்  தூய்மை செய்து உச்சகட்ட ஆன்ம விடுதலையை அவளுக்கு வழங்க வல்லவை .


No comments: