Thursday 24 January 2013

குருவாரம் குருவார்த்தை 12

ஆன்மீகத்தில் தப்பித்தல் மனோபாவம் பற்றி பின்னர் விளக்குவதாக கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தீர்கள். அதுகுறித்து இந்தவாரம் பேசுவோமா ?

  சிலர் தங்கள் இயலாமையை மறைக்க ஆன்மீகத்தைப் பயன்படுத்துவதுண்டு. யாருக்கு தங்கள் மீதோ தங்கள் திறமைகள் மீதோ நம்பிக்கையில்லையோ அவர்கள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதற்காகவே தாங்கள் ஆன்மீகத்தில் இருப்பதாகவும் லௌகீகக் கடமைகளைக் கடந்து விட்டதாகவும் வேடம் போடுவார்கள். அவர்களின் நோக்கங்கள் விரைவில் வெளிப்பட்டுவிடும். அவர்கள் தாங்களும் துன்பப்படுவதோடு பிறருக்கும் துன்பத்தையே தருவார்கள். மூடத்தனத்தில் ஆழ்ந்திருக்கும் சிலரை நம்ப வைத்ததாய் அவர்களால் தற்காலிக சந்தோஷத்தை மட்டுமே பெற முடியும்.



அதேநேரம் சிலர் அன்புமயமானவர்களாகவும் சற்றும் சுயநலமில்லாதவர்களாகவும் இருப்பார்கள். அது அவர்களின் சுபாவமாகவே இருக்கும். அவர்களால் சிறிய எல்லைகளுக்குள் தங்களைக் குறுக்கிக் கொண்டு உலகத் தேவைகளுக்குப் போராட முடியாது. உலகளாவிய பார்வையும் பரிவும் கொண்ட அத்தகைய மனிதர்கள் சராசரி லௌகீக வாழ்விலிருந்து விலகிநின்று மகத்தான விஷயங்களுக்குத் தங்களையே அர்ப்பணித்துக் கொள்வார்கள். இவர்கள் தப்பித்தல் மனோபாவம் கொண்டவர்கள் அல்லர்.

No comments: