Monday 21 April 2014

சுருளிவனம்




பல்லாயிரம் ஆண்டுகளாய் உள்ள சுருளி வனத்தில் இருப்பதே என்னை மலைப்பிலும் பரவசத்திலும் ஆழ்த்துகிறதுஒரு வனத்தின் முழுமை,முழுநிலவைப்போல் அழகானது.

தான் எத்தனை அழகென்று முழுநிலவுக்குத் தெரியாதல்லவா!வனத்திலிருந்து வெளிப்படும் தெய்வீகப் பேரொளி முழுமை குறித்தெனக்கு பலவும் கற்பித்தது.
உயர்வு தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டிருப்பதால் வனம் எப்போதும் அழகு குறித்தெல்லாம் கவலைப்பட்டதில்லை ,
எங்கே போகிறோம் என்பதைப் பற்றிய கவலையின்றி போகும் பாதைக்கு மட்டும் உண்மையாய் இருந்தபடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது நீரின் பிரவாகம் .

தங்கள் மகிமைகள் குறித்த எவ்வித பிரஸ்தாபமும் இல்லாமல்அரிய வகை மரங்களும்,மிக அரிதான மூலிகைகளும் மலர்ந்து மணக்கின்றன....இதுவே முழுமையின் மகத்துவம்.

பார்வைக்குத் தெரியாத மகத்துவ மூலிகைகள் தங்கள் மணத்தைப் பரப்புகின்றன.அந்த அருள்மணம் வழியே தியானத்தின் அதிர்வுகள் பரவுகின்றன.அவையோ நோய்களும் மனத்தடைகளும் நீங்கிட பெரிதும் உதவுகின்றன.


ஆயிரமாயிரம் இலைகள் உதிர்கின்றன.மூலிகைகளின் சாரமும் மரங்களின் வேர்மணமும் தூய தீர்த்தத்தில் கலந்து பெருகி தெய்வீக வனத்தின் தென்றலிலும் கலந்து வருகின்றன.
!! வனத்திற்குள் இருக்கும் ஆனந்தம்,விவரிக்க இயலாதது.
இயற்கையின் பாஷை புரிபடும் போதெல்லாம்
இருப்பின் ஆனந்தமும் புரிகிறது.

சுருளிமலை-இதுவே இயற்கையின் சாரம்

1 comment:

Unknown said...

Suruli malai oru anatha bhavanam pol l ullathu....suruli aruvi malai saral pol magilchiyai vundakkukirathu...vunmayil nan nalla vaipai nalavavittu vitten yendru manam koorukirathu...adutha andu andavan arul erunthal suruli varuven....