Wednesday 15 May 2013

குருவாரம் குருவார்த்தை​-28

பாலரிஷி அவர்களே! கடவுளிடம் நம் பிரார்த்தனை எப்படி சென்று சேர்கிறது?

பிள்ளையார் முன்பு நின்று நீங்கள் தமிழில் வேண்டலாம்.ஒருவர் ஆங்கிலத்தில் வேண்டலாம்.ஒருவர் ஸ்பானிஷ் மொழியிலும் இன்னொருவர் ஜெர்மானிய மொழியிலும் மற்றொருவர் ஜப்பானிய 
மொழியிலும்கூட வேண்டலாம்.பிள்ளையார் அந்தப் பிரார்த்தனையை ஏற்று அருள வேண்டியவற்றைஅருள்கிறார்.இதைக்கேள்விப்பட்டு சிலர்,கடவுள் என்றாலே அவருக்கு எல்லா மொழிகளும் தெரியும் போலிருக்கிறது என்று நினைக்கலாம்.அப்படியானால் ஒருவர் எல்லா மொழிகளையும் கற்றுக் கொண்டால் கடவுளாகிவிட முடியுமா என்ன?
தமிழ்க்கடவுள் ஆறுபடையப்பனை ஆப்பிரிக்கர் வழிபட்டால் ஆப்பிரிக்கருக்கும் அமைதி வருகிறது.அப்படியானால் ஆறுபடையப்பருக்கும் ஆப்பிரிக்கருக்கும் நடுவே என்ன நடக்கிறது?
மொழிகளுக்கெல்லாம் மூலமாக இருப்பது நாதம்.அதுதான் ஒலிகள் அனைத்திற்கும்உயிராக இருக்கிறது.அந்த மொழியின் அதிவுகளும்,அந்தப் பிரார்த்தனையில் இருக்கும்உணர்வுகளுமே பிரதானம்.
ஒரு மகானின் ஜீவசமாதியில் அயல்நாட்டவர் அமர்ந்து பிரார்த்தனை செய்கிறார்.அவருக்கு அமைதி கிடைக்கிறது,அவருடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது என்றால் கடவுளோ மகானோ எல்லா மொழிகளையும் புரிந்து கொண்டா பதில் தருகிறார்கள்?
அந்தப் பிரார்த்தனையில் இருக்கும் தூய்மையும் அதிர்வலைகளூமே பிரதான  இடத்தை வகிக்கின்றன.சிலருடைய மௌனம்கூட உங்களுக்குப் புரிகிறதே எப்படி?மௌனத்தில் கூட எத்தனையோ அதிர்வுகள் இருக்கின்றன.ஒவ்வோர் உயிருக்குள்ளும்
ஒரு லயம் ஓடிக்கொண்டேயிருக்கிறது.எல்லா அதிர்வுகளும் அந்த லயம் சார்ந்தவைதான். மொழியைக் கடந்த நிலையிலும் மௌனம் கனிந்த நிலையிலும் ஒரு புரிதல் ஏற்பட இந்த லயமே பிரதானம். இந்த லயம் சார்ந்த உணர்வே நாதயோகத்திற்கான திசையை உணர்த்துகிறது. இந்த லயத்துக்கோர் எளிய உதாரணம் 
இதயத்துடிப்பு.

No comments: