Wednesday 26 June 2013

குருவாரம் குருவார்த்தை-34


உங்களின் முந்தைய பிறவி குறித்து நீங்கள் சொல்லியுள்ளீர்கள். ஞானிகள்  மீண்டும் மண்ணுக்கு வருவதற்கும் மனிதர்களின் மறுபிறவிக்கும் வேறுபாடு உண்டா?

கடவுளர்கள் உலகுக்கு வருவது அவதாரம் எனப்படும். ஞானிகள் குறிப்பிட்ட காரணங்களுக்காகவும் சங்கல்பங்களுக்காகவும் மீண்டும் பூமிக்கு வருகிறார்கள். மனிதர்களோ தங்கள் கர்ம நிர்ப்பந்தங்கள் காரணமாக பல பிறவிகள் எடுக்கிறார்கள்.
 


பொதுவாக ஒரு குழந்தைக்கு ஒன்று முதல் ஒன்றரை வயது வரை முந்தைய பிறவி நினைவுகள் இருக்கும் என்று சொல்வார்கள்.  அதன்பிறகு மங்கலாக சில பூர்வஜன்ம நினைவுகள் மனிதர்கள் மனங்களில் மின்னலிட்டுப் போகும்.

ஞானிகள் மீண்டும் பிறப்பெடுக்கும்போது ஏறக்குறைய முந்தைய பாதைக்கு பெருமளவு தொடர்புள்ளதாக இருக்கும்.சில  ஆன்மீக சங்கல்பங்களை நிறைவேற்ற நன்கு திட்டமிட்டது போல் பிறப்பிடமும் பிற சூழல்களும் அமையும். என்னைப் பொறுத்தவரை  வனங்களும் மந்திர உச்சாடனங்களும்  என் கடந்த பிறவிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இன்றளவும் வேத மந்திரங்களை வாசிக்க நேர்ந்தால் அவை எனக்கு மிகவும் பரிச்சயம் மிக்கவையாகத் தோன்றும்.அவை என் கடந்த பிறவிகளில் மிகுந்த தொடர்பு கொண்டவை.

இந்துசமயம் போலவே புத்த சமயத்திலும் ஞானிகள் மீண்டும் மண்ணுக்கு வருவது குறித்து நிரூபிக்கப்பட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன.

No comments: